Raghu Thatha OTT: கீர்த்தி சுரேஷின் “ரகு தாத்தா” ஓடிடி அப்டேட்.. ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ரகு தாத்தா திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆகி இருக்கும் நிலையில் அந்த திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாக போகிறது? எந்த ஓடிடி தளத்தில் வெளியாக போகிறது? என்ற தகவல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அது பற்றி பார்க்கலாம்.
ஒரு சில திரைப்படங்கள் தான் சினிமாவில் வெளிவருவதற்கு முன்பே பெரிய அளவில் இணையத்தில் பேசப்பட்டு விடுகிறது. பாராட்டு மட்டுமல்லாமல் சில திரைப்படங்கள் அதிகமான சர்ச்சைகளையும் ஏற்படுத்தி விடுகிறது. இது அந்த திரைப்படத்தைப் பற்றி மக்கள் மத்தியில் பேசுவதற்கு செய்யப்படும் வியாபார யுக்தியாக இருந்தாலும் சில திரைப்படங்கள் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே வெளியான பிறகும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறது. அந்த வகையில் ஒன்றுதான் சமீபத்தில் வெளியான ரகு தாத்தா திரைப்படம்.

இந்தத் திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்திருக்கிறார். சுமன் குமார் இயக்கத்தில், ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவானது. ரகு தாத்தா திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகி இருந்த நிலையில் இது கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது.

My Perfect Husband Review: சபல புத்தி சத்யராஜ்.. வில்லத்தன ஹீரோ.. எப்படி இருக்கிறது? - விமர்சனம்
இந்தப் படத்தில் எம்.எஸ் பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ராஜேஷ் பாலகிருஷ்ணன் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். கீர்த்தி சுரேஷ் இந்த திரைப்படத்தில் முற்போக்கு சிந்தனை கொண்ட பெண்ணாக நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் இடம்பெற்ற வசனங்கள் குறித்து பல்வேறு சர்ச்சைகளும் கிளம்பியது.

இப்படியான நிலையில் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூலில் சாதிக்கவில்லை என்று கூறப்பட்டாலும் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி ஜீ5 (ZEE 5) ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. தியேட்டரில் இந்த திரைப்படத்தை மிஸ் பண்ணிய ரசிகர்கள் இனி வீட்டிலேயே பார்த்துக் கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications