இமான் சில விஷயங்களை மறைச்சுட்டாரு.. ஏற்கனவே சில முறை அப்படி நடந்திருக்கு.. பிரபலம் சொன்ன பகீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இசையமைப்பாளர் இமான் சில நாட்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன் பற்றி பரபரப்பாக பேட்டி ஒன்றில் பேசியிருந்தார்.

இது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி என்ன நடந்தது என்ற விவாதம் வேகமாக பரவி வருகிறது.

 actress Kutty Padmini has said in Iman and Sivakarthikeyan issue

இமான் சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு சிவகார்த்திகேயன் இப்ப வரைக்கும் விளக்கம் கொடுக்காமல் இருக்கும் நிலையில் இது பற்றி நடிகை குட்டி பத்மினி சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

இணையத்தில் சில நாட்களுக்கு முன்பு லியோ திரைப்பட ஃபீவர் அதிகமாக இருந்த நிலையிலே அந்த நேரத்தில் இமான் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார். அதில் எதார்த்தமாக பேசிக் கொண்டிருக்கும்போது சிவகார்த்திகேயன் பற்றி சில கேள்விகள் கேட்கப்பட்டது.

ஆரம்பத்தில் பல திரைப்படங்கள் சிவகார்த்திகேயன் மற்றும் இமான் இருவரும் காம்பினேஷனில் செய்திருந்தனர். அது பெரிய அளவில் வெற்றியும் பெற்றது. ஆனால் இப்போது ஏன் நீங்கள் சிவகார்த்திகேயனோடு சேர்ந்து எந்த ப்ராஜெக்ட் செய்யவில்லை என்று கேள்வி கேட்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு இமான் இனி சிவகார்த்திகேயனோடு சேர்ந்து படம் பண்ணுவேன் என்பது கனவிலும் நடக்காத காரியம் என்றும் சிவகார்த்திகேயன் எனக்கு பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்து விட்டார்.

எல்லா விஷயத்தையும் சொல்லிவிடலாம் ஆனால் அப்படி சொன்னால் என்னுடைய குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கும் அதற்காக நான் எதையும் இப்போது சொல்ல விரும்பவில்லை என்று கூறி இருந்தார். இந்த நிலையில் சில விமர்சகர்கள் சிவகார்த்திகேயன் பற்றி பல தகவல்களை பகிர்ந்து வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் இமானின் முன்னாள் மனைவி மோனிகா சிவகார்த்திகேயன் மீது எந்த தப்பும் இல்லை.

அவர் ஒரு ஜென்டில்மேன். எனக்கும் விவாகரத்து நேரத்தில் அதை வேண்டாம் என்று இமானிடம் சிவகார்த்திகேயன் பேசினார். அதனால் தான் சிவகார்த்திகேயனை இமானுக்கு பிடிக்கவில்லை என்று பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். இப்படியாக இருக்கும் நிலையில் நடிகை குட்டி பத்மினி சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அதில் நான் இமானின் குடும்ப நண்பர். பல வருடங்களாகவே எங்களுக்கு இமானுடைய அப்பாவும் இமானையும் நன்றாக தெரியும்.

நான் சில நாட்களுக்கு முன்பு வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்தபோது திடீரென்று போனை எடுத்து பார்த்தேன். அப்போது இமான் வீடியோ தான் ட்ரெண்டிங்கில் இருந்து. அதை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்து விட்டேன். காரணம் இப்படி ஒரு வீடியோவில் பேசுவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இது பற்றி பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நடந்தது என்ன என்பதை பற்றி எனக்கு தெரிந்ததை நான் சொல்ல இருக்கிறேன். அதில் இமானுக்கும் அவருடைய முன்னாள் மனைவி மோனிகாவிற்கும் இடையே சில பிரச்சனைகள் நடந்து கொண்டே இருந்தது. வேலை விஷயமாக இமான் சில நாட்கள் வெளியே தங்க வேண்டியது இருந்து வீட்டிற்கு வரும்போது வீட்டிற்குள் இருக்கும் போது இவர்களுக்கு இடையே அதிகமான கருத்து வேறுபாடுகள் தான் வந்து கொண்டிருந்தது.

ஒரு இரண்டு மூன்று முறை மோனிகா அவரோடு சண்டை போட்டுக் கொண்டு வீட்டை விட்டு போயிருக்கிறார். அப்போது நானே சமாதானம் செய்து அவரை மீண்டும் ஒன்றாக வாழ வைத்திருக்கிறேன். மோனிகா எனக்கே போன் பண்ணி பேசி ஆனால் ஒரு கட்டத்தில் இவர்கள் இருவருக்கும் ஒத்துப் போகவில்லை. அதனால் தான் பிரிந்து விட்டனர். ஆனால் இந்த விஷயத்தை பற்றி இமான் எதையுமே ஆரம்பத்தில் என்னிடம் சொல்லவில்லை.

ஒரு முறை இமானுடைய அப்பா எனக்கு போன் பண்ணி உங்ககிட்ட பேச முடியுமா? நேரில் சந்திக்கலாமா என்று கேட்டார் நான் கண்டிப்பா எப்ப வேணாலும் வாங்க சார் என்றேன். அப்போது இமானும் அவருடைய அப்பாவும் அப்போதுதான் எனக்கு உங்க வீட்டில் நடக்கும் விஷயங்களைப் பற்றி சொன்னார்கள். நான் இமானுடைய முதல் திருமணத்திலும் இருந்தேன். இமானுக்கு இரண்டாவது திருமணம் நடக்கும் போதும் இருந்தேன்.

இமான் அவருடைய அப்பாவுக்கு ஒரே பிள்ளை. அதனால் அளவுக்கு அதிகமான பாசத்தை பெற்றோர் வைத்திருந்தனர். இமானுடைய அப்பாவுக்கும் மோனிகாவிற்கும் செட்டாகவில்லை. அதுவும் இவர்களுடைய பிரச்சனைக்கு காரணமாக இருந்தது. இமானுக்கும் அவருடைய அப்பா மீது அவ்வளவு பாசம். அதனாலயே தனது குடும்பம் அமைதியாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். என மேலும் சில தகவல்களையும் அந்த பேட்டியில் குட்டி பத்மினி பகிர்ந்து இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+