38 வருஷமா நான் கண்ணகியா வாழ்ந்துட்டு இருக்கிறேன்! அப்போ எப்படியோ அது போல தான் இப்பவும்! குஷ்பூ அதிரடி
சென்னை: நடிகை குஷ்பூ பேட்டி ஒன்றில் பேசும் போது நான் சென்னைக்கு வந்த பிறகு 38 வருஷங்களாக கண்ணகியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.
80ஸ் காலகட்டத்தின் இறுதியிலும் 90ஸ் காலகட்டத்திலும் பல படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்த குஷ்பூ இப்ப வரைக்கும் சினிமாவில் பிஸியான நடிகையாக இருக்கிறார். தமிழ் சினிமா ரசிகர்கள் கோவில் கட்டும் அளவிற்கு பிரபலமடைந்த குஷ்பூ இப்பொழுது அரசியலிலும் முக்கிய பிரபலமாக வலம் வருகிறார்.

ஆரம்பத்தில் கதாநாயகியாக நடித்து வைத்த குஷ்பூ இப்போது சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். அதுபோல தமிழ் சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமில்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி தொகுப்பாளராகவும், நிகழ்ச்சியில் நடுவராகவும் கலக்கி கொண்டு இருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் தன்னுடைய கணவர் சுந்தர் சி கதாநாயகனாக நடிக்கும் படங்களை அக்னி சினிமாஸ் என்ற பெயருடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வரும் குஷ்பூ பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினராக இருக்கிறார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது அவரிடம் நீங்கள் கண்ணகியா? என்று ஒரு செய்தியாளர் கேள்வி கேட்டு இருக்கிறார்.
அதற்கு குஷ்பூ ஆமாம் நான் கண்ணகி தான் சென்னைக்கு வந்து 38 வருஷம் ஆகுது. 38 வருஷமா கண்ணகியா தான் வாழ்ந்துட்டு இருக்கிறேன். மனசுல பட்டதை பேசுவேன், மனசில பட்டதை செய்வேன். அதில் எந்த மாற்றமும் கிடையாது. குஷ்பூ சுந்தர் ஆரம்பத்தில் எப்படி இருந்தாளோ இன்னைக்கு வரைக்கும் அப்படியே தான் இருக்கேன் என்று சிரித்தபடியே அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.
சமீபத்தில் சில வாரங்களுக்கு முன்பு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவிக்கு பிரியாணி கடை நடத்தி வந்த நபர் பாலியல் தொல்லை கொடுத்தது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அதற்காக குரல் கொடுத்து கொண்டிருக்கும் குஷ்பூ, தான் அரசியல்வாதியாக அந்த பெண்ணிற்கு நியாயம் கேட்கவில்லை.
ஒரு பெண்ணாகத்தான் அந்தப் பெண்ணிற்காக போராடிக் கொண்டிருக்கிறேன். அந்த பெண்ணிற்கு சரியான நீதி கிடைக்க வேண்டும் என்று பேசி இருக்கிறார். அதோடு தமிழ் சினிமா நடிகைகள் பலரும் கூட அந்த பெண்ணுக்காக எந்த பதிவுகளையும் வெளியிடவில்லை? அந்த பொண்ணுக்காக குரல் கொடுக்கவில்லை? என்று தன்னுடைய ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications