பாக்கியலட்சுமி சீரியலில் இனி பாக்கியாவாக நடிகை கஸ்தூரி..? எப்போ இருந்து இந்த மாற்றம் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். டிஆர்பியிலும் முன்னணி இடத்தை பிடித்து இருக்கிறது.

இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் கதாநாயகி பாக்கியா கேரக்டரில் நடிகை சுசித்ரா நடித்து வருகிறார்.

Actress Kasthuri as Baakiya character in Baakiyalakshmi serial

அதே நேரத்தில் இனி பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவாக நடிகை கஸ்தூரி நடிக்க இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவர் எங்கு நடிக்கப் போகிறார் என்பதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு சில சீரியல்கள் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அதில் முதலிடத்தில் பாக்கியலட்சுமி சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியலில் பாக்கியா குடும்ப தலைவியாக இருந்து கொண்டு தன்னுடைய திறமை மற்றும் சுய கௌரவத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக பல போராட்டங்களையும் பிரச்சனைகளையும் தாண்டி இப்போது ஜெயித்துக் கொண்டிருக்கிறார்

வீட்டில் மனைவியாகவும், அம்மாவாகவும், மருமகள்களாகவும் இருக்கும் பெண்கள் பலர் தங்களுடைய வாழ்க்கையில் அனுபவிக்கும் வேதனைகள் மற்றும் பிரச்சனைகளை பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா அனுபவித்து அதிலிருந்து எப்படி மீண்டு வந்தார் என்பது போன்று தான் பாக்கியலட்சுமி சீரியல் இருக்கிறது. இந்த சீரியலில் பாக்கியா அடுத்தடுத்து ஜெயிப்பது பல பெண்களுக்கு உத்வேகம் கொடுக்கும் வகையில் இருக்கிறது.

இந்த நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்திருக்கின்றனர். அதிலும் முதல் முதலாக தமிழ் சீரியலில் அறிமுகமான நடிகை சுசித்ரா பாக்கியாவாகவே ரசிகர்களின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இப்போது தமிழை தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியல் தெலுங்கில் ஒளிபரப்பாகவும் இருக்கிறதாம்.

Actress Kasthuri as Baakiya character in Baakiyalakshmi serial

அதில் கதாநாயகியாக நடிகை கஸ்தூரி நடிக்க இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதுபோல மீதமுள்ள கேரக்டரில் யார் யாரெல்லாம் நடிக்க போகிறார்கள் என்ற விவரங்கள் இன்னும் ஒரு சில நாட்களில் உறுதியாக வெளியாகி விடும் என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் கஸ்தூரிக்கு இந்த பாக்கியா கேரக்டர் நன்றாகவே பொருந்தும் என்று அவருடைய ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.

அதோடு இனி தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நாங்கள் சீரியல் பார்க்க ரெடி என்று சிலர் கூற தான் செய்கிறார்கள். அதுபோல பாக்கியலட்சுமி சீரியல் பல மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் பாக்யா மற்றும் பழனிச்சாமிக்கு கல்யாணம் வரைக்கும் வந்திருக்கிறதாம். ஆனால் பாக்கியலட்சுமி சீரியலில் கதை வேறு விதமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+