சிம்புவோட அம்மா உஷா என் சொந்த அக்கா.. எங்க வீட்ல தான் வளர்ந்தாங்க! அந்த கிசுகிசு! - குட்டி பத்மினி
சென்னை: நடிகை குட்டி பத்மினி பேட்டி ஒன்றில் பேசும்போது நடிகர் சிம்புவின் அம்மா உஷா என்னுடைய சொந்த அக்கா தான், என்னுடைய வீட்டில் தான் வளர்ந்தாங்க. சிம்பு சின்ன பையனாக இருக்கும்போது ரொம்பவும் அழகாக இருப்பான். அவனுடைய திறமைகள் எங்கள் எல்லோரையும் வியக்க வைக்கும் என்று பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
நடிகை குட்டி பத்மினி பல வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். அதோடு சீரியலையும் இயக்கியிருக்கிறார். அதுபோல தன்னுடைய youtube சேனலில் பல நடிகைகள் நடிகர்களை பேட்டி எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கலந்து கொண்ட போது நடிகர் சிம்புவோடு எடுத்த புகைப்படம் பற்றி பேசி இருந்தார்?

அதில் அவர் பேசுகையில், நடிகர் சிம்பு என்னுடைய சொந்த அக்கா உஷா உடைய பையன் தான். இது பலருக்கும் தெரிந்திருக்காது. என்னுடைய அம்மாவின் சொந்த தங்கச்சியின் பொண்ணு தான் உஷா. என்னுடைய அம்மாவிற்கு என்னை விட உஷாவை தான் ரொம்ப பிடிக்கும். அவங்க அம்மா கூட கொஞ்சம் பிரச்சனை வந்துச்சு, அந்த நேரத்தில் உஷா எங்க வீட்டில் தான் வளர்ந்தாங்க.
ரொம்ப வருஷமா எங்க வீட்டில் இருந்தாங்க. என்னுடைய அம்மா உஷாவை தான் என்னுடைய பொண்ணு என்று சொல்லுவாங்க. என் மேல அவங்களுக்கு கொஞ்சம் கோபம் இருந்தது. நான் ஸ்ரீதேவி மாதிரி சினிமாவில் பெரிய ஆளா வருவேன் என்று எதிர்பார்த்தாங்க. ஆனா அப்படி வரல என்ற போது அவங்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமா இருந்தது.

திருமண விஷயத்தில் நான் எடுத்த முடிவு அம்மாவுக்கு பிடிக்கவில்லை. ஒருவேளை எனக்கு கூட என்னுடைய பொண்ணு நான் அவளிடம் சொன்ன மாதிரி அவள் ஒரு நல்ல நிலைமைக்கு வராமல் திருமணம் செய்திருந்தால் எனக்கும் அதே கஷ்டம் இருந்திருக்கும். எல்லா அம்மாவிற்கும் தன்னுடைய பொண்ணு நல்லா இருக்க வேண்டும் என்பது ஆசை தான், அது மாதிரித்தான் என்னுடைய அம்மாவும் ஆசைப்பட்டாங்க.
அதுபோல உஷா அக்கா சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது பாக்கியராஜ் சாரோடு சேர்ந்து நடிச்சாங்க. அந்த நேரத்தில் அவங்க இருவருக்கும் காதல் என்று கிசுகிசு வந்தது. ஆனால் அது கொஞ்சம் கூட உண்மை கிடையாது. உஷாவை ராஜேந்தர் லவ் பண்ணி கல்யாணம் பண்ணுனது எங்க வீட்டுக்கு தெரியும்.
இருவருடைய காதல் ரொம்பவும் ஸ்ட்ராங்கா இருந்தது. ராஜேந்திரனை போல சினிமாவில் ஒரு ஜென்டில்மேன் இல்லை என்று சொல்வேன். அதுபோல சிம்பு அவங்க அம்மாவுக்கு ரொம்ப செல்லம். எங்க குடும்பத்துக்கே செல்லம் என்று தான் சொல்லணும். சிம்பு சின்ன வயசுல டயலாக் கொஞ்சம் கூட தப்பு இல்லாமல் அழகாக சொல்லுவாரு.
அதனால நாங்க எல்லாரும் சிம்புவை ரொம்ப கொஞ்சுவோம். அது போல அழகிலும் சிம்புவை அடிச்சுக்க முடியாது. அவ்வளவு அழகாக இருப்பாரு. அதனால் எனக்கு எப்பவுமே சிம்புவை ரொம்ப பிடிக்கும் என்று அந்த பேட்டியில் குட்டி பத்மினி பேசியிருக்கிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications