விஜயகாந்துக்கு ஹோட்டலில் நடந்த அவமானம்.. நான் அடிக்க போனேன்! ஆனால் அவர் சொன்ன வார்த்தை.. குஷ்பூ ஓபன்
சென்னை: நடிகை குஷ்பூ நடிகர் விஜயகாந்த் பற்றி பேசி இருக்கும் வீடியோ தான் இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது. அதில் குஷ்பூ நடிகர் விஜயகாந்த்க்கு பெப்சி தொழிலாளர்கள் பிரச்சனை நடந்த போது கிடைத்த அவமானம் பற்றியும், அப்போது கூட விஜயகாந்த் என்ன செய்தார் என்பது பற்றியும் அதில் வெளிப்படையாக குஷ்பு பேசி இருக்கிறார். அதைப் பற்றி பார்க்கலாம்.
நடிகை குஷ்பு குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி வருஷம் 16 திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க தொடங்கி இருக்கிறார். இப்போ வரைக்கும் வெள்ளித்திரை, சின்னத்திரை என்று நடிப்பில் முன்னணியில் இருக்கிறார். கதாநாயகிகளுக்கு டப் கொடுக்கும் அளவில் தன்னை கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகள் குறித்து பேட்டிகளில் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் நடிகர் விஜயகாந்த் குறித்து வெளிப்படையாக குஷ்பூ பேசிய வீடியோ இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது. அதில் குஷ்பூ பேசுகையில் விஜயகாந்த் போல ஒரு சொக்கத்தங்கத்தை யாராலும் பார்க்க முடியாது. திரைதுறையில் சொக்கத்தங்கம் என்று நான் சொல்ல வேண்டும் என்றால் அது விஜயகாந்த்தை தான்.
அவர் நடித்த படம் மட்டுமல்ல அவருடைய நிஜ குணமும் அதுதான். நடிகர், நடிகைகளின் வாழ்க்கைக்காக அவர் பல விஷயங்களை செய்திருக்கிறார். தமிழ் சினிமாவில் இருப்பவர்கள் அவரால் உதவி பெறவில்லை என்று சொல்ல முடியாது அந்த அளவிற்கு விஜயகாந்த் எல்லாருக்குமே உதவி செய்திருக்கிறார். அசிஸ்டன்ட் பலருடைய குழந்தைகள் படிப்பதற்கு விஜயகாந்த் தான் உதவி செய்திருக்கிறார்.
அதுபோல ஒரு விஷயத்தை நான் சொல்லியே ஆக வேண்டும் பெப்சி தொழிலாளர்கள் பிரச்சனை நடந்தபோது விஜயகாந்துக்கு அவமானமும் என் கண் முன்னாடியே நடந்தது. ஆனாலும் அந்த நேரத்தில் அவர் தைரியமாக இருந்தார். அதாவது பெப்சி பிரச்சனை நடந்து கொண்டிருந்தபோது மும்பையில் இருந்து தொழில்நுட்ப கலைஞர்கள் நிறைய பேர் வந்திருந்தார்கள். அப்போது தொழில்நுட்ப கலைஞர்களில் தலைவர் ஒருவர் மிகவும் பந்தா செய்து கொண்டிருந்தார்.
விஜயகாந்த் அவர்கள் இருந்த ஹோட்டலுக்கு நேரடியாக சென்று சந்திக்க போயிருந்தார். ஆனால் விஜயகாந்த் அப்படி போயிருக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனாலும் அவர் அங்கு சென்றார். அப்போது அவருக்கு உக்காருவதற்கு ஒரு சேர் கூட போடவில்லை. வந்தவர்கள் எல்லோரும் கால் மேல் கால் போட்டு கெத்தாக விஜயகாந்த் முன்பு ஹிந்தியில் பேசிக்கொண்டிருந்தார்கள். விஜயகாந்தை பார்த்து இவரெல்லாம் ஒரு ஹீரோ என்று கிண்டல் செய்தார்கள்.
நானும் அந்த இடத்தில் இருந்தேன். அதை பார்த்ததும் மிகவும் எனக்கு கோபம் வந்துவிட்டது. இதனால் நான் அவர்களிடம் சண்டை போட்டேன். அப்போது விஜயகாந்த் தடுத்து நமக்கு காரியமாக வேண்டும் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேள் என்று மிகவும் தாழ்மையோடு நடந்து கொண்டார். நான் கடைசிவரை அவரை விட்டுக் கொடுக்கவே இல்லை.
அவரிடம் சார் அவர்கள் உங்களுக்கு உட்காருவதற்கு சேர் கொடுக்க வேண்டும் என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும்போது விஜயகாந்த் இல்லை அவர்கள் வேண்டும் என்று செய்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது எனக்கு சேர் வேண்டாம் நாம் நிற்கலாம். நீ அவர்களுக்கு என்ன வேண்டும் என்பதைக் கேள் என்று கூறினார். அப்படித்தான் அவர் அந்தப் பிரச்சனையை முடித்தார். அவரை போல யாரையும் பார்க்க முடியாது.
அவருக்கு மட்டும் உடல்நிலை சரியில்லாமல் போகாமல் இருந்திருந்தால் இப்போ முதல்வராக இருந்திருப்பார். அவரைப் பற்றி நான் சொல்லித்தான் மக்களுக்கு தெரிய வேண்டும் என்று இல்லை. ஆனால் அவரோடு நான் இருக்கும் போது என் கண் முன்பு அவர் செய்த செயல் எனக்கு பிரமிப்பை ஏற்படுத்தியது என்று அந்த பேட்டியில் உள்ள நடிகை குஷ்பு பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications