லட்சுமி வீட்டில் நடிகைகள்.. கருணாநிதி மகனுடன் நடிக்க பயந்தாங்களாமே.. "தைரிய லட்சுமி".. பிரபலம் பளீர்
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க. முத்துவுடன், அன்று இணைந்து நடிக்க பல நடிகைகள் தயங்கியபோது, தைரியமாக நடிக்க முன்வந்தவர்தான் பிரபல நடிகை லட்சுமி என்று மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் கூறியிருக்கிறார்.
Behind cinema என்ற யூடியூப் சேனலுக்கு பாண்டியன் பேட்டி தந்துள்ளார்.. அதில், மூத்த நடிகை லட்சுமி எப்படி திரையுலகிற்குள் வந்தார் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.. "கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக திரைப்பட உலகில் பேசப்பட்ட பெயர்தான் லட்சுமி.. வெங்கட மகாலட்சுமி என்பதுதான் இவரது முழுபெயர்..

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, லட்சுமி மரணமடைந்துவிட்டார் என்று திடீரென செய்திகள் வெளியாகி பரபரப்பை தந்துவிட்டன. கடைசியில் யாரந்த லட்சுமி என்று பார்த்தால், பாண்டிச்சேரி மணக்குள விநாயகர் யானையின் பெயர் லட்சுமி.. உடனே நடிகை லட்சுமி பதறிப்போய், நான் இறக்கவில்லை, அது யானை பெயர் லட்சுமி" என்று லட்சுமியே அறிக்கை வெளியிடும் அளவுக்கு நிலைமை வந்தது. அந்த அளவுக்கு தமிழகத்தில் அறிமுகமான பெயர்தான் லட்சுமி.
நடிகைகள் குடும்பம்: லட்சுமியின் பாட்டி, லட்சுமியின் அம்மா, லட்சுமியின் மகள் என அத்தனை பேருமே நடிகைகள்.. ஒரே குடும்பத்தில் 4 தலைமுறை நடிகைகள் ஆவர்.. இவங்க அப்பா ஆந்திரா பிராமணர்.. நடிகையும், நாட்டியக்கலைஞருமான அம்மா ருக்மணி, தஞ்சாவூர் பிராமணர் ஆவார். இவர்கள் இருவரும் ஸ்ரீவள்ளி என்ற படத்தில் சேர்ந்து நடிக்கும்போது, இருவருக்கும் காதல் பற்றிக் கொண்டது.
மயிலாப்பூர் சிவசாமி பள்ளிக்கூடத்தில் லட்சுமி படித்தார்.. படிக்கும்போதே நாட்டியம், உள்ளிட்ட கலைகளில் படுசுட்டியாக திகழ்ந்தார்..
தெலுங்கில் எடுக்கப்பட்ட ஸ்ரீவள்ளி என்ற படம் மறுபடியும் 28 வருடத்துக்கு பிறகு தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் லட்சுமி. ஆனால், ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டாராம். எனினும் குடும்பத்தினர் நடிக்க வைக்கவே லட்சுமியை தயார் செய்கிறார்கள்.
ஜீவனாம்சம்: ஸ்ரீவள்ளி என்ற முதல் படத்திலேயே அருமையாக நடித்து, தமிழ் திரைப்பட உலகத்தை கெட்டியாக பிடித்து கொண்டுவிட்டார்.. பிறகு, 1968-ல் ஜீவனாம்சம் படத்தில் 2வது கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமானது.. 2வது கதாநாயகி என்றாலே லட்சுமி என்று புகழ் பெற்றார்.. இதற்கு பிறகு, சிவாஜி, எம்ஜிஆருடன் பல படங்களில் நடித்தார். ராஜராஜ சோழன் படம் லட்சுமிக்கு தமிழகமெங்கும் பெயரை பெற்றுத்தந்தது.
அதிமுக, திமுக கட்சிகளுக்கிடையே உச்சக்கட்ட பூசல் இருந்தபோது, தன்னுடைய மகன் மு.க. முத்துவை, எம்ஜிஆர் போல உருவாக்க வேண்டும் என்று விரும்புகிறார் கருணாநிதி. இதற்காக எம்ஜிஆர் போன்ற தோற்றத்திலேயே நடிக்க வைக்க விரும்பினார்.. இதை வைத்து எடுக்கப்பட்ட படம்தான் பிள்ளையோ பிள்ளை..
தைரிய லட்சுமி: ஆனால், அவருடன் கதாநாயகியாக நடிக்க பலரும் மறுக்கிறார்கள். எம்ஜிஆருக்கு எதிராக, எம்ஜிஆரின் தோற்றத்தில் காணப்படும் மு.க.முத்துவுடன் நடித்தால், தாங்கள் சினிமா உலகிலிருந்தே புறக்கணிக்கப்பட்டு விடுவோமோ என்று பயப்படுகிறார்கள். யாருமே நடிக்க முன்வராதபோது, தைரியமாக நடிக்க முன்வந்தவர்தான் லட்சுமி" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications