மஞ்சள் தாலி கழுத்தில் ஏறிய வேளை.. க்யூட் புகைப்படங்களை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்.. குவியும் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் அவருடைய காதலர் ஆண்டனிக்கும் கோவாவில் இன்று எளிமையாக திருமணம் நடைபெற்று இருக்கிறது. திருமணத்திற்கு பிறகு தங்களுடைய புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார்.

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்க தொடங்கிய கீர்த்தி சுரேஷ் இப்போது முன்னணி நடிகையாக பலமொழிகளில் நடித்துக் கொண்டிருக்கிறார். கீர்த்தி சுரேஷ்க்கு 15 வருடங்களாக காதலித்து வந்த ஆண்டனி என்பவரோடு கோவாவில் இன்று திருமணம் நடைபெற்று இருக்கிறது.

Television Keerthy Suresh

உன் மேல ஒரு கண்ணு என்று ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் பின்னால் சுற்ற வைத்த கீர்த்தி சுரேஷ் தற்போது நடிக்கும் திரைப்படங்களில் கெத்தான கேரக்டரில் நடித்து வருகிறார். தான் நடிக்கும் திரைப்படங்களில் காதல் காட்சிகளில் மட்டுமல்லாமல் காமெடி காட்சிகளிலும், சண்டை காட்சிகளிலும் பின்னி பெடல் எடுத்து வருகிறார்.

Television Keerthy Suresh

ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய அழகு, திறமையை மெருகேற்றிக் கொண்டே போகிறார். சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ரகு தாத்தா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதுபோல சமீப காலமாகவே கீர்த்தி சுரேஷ் பற்றிய செய்திகள் இணையத்தில் அடிபட்டுக் கொண்டிருக்கிறது.

Television Keerthy Suresh

ஆனால் தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்து நேரத்தை வேஸ்ட் பண்ண விரும்பவில்லை என்று அதிரடியாக சொல்லிய கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது பேட்டிகளில் கலந்துகொண்டு தன்னுடைய சினிமா வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கை பற்றி கூட பேசி இருக்கிறார்.

Television Keerthy Suresh

சின்னத்திரை நடிகர் சஞ்சீவ் வீட்டில் தான் தங்கி இருக்கும் போது அவருடைய குடும்பத்தினர் தன்னை பார்த்துக் கொண்ட விதம் குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசி இருந்தார். அது பெரிய அளவில் பேசப்பட்டது. அதுபோல கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் கீர்த்தி சுரேஷ் ஆண்டனி என்பவரை காதலித்து வருகிறார், இவர்களுக்கு டிசம்பர் மாதத்தில் திருமணம் நடைபெறப்போகிறது என்ற செய்திகள் வெளியாகி இருந்தது.

Television Keerthy Suresh

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதை அதிகாரப்பூர்வமாக கீர்த்தி சுரேஷ் அறிவித்திருந்தார். தான் 15 வருடங்களாக காதலித்து வருவதாகவும், எங்களுடைய காதல் இன்னும் தொடரும் என்றும் ஒரு கேப்ஷன் வெளியிட்டு தன்னுடைய காதலரோடு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார்.

Television Keerthy Suresh

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷுக்கும் அவருடைய காதலர் ஆண்டனிக்கும் இன்று கோவாவில் திருமணம் நடைபெற்று இருக்கிறது. காலையில் இந்து முறைப்படியும் மாலையில் கிறிஸ்தவ முறைப்படியும் திருமணம் நடைபெறுவதாக கூறப்படுகிறது. அது போல இவர்களுடைய திருமண பங்க்ஷனில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும்தான் கலந்து கொள்கிறார்களாம்.

சினிமா பிரபலங்கள் ரிசப்ஷனில் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது. ஆனால் காலையில் திருமண பங்க்ஷனில் நடிகர் விஜய் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தன்னுடைய திருமணத்தின் போது எடுத்த புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார். அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Television Keerthy Suresh

பலரும் கீர்த்தி சுரேஷுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். கீர்த்தி சுரேஷும் அவருடைய கணவர் அந்தோனியும், கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான். பள்ளி நாட்களில் இருந்து கீர்த்தி சுரேஷ் நல்ல நண்பராக இருந்து.. கொச்சியில் இருவரும் இளங்கலை படிப்பை தொடர்ந்து நட்பை காதல் என்கிற அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.

அதுபோல கீர்த்தி சுரேஷ் நடிகை மேனகா மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஜி சுரேஷ்குமாரின் மகள் தான். பேபி ஜான் திரைப்படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ் அதிகமான மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். அதிலும் கீதாஞ்சலி என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருதையும் கீர்த்தி சுரேஷ் பெற்று இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Television Keerthy Suresh

பல ஆண்டுகளாக கீர்த்தி சுரேஷ் தன்னுடைய காதலை ரகசியமாக வைத்திருந்த நிலையில் தற்போது இவர்கள் இருவர் வீட்டிலும் சம்மதம் பெற்று திருமணத்தை நடத்தி இருக்கின்றனர். அதுபோல சமீபத்தில் ஒரு ட்ரெண்டு உருவாகி இருக்கிறது அதாவது பிரபலங்கள் வீட்டு திருமணத்தை நெட்ப்ளிக்ஸ் அல்லது பிரபல youtube சேனல்களுக்கு உரிமையை கொடுத்து விடுகிறார்கள். ஆனால் அதுபோல கீர்த்தி சுரேஷ் செய்யாமல் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டது குறித்து பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+