கணவன், மகன் அடுத்தடுத்து மரணம்.. மூன்று முறை தற்கொலை முயற்சி.. கதறி அழுத நடிகை கவிதா
சென்னை: நடிகை கவிதா பல வருடங்கள் கழித்து பேட்டி ஒன்றில் தன்னுடைய மகன் மற்றும் கணவர் இறந்தது குறித்து கண்ணீரோடு பேசி இருக்கிறார்.
கொரோனாவால் சாதாரண மக்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் யாரும் எதிர்பார்க்காத வகையில் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து இருந்தனர்.
இந்த நிலையில் கொரோனாவால் தன்னுடைய மகன் மற்றும் கணவரின் மரணத்தால் தான் மூன்று முறை தற்கொலை முயற்சி செய்தது பற்றி முதல் முறையாக கவிதா பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.

அந்த வகையில் நடிகை கவிதா ரஜினி, விஜய், அஜித், என பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார். 1976 ஆம் ஆண்டு ஓ மஞ்சு என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் திரையுலகில் நடிகை கவிதா அறிமுகமானாராம். அதைத் தொடர்ந்து பல மொழிகளில் இவர் நடித்துக் கொண்டிருந்த நிலையில் நடிகர் விஜய் நடித்த முதல் படமான நாளைய தீர்ப்பு மற்றும் அஜித் நடிப்பில் பெரிய அளவில் ஹிட்டான அமராவதி போன்ற திரைப்படங்களில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்
அம்மா கதாபாத்திரத்தில் முன்னணி நடிகர்களோடு இவர் நடித்து இருந்த நிலையில் அதைத்தொடர்ந்து சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் சில வருடங்களாக சினிமாவிலும் சீரியலிலும் அவர் காணவில்லை. இப்படியாக இருக்கும் நிலையில் தற்போது பேட்டி ஒன்றில் தன்னுடைய வாழ்க்கை குறித்து பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.
அதில் சில வருடங்களாக உலக நாடுகளையே கொரோனா என்ற கொடிய அரக்கன் ஆட்டிப்படைத்து வைத்திருந்தான். அவன் முன்பு சாதாரண மக்களும் பிரபலங்களும் எல்லோரும் சமமாக தான் பாதிக்கப்பட்டனர். அந்த வகையில் அந்த கொரோனா காலகட்டத்தில் எந்த பெண்ணுக்கும் வரக்கூடாத நிலமை நடிகை கவிதாவிற்கு வந்திருக்கிறது.
அது பற்றி கவிதா பேசுகையில் கொரோனாவால் என்னுடைய கணவருக்கு இப்படி ஆகும் என்று நான் நினைத்துப் பார்க்கவே இல்லை. கொரோனா சமயத்தில் எங்கள் வீட்டில் பாட்டி, மகன் உட்பட ஏழு பேருக்கும் கொரோனா தொற்று உருவானது. அப்போது என்னுடைய மகனும் கணவரும் நல்ல ஆரோக்கியமாகத்தான் இருந்தனர். எல்லோருமே முறைப்படி மாத்திரைகளை எடுத்துக் கொண்டிருந்தோம்.
ஆனால் அது என்னுடைய மகனுக்கும் கணவருக்கும் பயனளிக்கவில்லை. முதலில் என்னுடைய மகன் உயிரிழந்து விட்டான். இந்த உலகத்தில் எதுவுமே இல்லை என்றாலும் என்னால் உயிர் வாழ முடியும். ஆனால் என்னுடைய குடும்பம் இல்லாமல் என்னால் உயிர் வாழ முடியாது. எனக்கு அந்த நேரத்தில் கடவுள் நம்பிக்கையே இல்லாமல் போய்விட்டது.
நான் என்னுடைய வாழ்நாள் முழுக்க குடும்பம் குடும்பம் என்று தான் குடும்பத்திற்காக வாழ்ந்து கொண்டிருந்தேன். ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சென்ற இரண்டு நாட்களிலேயே மகன் உயிரிழந்தான் அடுத்து சில நாட்களில் என்னுடைய கணவரும் உயிர் இழந்துவிட்டார். என்னுடைய வாழ்க்கையில் முதல் முறையாக அப்போதுதான் நான் நடித்தேன்.
என் வாழ்க்கையில் நான் நடித்ததே கிடையாது. சினிமாவில் எந்த ரோல் கொடுத்தாலும் என்னால் நடிக்க முடியும். ஆனால் கேமராவை விட்டு வெளியே வந்ததும் நான் எனக்கு பிடித்தவாறு எப்போதும் சிரித்துக் கொண்டிருப்பேன். முதலில் என்னுடைய குழந்தை இறந்தது என்னுடைய கணவருக்கு தெரியாது. அவரை நான் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டிருந்தேன்.
அவர் இப்போது குழந்தை பற்றி கேள்வி கேட்பார். நான் அவன் வெளியே விளையாடிக் கொண்டிருக்கிறான் என்று பொய் சொல்லி நடித்துக் கொண்டிருந்தேன். பிறகு அவர் இருக்கும் அறையை விட்டு வெளியே வந்ததும் கதறி அழுவேன். மகன் இறந்த சில நாட்களிலே என்னுடைய கணவரும் இறந்த பிறகு நான் உயிரோடு இப்ப வரைக்கும் வாழ்வதற்கு காரணம் எனக்கு இரண்டு மகள்கள் இருப்பது தான்.

இரண்டு மகள்களுக்காகத் தான் நான் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நான் கல் நெஞ்சக்காரி அதனால் தான் என்னுடைய இருதயம் இன்னும் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். ஆனாலும் என்னுடைய கணவரும் மகனும் இறந்த நேரத்தில் நான் மூன்று முறை தற்கொலைக்கு முயற்சி செய்தேன். அப்போ என் வீட்டின் அருகில் இருந்த ஒரு அம்மா தான் என்னை பளார் என்று அறைந்து தற்கொலைக்கான கவுன்சிலிங் எல்லாம் கொடுத்து என்னை மாற்றினார் என்று அந்த பேட்டியில் கண்ணீரோடு நடிகை கவிதா பேசியிருக்கிறார்.
-
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications