சினேகன் வீட்டில் விசேஷம்.. வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி கூறிய கன்னிகா.. கையில் கிடைத்த பரிசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை கன்னிகாவின் பிறந்தநாளுக்கு அவருடைய கணவர் கொடுத்த ஸ்பெஷல் கிஃப்ட் பற்றி கன்னிகா வெளியிட்ட பதிவுக்கு இணையத்தில் அதிகமான வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. கடந்த மாதத்தில் சிநேகனின் பிறந்தநாளுக்கு கன்னிகா திடீர் சர்ப்ரைஸ் கொடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து இப்போது சினேகன் கன்னிகாவின் பிறந்தநாளை கிராண்டாக கொண்டாடி இருக்கிறார்.

இடைநிலை ஆசிரியராக பணியாற்றிய சினேகன் கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்து பிறகு புத்தம் புது பூவே திரைப்படத்தின் மூலமாக கவிஞராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து நடிகராகவும் மாறிய சினேகன் 2021 ஆம் ஆண்டு நடிகை கன்னிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்தாலும் இவர்களுடைய காதல் விவகாரம் சினிமா துறையில் வெளியே தெரியாமல் ரகசியமாக காத்து வந்தனர்.

Television Kannika Ravi Snekan

ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சினேகன் அந்த நேரத்தில் தான் ஒரு பெண்ணை காதலித்து வருவது குறித்து பேசியிருந்தார். அப்போதுகூட நடிகை கன்னிகாவை தான் காதலிக்கிறேன் என்பது பற்றி சினேகன் வெளிப்படையாக பேசவில்லை. ஆனால் இணையத்தில் கன்னிகாவை தான் சினேகன் காதலிக்கிறார் என்று கிசுகிசுப்பு எழுந்தது.

கன்னிகா இந்த நேரத்தில் ஒரு சில திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அழகிலும் அறிவிலும் குறை இல்லாத கன்னிகா கதாநாயகியாக வேண்டும் என்று சினேகனும் ஆசைப்பட்ட நிலையில் இவர்களுடைய காதலை வெளி உலகத்திற்கு தெரியாமலேயே மூடி வைத்திருந்தனர். ஆனால் வாய்ப்புகள் தள்ளி போக பிறகு வேறு வழி இல்லாமல் திருமணத்தை செய்து கொண்டனர்.

2021 ஆம் ஆண்டு கமல்ஹாசன் தலைமையில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் காதல் தம்பதிகளாக வலம் வரும் சினேகன் மற்றும் கன்னிகா இருவரும் ஒருவருக்கொருவர் அதிகமாக சப்போர்ட் செய்து வருகிறார்கள். அதுபோல கன்னிகா சமீபத்தில் தான் ஹேர் ஆயில் பிசினஸ் தொடங்கி இருக்கிறார். இந்த நிலையில் நேற்று கன்னிகாவின் பிறந்தநாளை சினேகன் அவருடைய வீட்டிலேயே கொண்டாடி இருக்கிறார்.

வீட்டில் விதவிதமான பலூன்களோடு அலங்காரம் செய்து கேக் மற்றும் மோதிரத்தை பரிசளித்த சினேகன் குறித்து கன்னிகா தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதோடு தன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்ன ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது. ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல திரைப்படங்களும் கன்னிகாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

கன்னிகா சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாண வீடு சீரியல் மூலமாக சின்னத்திரையிலும் நடித்து இருக்கிறார். அதுபோல பாரதிகண்ணம்மா சீரியலில் கன்னிகா மற்றும் சினேகன் இருவருமே கெஸ்ட் ரோலில் கலந்து கொண்டிருந்தனர். அதுமட்டுமல்லாமல் கன்னிகா நடிகையாக மட்டுமல்லாமல் புத்தக எழுத்தாளராக, சமையல் கலைஞர் ஆகவும், சிலம்பாட்ட வீரராகவும், நடன ஆசிரியர் என பன்முகத்தன்மையோடு விளங்கி வருகிறார்.

அதுபோல நீண்ட தலை முடிக்கான அழகி பட்டத்தையும் வென்றிருக்கிறார். சமூக வலைத்தளத்திலும் கன்னிகாவிற்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். அவர்களும் கனிகாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+