குஷ்பு கர்ப்பமாக இருந்தப்போ! என்னை அதிகாலை 4 மணிக்கு தெரு தெருவா அலையவிட்டார்! சுந்தர் சி கலகல
சென்னை: நடிகை குஷ்பு கர்ப்பமாக இருந்த காலத்தில் தன்னை டார்ச்சர் செய்ததாக அவருடைய கணவரும் இயக்குநருமான சுந்தர் சி கலகலப்பான பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கலாட்டா சேனலுக்கு இயக்குநர் சுந்தர் சி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இங்கு ஏராளமான இளைஞர்கள் இருப்பதால் அவர்களுக்கு ஒரு விஷயத்தை சொல்கிறேன். பெண்கள் கர்ப்பமானால் கணவன்மார்களை எப்படியெல்லாம் டார்ச்சர் செய்யலாம் என யோசிப்பார்கள்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் என்ன சொன்னாலும் ஆண்கள் செய்வார்கள். அந்த நேரத்தில் அவர்கள் செய்யும் டார்ச்சரை தாங்க முடியாது. விடியற்காலை 4 மணிக்கு எழுப்பி ஐஸ்கிரீம் வாங்கி வர சொல்வார்கள். இதற்காக கடை கடையாக ஏறி இறங்கி அலைய வேண்டியதாக இருக்கும்.
ஆனால் எல்லாவற்றையும் தாண்டி பெண்களின் முகம் கர்ப்ப காலத்தில் அழகாக இருக்கும். பிறக்கும் குழந்தைக்காக நாம் எல்லாவற்றையும் பொறுத்துக்கலாம். அது போல் ஒவ்வொரு ஆணையும் கேட்டால்தான் அவர்கள் ஒவ்வொரு தனித்துவமான கதைகளை சொல்வார்கள்.
என் அப்பா எனக்கு கிடைத்த வரம். அவரை போல் எல்லாருக்கும் கிடைக்க வேண்டும் என நான் விரும்புவேன். என் அப்பா எங்களிடம் இருந்ததில் 50 சதவீதமானது நான் என் குழந்தைகளிடம் பாசத்தை காட்ட வேண்டும் என இருந்தேன். நான் குஷ்புவுக்கும் இந்த நிமிடம் வரை தந்தையாகவே இருக்கிறேன். குழந்தைகளுக்காக நாம் என்னதான் சொத்து சேர்த்து வைத்தாலும் அவர்கள் கஷ்டப்பட்டு முன்னுக்கு வர வேண்டும்.
என் மகள்கள் இருவருமே கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வெல்லும் போது நான் பெருமிதம் கொள்வேன். திருமணத்திற்கு பிறகு பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்க வேண்டும் என்றில்லை. குஷ்புவும் திருமணமான புதிதில் அப்படித்தான் இருந்தார். நான்தான் அவரை ஊக்கப்படுத்தி எங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் சீரியல்களில் நடிக்க வைத்தேன்.
எனக்கு முதல் குழந்தை பிறந்தது. அதன் பிறகு ஒரு முறை குஷ்பு கர்ப்பம் தரித்தார். ஆனால் அது கலைந்துவிட்டது. பிறகுதான் எனது இரண்டாவது மகள் பிறந்தார். நானும் குஷ்பும் எங்களுக்கு இரு பெண் குழந்தைகள் வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டோம். குஷ்பு இல்லாத போது நானும் என் மகளும் படம் பார்த்துக் கொண்டிருந்தால் நான் உடனே சொல்வேன். "பாரு உங்கம்மாவால எனக்கு இதெல்லாம் மிஸ் ஆகிடுச்சி" என்பேன்.
நான் எந்த சோசியல் மீடியா பக்கங்களிலும் இல்லை. ஆனால் குஷ்பு எதுவாக இருந்தாலும் சமூகவலைதளத்தில் போட்டுவிடுவார்கள். அப்போதெல்லாம் அதாவது சமூகவலைதள பக்கங்கள் இல்லாத போது பிரஸ்ஸை அழைத்து பேட்டி கொடுத்துவிடுவார். பெண்களிடம் பேசுவதற்கே நான் கூச்சப்படுவேன்.
ஆனால் மணிவண்ணன் சாரிடம் அசிஸ்டென்ட்டாக வேலை பார்க்கும் போது நான் கொஞ்சம் இங்கிலீஷ் பேசுவதால் இந்தி ஹீரோயின்களிடம் டயலாக் சொல்ல சொல்வார். எனக்கு கொஞ்சம்தான் ஆங்கிலம் தெரியும். அப்படி பேசி பேசி என் ஆங்கில திறமையும் அதிகரித்தது. நான் பெண்களிடம் இருந்த கூச்ச சுபாவமும் நீங்கியது. இவ்வாறு சுந்தர் சி தெரிவித்தார்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications