விஜய் படத்தால் வந்த வினை! சூட்டிங்கில் கெஞ்சினேன்.. ஆனாலும் விடல.. இப்படி பண்ணிட்டாங்க! கிரண் எமோஷனல்
சென்னை: நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலம் அடைந்த கிரண் அதற்குப் பிறகு விஜய் நடிப்பில் வெளியான திருமலை என்ற திரைப்படத்தில் ஒரு குத்து பாட்டுக்கு டான்ஸ் ஆடி இருந்தார்.
முன்னணி நடிகர்களோடு ஜோடியாக நடித்துக் கொண்டிருந்த கிரண் திடீரென்று குத்து பாடலுக்கு டான்ஸ் ஆடி இருந்தது அந்த நேரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் அதனால் தான் பட்ட அவஸ்தை குறித்து இப்போது கிரண் மனம் திறந்து பேசி இருக்கிறார்.

ஜெமினி படத்தில் தீவானா தீவானா பாடலில் க்யூட்டான 18 வயது பெண்ணாக அறிமுகமான கிரண் அடுத்தடுத்து சில திரைப்படங்களில் ரசிகர்களின் மனதை கவர்ந்த நிலையில் திடீரென்று யாரும் எதிர்பார்க்காத வகையில் திருமலை திரைப்படத்தில் "மலையாள பகவதி... மலையாள பகவதி" என்று ஒரு வித்தியாசமான கெட்டப்பில் விஜயோடு டான்ஸ் ஆடி இருந்தார்.
இந்த பாட்டு அந்த நேரத்தில் பெரிய அளவில் வெற்றி பெற்று இருந்தது. ஆனால் அந்த பாடலால் தான் பட்ட அவஸ்தை குறித்து கிரண் இப்போது மனம் திறந்து பேசி இருக்கிறார். அதாவது அதுவரைக்கும் நடிகை கிரண் அஜித், பிரசாந்த், கமல், விஜயகாந்த், விக்ரமுக்கு ஜோடியாக பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் திடீர் என்று இவர் திருமலை படத்தில் குத்து பாட்டுக்கு டான்ஸ் ஆடியது இவருடைய ரசிகர்கள் என்ன இவர் இப்படி இறங்கிவிட்டார் என்று குழம்பி வந்தனர்.
ஆனால் இந்த திரைப்படத்தில் கிரண் அப்படி டான்ஸ் ஆடுவதற்கு காரணம் வின்னர் திரைப்படம் தானாம். வின்னர் திரைப்படத்தில் நடிக்கும் போது ஒரு காட்சியில் கிரண் பிகினி உடை அணிந்து நடித்திருப்பார். அது மக்கள் மத்தியில் அதிகமாக வரவேற்பு பெற்றுவிட்டதாகவும் அதனால் அதற்குப் பிறகு அதிகமாக கிளாமர் வாய்ப்புகள் வரத் தொடங்கியது என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் கிரண் பேசி இருக்கிறார்.
அதற்குப் பிறகு தனக்கு அதிகமான கிளாமர் வாய்ப்புகள் வரத் தொடங்கியது என்று கிரண் பேசியிருக்கிறார். அந்த மாதிரி தான் திருமலை வாய்ப்பு வந்தபோதும் சரி என்று இவரும் டான்ஸ் ஆடுவதற்கு சம்மதம் தெரிவித்து இருக்கிறார். ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் அந்த பாடலுக்கான காஸ்டியூம் கொடுத்ததும் எனக்கு ஒரே ஷாக் ஆகிவிட்டது என்று கிரண் சொல்லி இருக்கிறார். அதற்கு காரணம் அந்த ட்ரெஸ் தொப்புள் தெரிகிற மாதிரி இருந்திருக்கிறது.
அந்த ட்ரெஸ்ஸை பார்த்ததும் நான் ஷாக் ஆகி நான் இந்த டிரஸ்ஸை போட முடியாது.. நான் தொப்புளை காட்ட மாட்டேன் என்று எத்தனையோ முறை சொன்னேன். அதற்கு காரணம் என்னன்னா, என்னுடைய தொப்புள் பெரியதாக இருக்கும். அதனால்தான் நான் வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் அங்கிருந்தவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை. பிறகு வேறு வழியில்லாமல் நான் டான்ஸ் ஆடினேன் ஆனால் அந்தப் பாட்டலுக்குப் பிறகு என்னை தொப்புள் ராணி என்று ரசிகர்கள் கூப்பிட தொடங்கி விட்டார்கள் என்று கிரண் அந்த பேட்டியில் பேசியிருக்கின்றார்.
-
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications