60 வயசு நடிகரோடு என்னை பற்றி வதந்தி வந்தப்போ கேப்டன் என்ன செஞ்சாரு தெரியுமா? கண்கலங்கிய கஸ்தூரி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை கஸ்தூரி மறைந்த நடிகர் விஜயகாந்த் குறித்து அவரைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்து இருக்கிறார்.

விஜயகாந்த் உடன் தான் முதல்முறையாக திரைப்படங்களில் ஒன்றாக நடிக்கும் போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து கஸ்தூரி நெகிழ்ச்சியாக அதில் பேசியிருக்கிறார்.

Actress Kasthuri shares her memories of actor Vijayakanth

அதோடு தன்னுடைய சினிமா வாழ்க்கையில் ஒரு நடிகரோடு சேர்த்து வைத்து வதந்தி செய்தி பரவிய போது விஜயகாந்த் தனக்காக செய்த உதவி குறித்து கஸ்தூரி பகிர்ந்து இருக்கிறார்.

பொதுவாக ஒரு பாடல் வரி பிரபலமாக உண்டு. அதாவது "இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும்" என்று அதுபடி வாழ்ந்தவர்கள் ஒரு சிலர்தான். அந்த வகையில் வாழும் வரைக்கும் மட்டுமல்லாமல் மறைந்த பிறகும் பலராலும் பெருமையாக பேசப்படும் ஒரு நபராக நடிகர் விஜயகாந்த் இருந்தார்.

அவருடைய உடல் கடந்த சில தினங்களுக்கு முன்பு மண்ணை விட்டு மறைந்திருந்தாலும் அவருடைய புகழ் இன்னும் பலராலும் போற்றப்பட்டு வருகிறது. யாரும் உதவி என்று கேட்டால் யோசிக்காமல் செய்யும் உயர்ந்த உள்ளம் படைத்தவராக விஜயகாந்த் இருந்தாலும் அவரையும் ஆரம்ப காலகட்டத்தில் பலரும் தூற்றினார்கள் என்று விஜயகாந்த் பல இடங்களில் சொல்லியிருக்கிறார்.

தான் பல பட்ட அவமானங்கள் காரணமாகவே அடுத்தவர்கள் அந்த அவமானத்தை படக்கூடாது என்று சாப்பாடு உதவியிலிருந்து தன்னால் முடிந்த உதவிகளை எல்லாம் விஜயகாந்த் செய்து கொடுத்திருந்தார். அதனாலயே விஜயகாந்த் உயிரோடு இருக்கும்போது மட்டுமல்லாமல் அவர் மறைந்த பிறகும் அவர் குறித்து பலர் பெருமையாக பேசி வருகின்றனர். அந்த வகையில் விஜயகாந்த் ஜோடியாக நடித்த நடிகை கஸ்தூரி விஜயகாந்த் குறித்து சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

அதில் நான் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே எனக்கு விஜயகாந்த்தை அவ்ளோ பிடிக்கும். அவரையெல்லாம் நிஜத்தில் பார்ப்போம் என்று நினைக்கவே இல்லை. அதனாலே அவரோடு சேர்ந்து ஒன்றாக நடிப்பேன் என்று நான் நினைக்கவே இல்லை. சினிமா சூட்டிங் ஸ்பாட்டில் அவர் பலருக்கு உதவி செய்வதை என் கண்ணால் நானே பார்த்து இருக்கிறேன்.

அவரை பார்க்க வருகிறவர்கள் பசியோடு இருக்கக் கூடாது என்று எப்போதும் நினைப்பவர். அதுமட்டுமல்லாமல் யாருக்கு எந்த நேரத்தில் உதவி என்றாலும் செய்து விடுவார். இந்த மாதிரி ஒரு சிலருக்கு செய்த உதவிகளை வெளிப்படையாக என்னால் சொல்ல முடியாது. ஆனால் பெயர் குறிப்பிடாமல் சொல்கிறேன். ஒரு பெண் நடிகை ஒருவருக்கு பண விஷயத்தில் ஏற்பட்ட கஷ்டத்தை போக்குவதற்காக தொடர்ச்சியாக ஏழு எட்டு படங்களில் அவருக்கு விஜயகாந்த் வாய்ப்பு கொடுத்திருந்தார்.

அந்த மாதிரி பலருக்கு உதவி செய்திருக்கிறார். எனக்கும் கூட ஒரு பெரிய உதவியை செய்தார். அதாவது நான் விஜயகாந்த் உடன் ஜோடியாக நடித்துக் கொண்டிருந்தபோது என்னை பற்றி அவருடைய ஆஃபீஸில் இருந்த ஒரு சிலர் 60 வயது நடிகரோடு தவறாக இணைத்து பேசியிருக்கிறார்கள். அந்த செய்தி பரவி வந்தது. அதுமட்டுமல்லாமல் அந்த செய்தி பத்திரிகைகளிலும் கூட அந்த நேரத்தில் வந்திருந்தது.

அது பற்றி விஜயகாந்த்திடம் நான் போய் சொன்னேன். உடனே அவர் இதற்கு மேல் நான் பார்த்துக்கிறேன் என்று சொன்னார். அதற்கு பிறகு அந்த பேச்சு அடியோடு நிறுத்துவதற்கு காரணமே விஜயகாந்த் தான். அந்த மாதிரி யார் யாருக்கு என்ன உதவி வேண்டுமோ அதை தைரியமாக அவரிடம் சொல்ல முடியும். சொன்னால் எப்படியும் மறுக்க மாட்டார் என்பது எல்லாருக்குமே தெரியும் என்று அந்த வீடியோவில் நடிகை கஸ்தூரி உருக்கமாக பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+