ஆணுறுப்பு இருந்தா நீ ஆம்பளையா? அதை அறுத்து வீசணும்.. கொல்கத்தா டாக்டர் கொலையால் கஸ்தூரி ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் கடந்த வாரம் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இந்த கொலை பற்றி நடிகை கஸ்தூரி தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். கஸ்தூரியின் கேள்விகளுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

கொல்கத்தாவில் கடந்த வாரம் அதிகாலையில் 31 வயது பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டது குறித்து பல அரசியல் பிரமுகர்களும், சமூக ஆர்வலர்களும், நடிகை நடிகர்களும் தங்களுடைய ஆதங்கத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தி வருகிறார்கள். இதில் முறையாக விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும், அதுவும் கடுமையான தண்டனையாக இருக்க வேண்டும் என்பதுதான் அனைத்து தரப்பினரின் கருத்தாக இருக்கிறது.

Television Kolkata Kolkata Doctor Case

பயிற்சி மருத்துவர் கொலையை கண்டித்து கொல்கத்தா மற்றும் டெல்லி என பல இடங்களிலும் போராட்டம் நடத்தி வரும் மருத்துவர்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட மறுக்கிறார்கள். இந்த வழக்கில் ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டு இருக்கும் நிலையில் இதில் பலர் சம்பந்தப்பட்டிருக்கலாம் ஒருவர் மட்டும் அந்தப் பெண்ணை அவ்வளவு சித்திரவதை செய்து இருக்க வாய்ப்பு இல்லை என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது.

இறந்த பெண்ணின் உடலில் 150 கிராம் ஆணின் விந்தணு இருந்தது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. அந்தப் பெண் பல போராட்டங்களை இறுதி தருணத்திலும் அனுபவித்து இருக்கிறார். உடலில் பல எலும்புகள் உடைக்கப்பட்டு இருக்கிறது. கண்களில் இருந்து ரத்தம் வந்திருக்கிறது. மூக்கு வாய்களில் இருந்தும் ரத்தம் வெளி வந்திருக்கிறது.

மார்பகங்களில் கடித்து குதறபட்டு இருக்கிறது. இது கேட்கும் எல்லோரையும் கண் கலங்கவும், பதறி போகவும் வைத்திருக்கிறது. இந்த நிலையில் நடிகை கஸ்தூரி தன்னுடைய கோபத்தை கொட்டி இருக்கிறார். அதில் அவர் பேசுகையில், இந்த செய்தி வெளியானதில் இருந்து இதைக் கேட்கும்போது நெஞ்சத்தில் இருந்து ரத்தம் வருகிற மாதிரி இருக்கிறது. நானும் ஒரு பெண்ணாக இருக்கிறேன். எனக்கு ஒரு பெண் இருக்கிறது, பெண் பிள்ளையின் அம்மாவாகவும் என்னுடைய உடம்பெல்லாம் நடுங்குகிறது.

இந்த அளவிற்கு கொடூரம் செய்ய இவர்களுக்கு தைரியம் வருகிறது என்றால் இங்கே கடுமையான தண்டனை இல்லை என்று தானே அர்த்தம். இந்த அளவிற்கு ஒரு பெண்ணை சித்திரவதை செய்வதற்கு ஒரு ஆண் யோசிக்கிறான் என்றால் அவன் ஆணே இல்லை. "ஆணுறுப்பு இருந்தால் மட்டும் அவன் ஆம்பளையாகி விட முடியுமா?" அந்த ஆண் ஒரு பெண்ணை தன்னுடைய இச்சைக்காக கொடூரமாக கொலை செய்து தன்னுடைய இச்சை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று துடிக்கிற அந்த ஆணுறுப்பு அவனுக்கு இருக்கவே கூடாது.

"இந்த மாதிரி தப்பு செய்த ஒருவனுக்கு பல பேர் முன்பு அவனுடைய ஆணுறுப்பு துண்டிக்கப்பட்டு கடுமையாக தண்டனை கொடுக்க வேண்டும்" அதுதான் இந்த பெண்ணிற்கு கிடைக்கும் நீதியாக இருக்கும். அந்த பெண் அந்த கடைசி நிமிடத்தில் எவ்வளவு வலியை அனுபவித்திருக்கும். பல பேருடைய உயிரை காப்பாற்றுவதற்காக தன்னுடைய சந்தோஷங்கள், துக்கங்கள் எல்லாவற்றையும் அந்த பெண் தாங்கிக் கொண்டு மருத்துவம் படித்திருக்கிறது.

தொடர்ந்து 36 மணி நேரம் அந்த பெண்ணுக்கு வேலை கொடுக்கப்பட்டு அந்தப் பெண் ரெஸ்ட் எடுக்க போன ரூமில் இருந்து, இன்னொரு இடத்தில் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதையும் தற்கொலை என்றெல்லாம் நாடகம் நடத்தி இருக்கிறார்கள். நான் எனக்கு தெரிந்த கொல்கத்தாவில் இருப்பவர்களிடம் சிலரிடம் பேசும்போது அங்கு சில செய்திகள் பரவி வருவதாக சொல்கிறார்கள் அதைக் கேட்கும் போது இன்னும் பயம் அதிகரிக்கிறது. இந்த கேஸியில் ஒருவன் மட்டும் சம்மந்தபட்டிருக்க முடியாது.

Television Kolkata Kolkata Doctor Case

அந்தப் பெண்ணின் நடவடிக்கைகளை பல நாட்களாக கண்காணித்து அந்த பெண்ணை இவ்வளவு சித்திரவதை செய்து கொலை செய்து கற்பழித்து இருக்கிறார்கள். அந்தப் பெண் அந்த மருத்துவமனையில் நடக்கும் ரகசியங்களை கண்டுபிடித்து இருக்கிறார். அந்த மருத்துவமனைக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து ஃபண்ட் வருகிறது. அதில் முறைகேடு நடப்பதை இந்த பெண் அறிந்ததை வைத்துதான் இதை இவர் வெளியே சொல்லி விட வேண்டும் என்று சிலருடைய கூட்டு சதியால் இந்த பெண்ணிற்கு இந்த நிலைமை ஆகி இருக்கிறது.

ஆனால் இதை எளிமையாக கடந்து விட முடியாது தமிழ்நாட்டிலும் பல பெண்களுக்கு இதுபோல நிலைமை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு டாக்டருக்கும் பாதுகாப்பு இல்லை, குழந்தைக்கு பாதுகாப்பில்லை, யாருக்கும் பாதுகாப்பு இல்லை... என்று சொல்லும் வகையில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதனால் பொதுவெளியில் இந்த மாதிரி தப்பு செய்தவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.

அதுவும் தன்னுடைய ஆணுறுப்பு இச்சைக்காக அடுத்த உயிரை கொலை செய்கிறவர்களுக்கு அந்த உறுப்பு தேவை இல்லை என்று வெட்டி வீச வேண்டும். அதுதான் தண்டனையாக இருக்கும் என்று தன்னுடைய கருத்தை கோபமாக தெரிவித்து இருக்கும் நிலையில் இதுதான் சரியான தீர்ப்பாக இருக்கும் என்று பல ரசிகர்களும் கஸ்தூரிக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+