“அண்ணாத்த” படம் ஏன் பண்ணுனோம்னு தோணுச்சு.. அங்க நடந்த விஷயமே வேற.. மனம் திறந்த குஷ்பூ

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை குஷ்பூ நடிகர் ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படத்தில் தான் நடித்த அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதில் நான் இப்போது நினைத்துப் பார்த்தால் அண்ணாத்த திரைப்படத்தை நான் பண்ணியிருக்க வேண்டாம் என்று எனக்கு தோணுகிறது. அதற்கு காரணம் இதுதான் என்று சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். இது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது. அது பற்றி பார்க்கலாம்.

ரஜினிகாந்த் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான அண்ணாத்த திரைப்படம் அதிகமான விமர்சனங்களை பெற்றது. இந்த திரைப்படத்தில் அண்ணன் தங்கை கதையை மையமாக கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகை குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், வேலராமமூர்த்தி என்று பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள்.

Television Khushboo rajinikanth

அதுபோல இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருந்தார். நடிகர் ரஜினிகாந்தின் திரைப்படத்திற்கு டி இமான் இசை அமைப்பது இதுதான் முதல்முறையாக இருந்தது. அதுபோல இந்த திரைப்படத்திற்கான பாடல் வரிகளை தாமரை, விவேகா, யுகபாரதி, அருண் பாரதி, மணி அமுதவன் மற்றும் அறிவு ஆகியோர் எழுதியிருந்தார்கள். அதுபோல எஸ்பிபி பாலசுப்பிரமணியன் ரஜினிகாந்த்தின் அறிமுக பாடலை பாடியிருந்தார். 2020 செப்டம்பர் 25 இல் அவர் இறப்பதற்கு முன்பு கடைசியாக பாடியது "அண்ணாத்த அண்ணாத்த" பாடல் தான்.

விஜயகாந்துக்கு ஹோட்டலில் நடந்த அவமானம்.. நான் அடிக்க போனேன்! ஆனால் அவர் சொன்ன வார்த்தை.. குஷ்பூ ஓபன்
இந்த நிலையில் பல வருடங்கள் கழித்து இந்த திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து குஷ்பூ பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதில் குஷ்பூ பேசுகையில் அண்ணாத்த படத்தில் நான் நடித்ததை இப்போ யோசித்துப் பார்த்தால் நான் அந்த படத்தில் நடித்திருக்கக் கூடாது என்று எனக்கு தோணுகிறது. நான் அந்த படத்தை ஒத்துக் கொள்வதற்கு காரணம் என்னிடம் அப்போது ரஜினி சாருக்கு ஜோடி இல்லை என்று சொன்னார்கள். எங்க கிட்ட சொன்ன கதையில் எங்களுக்கு முக்கியத்துவம் இருந்தது.

இன்டர்வெலுக்கு பிறகு தங்கச்சியை ரஜினி தேடி போராருன்னா ஒரு பக்கம் நான் போவேன் இன்னொரு பக்கம் மீனா போவதாக கதை எங்களிடம் சொல்லப்பட்டது. நாங்களும் லொகேஷனில் பேசும்போது ஒன்சைடு காதல் தானே இருக்கு அதற்கு சின்ன பட்ஜெட்டில் ஒரு நடிகை போட்டால் போதும் என்று இரண்டு மூன்று நடிகைகளின் பெயரை சொல்லிக் கொண்டிருந்தாங்க. ஏன்னா ரஜினி சாருக்கு டூயட் சாங் எல்லாம் கிடையாது என்று சொல்லிட்டு இருந்தாங்க.

ரஜினி சார் மீது ஒன் சைட் காதலில் ஒரு ஆர்ட்டிஸ்ட் அவரை பாலோ பண்ணிட்டு வருவாங்க என்று தான் சொன்னாங்க. நாங்களும் ரஜினி சாரை ஒன் சைடு ஆக காதலிக்கிறது டாக்டர் கேரக்டர் என்பதால் அந்த நடிகை சரியாக இருக்கும், இந்த நடிகை சரியாக இருக்கும் என்று பேசிக்கிட்டு இருந்தோம். ஆனால் திடீரென்று பார்த்தால் ஒரு ஹீரோயின் வந்தாங்க... டூயட் சாங் வந்தது.. பிறகு கதையை மாறிடுச்சு.. கதை மாறியதால் எங்களுடைய கேரக்டர் முக்கியமில்லாமல் போயிடுச்சு.

இன்டெர்வலோட எங்களுடைய கேரக்டர் முடிஞ்சிடுச்சு நாங்க ஏன் வரோம் எதுக்கு வரோம்ங்கிறதே தெரியாமல் போயிடுச்சு. அது வருத்தமாக தான் இருந்தது. ஆனாலும் இயக்குனர் சிவா, கேமரா மேன் வெற்றி இவங்க எல்லாம் ரொம்ப திறமையானவங்க. அவங்களோட பேசிய அனுபவம் கிடைத்தது அவ்வளவுதான்.. என்று அந்த பேட்டியில் குஷ்பூ பேசியிருக்கிறார். ஏற்கனவே அண்ணாத்த திரைப்பட டீஸர் வெளியான சமயத்தில் குஷ்பூ, மீனா காட்சிகளை பார்த்து இணையத்தில் அதிகமாக கிண்டல் செய்யப்பட்டது. டீசர் கூட சீரியல் ப்ரோமோ மாதிரி இருக்கிறது என்று கூட அந்த நேரத்தில் அதிகமானோர் கிண்டல் செய்து வந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+