கமல்ஹாசன் இப்படி சொல்லுவாருன்னு நினைக்கல.. அஜித் மட்டும் தான் இப்படி செய்தார்.. நடிகை கிரண் ஓப்பன்
சென்னை: ஜெமினி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை கிரண் சமீபத்தில் தனக்கு சினிமா துறையில் ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து மனம் திறந்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதில் நடிகர் கமல்ஹாசனோடு அன்பே சிவம் திரைப்படத்தில் நடிக்கும் போது சூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட அனுபவம் குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
அதோடு தமிழ் நடிகர்களில் நடிகர் அஜித் மட்டும் தான் தன்னிடம் ஹிந்தியில் சாட்டிங் செய்வார். மத்த நடிகர்கள் யாரும் செய்யாததை அஜித் செய்தார் என்று அந்த பேட்டியில் கிரண் பேசி இருக்கையில் இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஜெமினி திரைப்படத்தில் தீவானா தீவானா, திம்சு கட்ட போன்ற பாடலுக்கு செம ஆட்டம் போட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை கிரணுக்கு அவருடைய புசுபுசுவென கன்னத்தை பார்த்து பல பேர் இவருக்கு ரசிகர்களாக மாறி இருந்தனர். முதல் திரைப்படத்தில் பப்ளியாகவும் துரு துருவென நடிப்பாலும் ரசிகர்களை சொக்க வைத்த கிரண் அடுத்ததாக வில்லன், அன்பே சிவம், தீவான், வின்னர், தென்னவன், திருமலை, நியூ என பல திரைபடங்களில் நடித்திருந்தார்.
அந்த நேரத்தில் ஹோலிவுட்டில் கனவு கன்னி இவர் தான் என்று சொல்லும் அளவிற்கு பெயர் வாங்கிக் கொண்டிருந்தார்.
அதுபோல இன்னுமும் பல நடிகர்களோடு முன்னணி நடிகையாக நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவர் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். அந்த நேரத்தில் சினிமாவில் இவர் நடிப்பை குறைத்து இருந்தாலும் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் போட்டோக்களை போஸ்ட் போடுவதில் அதிகமான ஆர்வம் காட்டி இருந்தார்.
அதிலும் இவர் கவர்ச்சி போட்டோக்கள் வெளியிட்டு வந்ததை தொடர்ந்து ஏன் இவ்வளவு கவர்ச்சி என்று சிலர் முகம் சுளித்தனர். அதோடு இவரிடம் பலர் தவறாக பேசியும் வந்திருக்கிறார்கள். அது பற்றி கூட சமீபத்தில் பேட்டிகளில் மனம் திறந்து பேசிக் கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் தான் இப்போது தன்னுடைய கெஸ்ட் ஹவுஸை சுற்றி காட்டி ஒரு ஹோம் டூர் வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.
அந்த வீடியோவில் தன்னுடைய வீட்டில் தானும் தன்னுடைய சகோதரரும் மட்டும்தான் இருக்கிறோம் என்றும் அவ்வப்போது அம்மா அப்பா வந்து போவார்கள் என்று க்யூட்டாக பேசியிருக்கிறார். அதுபோல தன்னுடைய சினிமா அனுபவங்கள் குறித்தும் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். அதில் அன்பே திரைப்படத்தில் இவர் நடிக்கும் போது சூட்டிங் ஸ்பாட்டுக்கு அதிகமான மேக்கப் போட்டுக் கொண்டு போய் நின்றிருக்கிறார்.
அதை பார்த்ததும் கமல்ஹாசன் இது என்ன? இப்படி எல்லாம் இருக்கவே கூடாது! இந்த படத்திற்கு இது செட் ஆகாது நோ மேக் அப், நோ லிப்ஸ்டிக் என்று சொல்லி அங்கிருந்த ஒரு டிஷ்யூ பேப்பரை எடுத்து அவரே முகம் முழுவதும் துடைத்து விட்டாராம். நான் எப்படி எல்லாம் கமல்ஹாசன் செய்வார் என்று அந்த நேரத்தில் நினைக்கவே இல்லை என்று சொல்லிய கிரண் அடுத்ததாக அஜித் பற்றி பேசி இருக்கிறார்.
அஜித்தோடு வில்லன் திரைப்படத்தில் கிரண் நடித்திருப்பார். அது பற்றி அவர் பேசுகையில் ஹேன்ட்ஸமான ஹீரோ, நேர்மையான ஹீரோ என்று அஜித்தை பற்றி அடுக்கிக் கொண்டே போகலாம். அதுபோல தமிழ் நடிகர்களிலேயே என்னிடம் முதல் முதலில் ஹிந்தியில் சாட் செய்தது அஜித் தான். அதனால் அவர் எனக்கு எப்போதும் ஸ்பெஷல் தான். அது மட்டுமல்லாமல் அஜித் என்னுடைய அம்மாவிடமும் நார்மலாக பேசிக் கொண்டிருந்தார் என்று அந்த பேட்டியில் கிரண் பேசியிருக்கிறார்.
-
பிரபுவின் ‘டூயட்’ நாயகி மீண்டும் வருகிறார்... 30 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி! எந்த ஹீரோவுடன் கம்பேக்? -
‘கருப்பு ஸ்டார்’ பட்டம் கொடுத்த ரசிகர்... உடனே திரிஷா கொடுத்த பதில்... இவ்வளவு இறங்கி பேசிட்டாரே! -
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
நயன்தாரா என்னை மாதிரி கஷ்டப்பட்டவங்க.. விக்னேஷ் சிவன் பழசை மறந்துட்டாரு! ஓபனாக பேசிய நடிகை சோனா -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
குடும்பங்களுக்குள் புகுந்து அவதூறு.. ‘குற்றம் நிரூபித்தால் உயிரோட விடக்கூடாது!’ குஷ்பு ஆவேச பேட்டி -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications