Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

My Perfect Husband Review: சபல புத்தி சத்யராஜ்.. வில்லத்தன ஹீரோ.. எப்படி இருக்கிறது? - விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட் வெப் சீரிஸ் (My Perfect Husband) டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கிறது. இதில் எட்டு எபிசோடுகள் இருக்கிறது. சத்யராஜுக்கு ஜோடியாக சீதா அவருடைய மனைவியாகவும், ரேகா முன்னாள் காதலியாகவும் நடித்திருக்கிறார்கள்.

பாகுபலி கட்டப்பா, வெப் சீரிஸில் முதல்முறையாக நடிக்கப் போகிறார் என்றதும் அந்த கதை எப்படி இருக்க போகிறது? காமெடியாக இருக்குமா? அல்லது சென்டிமென்ட் காட்சியாக இருக்க போகிறதா? என்ற எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு இந்த வெப் சீரிஸ் புதுவித அனுபவத்தை கொடுத்திருக்கும். சத்யராஜ், சீதா, ரேகா, ரேஷ்மா பசுபுலேட்டி, வர்ஷா, ரக்ஷன், லிவிங்ஸ்டன், அஜீத் காலிக், கிருத்திகா, மனோகர் ராகவி, காயத்ரி என ஏராளமானோர் நடித்திருக்கிறார்கள்.

Television ott

கதையை சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் நாட்டாமை திரைப்படத்தில் கவுண்டமணிக்கு அப்பாவான செந்தில், பெண் பார்க்க பல இடங்களுக்கு கூட்டிக்கொண்டு போவார். ஆனால் எந்த இடத்திலும் கவுண்டமணிக்கு பெண்ணை பிடிக்காது. ஆனால் ஒரு பெண்ணை கவுண்டமணிக்கு ரொம்ப பிடித்திருக்கும். ஆனால் அந்தப் பெண் செந்திலின் முன்னாள் காதலியின் பெண் தான். இதை கவுண்டமணி கேட்டதும் அதிர்ச்சியாகி இருப்பார். அந்த வீட்டில் செந்திலின் முன்னாள் மனைவியின் கணவராக ஒருவர் மிச்சர் சாப்பிட்டுக் கொண்டு இருப்பார்.

இந்த காமெடி சில நிமிடங்கள் மட்டும்தான் நாட்டாமை திரைப்படத்தில் வரும். ஆனால் அந்த காமெடி இப்ப வரைக்கும் பேசப்படுகிறது. இதை மனதில் வைத்தே மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட் வெப் சீரிஸ் எடுத்து விட்டார்கள்.

சத்யராஜ் காலேஜ் ப்ரொபஸராக இருக்கிறார். அவருடைய மனைவி சரஸ்வதியாக சீதா இருக்கிறார். 25 வருடங்களாக சீதா தான் நான் பார்த்த முதல் பெண் அவர்தான் என்னுடைய வாழ்க்கையில் வந்த முதல் பெண் அவரையே நான் திருமணம் செய்து கொண்டேன் என்று சத்யராஜ் வீட்டில் நடித்துக் கொண்டு, வீட்டிற்கு வெளியே சல்லாப மனிதனாக இருக்கிறார்.

சத்யராஜ் வில்லனாகவும், கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்திருந்தாலும் இந்த வெப் சிரிஸில் நேர்மையான ஒரு காலேஜ் ப்ரொபஸராக நடித்துக் கொண்டு, அவருடைய உண்மையான சபல புத்தியை காட்டிவிட்டு அவர்தான் இந்த சீரிஸின் கதாநாயகன் என்பது போல காட்டுவது ஏனோ முகம் சுளிக்க வைக்கிறது. அதேநேரம், சத்யராஜன் ஆரம்ப கால சபலத்தனமான திரைப்பட வில்லன் கதாப்பாத்திரங்களையும் நினைவூட்டுகிறது.

Television ott

சத்யராஜ் வீட்டில் நல்ல கணவனாகவும் அப்பாவாகவும் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தன்னுடைய மூத்த மகன் தர்ஷனுக்கு பெண் பார்ப்பதற்காக தன்னால் வர முடியாது என்று மொத்த குடும்பத்தையும் அனுப்பி வைக்கிறார். ஆனால் அங்கு பெண் பார்க்க போன இடத்தில் தர்ஷனுக்கு அந்த பெண்ணை முதல் சந்திப்பில் பிடித்து விடுகிறது. அந்தப் பெண்ணின் அம்மா தான் சத்யராஜின் முன்னாள் காதலி என்று சத்யராஜுக்கு தெரிய வந்ததும் அந்த உண்மையை சீதாவிடம் சொல்லி திருமணத்தை நிறுத்தி விட வேண்டும் என்று முயற்சி செய்கிறார்.

அதற்கு பிறகு திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதுதான் கதை. முதல் எபிசோடிலேயே மொத்த கதைக்கான முடிச்சுகளையும் அவிழ்த்து இருக்கின்றனர். சில இடங்களில் சுவாரஸ்யம் இருந்தாலும் பல இடங்களில் இந்த கதையை பல இடங்களில் பார்த்தது போலவே இருக்கிறது. ஆனாலும் கேரளாவின் அழகை கண்களுக்கு குளிர்ச்சியாக பிரபல ஒளிபதிவாளர் ஆர்கன் வில்சன் கேமரா மேனாக பணியாற்றி காட்டி இருக்கிறார்.

Television ott

அதுபோல ஒரு பாடல் இந்த வெப் சீரிஸில் மூன்று இடத்தில் இடம் பெற்றிருக்கிறது. வித்யாசாகர் இசை அமைத்திருக்கிறார். இயக்குனர் தாமிரா இயக்கியிருக்கிறார். அவர் திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியை சேர்ந்தவர். பிரபல எழுத்தாளராகவும், இயக்குனராகவும் இருந்த தாமிரா கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக காலமானார். அதற்கு முன்பு அவர் ஆண் தேவதை, ரெட்டை சுழி போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வெப் சீரிஸில் பிளஸ் என்று சொன்னால் சீதாவின் அருமையான நடிப்பு மற்றும் எக்ஸ்பிரஷன்... சில இடங்களில் சத்யராஜின் காமெடி எடுபடுகிறது. அதுபோல சத்யராஜின் வீடு, ரேகாவின் வீடு மற்றும் கேரளாவின் அழகு போன்றவை கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. சண்டைக் காட்சிகள், ரத்தம், வன்மம் போன்றவை இல்லை என்பதால் இதை பார்க்கலாம்.

ஆனால் மொத்த சீரிஸையும் பார்ப்பதற்கு கொஞ்சம் பொறுமை வேண்டும். நாம் ஏற்கனவே பார்த்து சலித்து போன காட்சிகள் தான் மிகவும் மெதுவாக வந்து சோதிக்கிறது. அதுவும் கிளைமாக்ஸ் யாரும் இப்படி எதிர்பார்த்து இருக்க முடியாது. ஆபாச காட்சிகள் இல்லாததால் வீட்டில் எல்லோரும் சேர்ந்து இந்த படத்தை பார்க்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+