Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாப்பாட்டை தடுக்க முயற்சி! வெளியே அனுப்பிடாதீங்க.. மகாநதி சீரியல் நடிகை வெளியிட்ட திடீர் பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை லட்சுமி பிரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்ட பதிவு இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விஜய் டிவியில் மகாநதி சீரியல் டிஆர்பியில் முன்னணி இடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலுக்கு அதிகமான இளைஞர்கள் ரசிகர்களாக இருக்கின்றனர். இந்த சீரியலை பாரதி கண்ணம்மா சீரியலை இயக்கிய பிரவீன் பென்னட் தான் இயக்குகிறார்.

Vijay TV Mahanadi Serial

அதுபோல இந்த சீரியலில் கதாநாயகியாக லட்சுமி பிரியா நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக சாமிநாதன் நடிக்கிறார். அதுபோல பல சின்னத்திரை பிரபலங்களும் இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். அதிலும் விஜய் காவிரி ஜோடிக்கு வி கா (vika) என்ற பெயரில் அதிகமான ஃபேன்ஸ் பேஜ் இருக்கின்றன.

Vijay TV Mahanadi Serial

இந்த சீரியல் தொடங்கி 500 எபிசோடு சமீபத்தில் தான் முடிவடைந்தது. இந்த சீரியலின் 500 ஆவது எபிசோடு வெற்றி விழாவை சீரியல் குழுவினர்கள் ரசிகர்களோடு சேர்ந்து கொண்டாடி இருந்தனர். அப்போது ரசிகர்கள் கேட்க நினைக்கும் கேள்விகளை இயக்குனர் மற்றும் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களிடமும் கேட்டிருந்தார்கள்.

அதற்கு அனைவருமே பதிலுக்கு சொல்லி இருந்தார்கள். இந்த வீடியோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதே நேரத்தில் 500 ஆவது எபிசோடு கொண்டாட்டத்தை கொண்டாடிய சீரியல் குழுவினர் மீது சில நெகட்டிவ் கமெண்ட்களும் வருகிறது. இதன் காரணமாக நடிகை லட்சுமி பிரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார்.

Vijay TV Mahanadi Serial

அதில், "நான் உங்களிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன் தயவுசெய்து அடுத்தவர்களுடைய சாப்பாட்டை கெடுப்பதற்கு நீங்கள் காரணமாக இருக்கிறீர்கள். உங்களால் ஒருவர் வெளியேற வேண்டும் என்று நினைக்காதீர்கள். உங்கள் வார்த்தையில் செயல்களிலும் கவனமாக இருப்பது அடுத்தவர்களை காயப்படுத்தை தடுக்கும்" என்று கையெடுத்து கும்பிட்டபடி அந்த பதிவில் வேண்டுகோள் வைத்து இருக்கிறார்.

Vijay TV Mahanadi Serial

ஏற்கனவே இந்த சீரியலில் ரசிகர்களின் ஃபேவரைட் ஜோடியாக இருக்கும் விஜய் காவிரி ஜோடி பிரிந்ததை ரசிகர்கள் பலரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கருத்து கூறி வருகிறார்கள். அதன் காரணமாக இப்படி கமெண்ட் கொடுத்து இருக்கிறார்களா அல்லது காவிரியின் முன்னாள் காதலன் நிவின் மற்றும் விஜய் ரசிகர்கள் கமெண்டில் சண்டை போட்டு வருவதால் லட்சுமி இப்படி ஒரு பதிவு போட்டு இருக்கிறாரா என்று குழப்பம் ஏற்படுகிறது.

Vijay TV Mahanadi Serial

அதுபோல காவிரி மற்றும் விஜய் காண்ட்ராக்ட் திருமணம் குடும்பத்தினருக்கு தெரிய வந்ததும் காவிரியின் அம்மா காவிரியை கூட்டிக்கொண்டு வேறு ஊருக்கு வந்து விட்டார். அதோடு விஜயை அடித்து அவமானப்படுத்தி வீட்டை விட்டு வெளியேற்றிருக்கிறார். இது குறித்து காவிரியின் அம்மாவை பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். அதற்காக லட்சுமி இந்த பதிவு வெளியிட்டாரா? என்ற கேள்விகளும் எழும்பி வருகிறது. இது குறித்து லட்சுமி பிரியா விரைவில் விளக்கம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Vijay TV Mahanadi Serial
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+