72 மணி நேரம் கெடு விதித்த டாக்டர்கள்! பிழைக்க வைத்த கடவுள்! உயிரை எடுத்த கொரோனா! நடிகை கவிதா கண்ணீர்
சென்னை: என் கணவர் பெரிய ஆபத்துல இருந்து மீண்டார். ஆனால் அவரை கொரோனா கொண்டு போய்விட்டதே என நடிகை கவிதா கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு நடித்துள்ளார் நடிகை கவிதா. இவர் நாளைய தீர்ப்பு, அமராவதி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவர் சில படங்களில் ஹீரோயினாக நடித்துவிட்டு பின்னர் முன்னணி நடிகர்களுக்கு அம்மா வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வந்த கொரோனா எப்படி பலரது வாழ்க்கையை புரட்டி போட்டதோ அதே போல் கவிதாவின் வாழ்க்கையிலும் புயலாக வீசியது. இதுகுறித்து அவர் அண்மையில் ஒரு சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அவர் கூறுகையில் எனக்கு திருமணமான போது என்னுடைய வீட்டிலிருந்து எதையும் எடுத்து வரவே கூடாது என எனது கணவர் சொல்லிவிட்டார். இதனால் நான் வெறும் கையுடன்தான் புகுந்த வீட்டிற்கு வந்தேன். 10 ஆண்டுகள் நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தோம். ஒரு நாள் சிக்கன் கிரேவி சமைக்குமாறு என் கணவர் கூறினார்.
இதனால் நான் அதற்கான பணிகளை செய்துக் கொண்டிருந்தேன். அப்போது எனது பிள்ளைகள் அம்மா என கதறிக் கொண்டு சமையலறைக்கு வந்தனர். போய் பார்த்த போது என் கணவர் நிலைக்குலைந்து விழுந்து கிடந்தார். அவரை மருத்துவமனையில் சேர்த்த போது அவருக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டிருப்பதாக சொன்னார்கள்.
அவர் 72 மணி நேரம் அதாவது 3 நாட்கள் மட்டுமே இருப்பார் என கெடு சொன்னார்கள். ஆனால் நான் மட்டும் அவருக்கு எதுவும் ஆகாது என மன தைரியத்துடன் இருந்தேன். ஆனால் மருத்துவர்களோ அவர் நிச்சயம் கோமாவுக்கு செல்வார் என்றார்கள். நான் மருத்துவமனையில் உட்கார்ந்தபடியே கடவுளிடம் சொன்னது இதுதான், கடவுளே நான் யாருக்காவது தெரிந்தோ தெரியாமலோ கெடுதல் செய்திருந்தால் நீ அவரை எடுத்துக்கொள், இல்லாவிட்டால் அவரை விட்டுவிட்டு என வேண்டினேன்.
8 நாட்கள் ஆனது. அப்போது செவிலியர் ஒருவர் வந்து மேடம் உங்கள் கணவர் கவி கவி என அழைக்கிறார் என்றார். உடனே ஓடி போய் பார்த்தேன். என் கணவர் பிழைத்துக் கொண்டார். ஆனால் அவருடைய வலது பக்கம் முழுவதும் முடங்கிவிட்டது. தண்ணீர் குடிக்க கூட அவரால் வலது கையை பயன்படுத்தவே முடியாத நிலை இருந்தது.
அவரை வலது கையை பயன்படுத்த நான் பயிற்சி கொடுத்து 35 நாட்களில் நல்லபடியாக குணமாகி உணவை அவரே சாப்பிட்டார். இப்படிப்பட்ட கொடூர தருணங்களில் எல்லாம் மீண்ட அவர் கொரோனா பரவலால் உயிரிழந்துவிட்டாரே என்பதுதான் எனக்குள்ள வருத்தம் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications