3வது பெண் குழந்தை பிறந்த 38 நாளில்.. மஸ்கட்டில் நடந்த வேதனை! லட்சுமி ராமகிருஷ்ணன் எமோஷனல்
சென்னை : சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தனக்கு மூன்று குழந்தைகள் பிறந்த போது தன்னை சமுதாயம் மற்றும் குடும்பத்தினர்கள் பார்த்த விதம் மற்றும் அந்த குழந்தைகளை தான் எப்படி வளர்த்தெடுத்தார் என்பது பற்றி பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
லட்சுமி ராமகிருஷ்ணன் நடிகையாக அவரது அறிமுகம் மலையாளத்தில் இருந்தாலும் தமிழில் நாவல் ,பிரிவோம் சந்திப்போம் போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து எல்லாம் அவன் செயல், பாஸ் என்ற பாஸ்கரன், விண்ணைத்தாண்டி வருவாயா, நான் மகானல்ல, உட்பட 30 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் .இயக்குனர் மிஷ்கினின் யுத்தம் செய் படத்தில் நடித்த லட்சுமி ராமகிருஷ்ணன் அந்தப் படத்தின் கதாபாத்திரத்திற்காகவே மொட்டை அடித்துக்கொண்டு நடித்திருந்தார்.

தன்னுடைய கதாபாத்திரத்திற்காக அவர் செய்த இந்த செயல் அந்த நேரத்தில் பலரால் பாராட்டப்பட்டது. அவருக்கு பல விருதுகளையும் பெற்று தந்தது. தன்னுள் இருக்கும் இயக்குனர் திறமைக்கும் வேலை கொடுக்கும் பொருட்டு ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, வீட்டுஉரிமையாளர்,அம்மானி போன்ற நான்கு படங்களை இயக்கியுள்ளார்.
பல படங்கள் நடித்திருந்தாலும், சில படங்களை இயக்கியிருந்தாலும்,ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் மிகவும் பிரபலத்தை பெற்றிருந்தார்.பிற குடும்பங்களின் பிரச்சனைகளை பொது வெளியில் பேசுவது குறித்து பல விமர்சனங்களை இவர் சந்தித்து வந்தாலும், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன் மூலம் ஒரு குடும்ப பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கிறது என்று தன் பக்கம் உள்ள நியாயத்தை கூறிக்கொண்டு நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுத்து வழங்கினார்.
திடீர் சர்ப்ரைஸ்.. திருமண கோலத்தில் ஜோயா.. வெட்கத்தோடு சொன்ன வார்த்தை.. குவியும் வாழ்த்துக்கள்
இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை குறித்து வரும் பல கலாய்ப்புகளையும் மீம்ஸ் கண்டெண்டுகளை எல்லாம் மனதில் ஏற்றிக் கொள்ளாமல் சமூக பிரச்சினைகளுக்கு தேவையான போது தன் குரலை கொடுத்து வந்தார்.ஆனால் பல்வேறு எதிர்ப்புகளால் அந்த நிகழ்ச்சி முடிவுக்கு வந்துவிட்டது. அதற்குப் பிறகு சினிமா துறையில் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவங்கள் பற்றி பேசி இருக்கிறார். அதில் அவர் பேசுகையில் எனக்கு மூன்று பெண் குழந்தைகள். அதிலும் மூன்றாவது பெண் குழந்தை பிறந்து 38 வது நாளில் நாங்க மஸ்கட் போயிட்டோம். அப்போ எல்லோரும் எங்களை பாவமா பாப்பாங்க, அது வேதனையாக இருக்கும்.
ஐயோ இவங்க மூணு பெண் குழந்தைகள் வைத்து எப்படி வளர்க்க போறாங்கன்னு எல்லோரும் பேசுவாங்க. ஆனால் நாங்க சுத்தமா அதைப் பற்றி அந்த நேரத்தில் யோசிக்கவே இல்ல. நம்முடைய குழந்தைகள் நாம் வளர்க்க போறோம் என்று நினைத்திருந்தோம். ஆனால் இப்போ அதைப்பற்றி யோசிக்கும் போது தெரிகிறது... உண்மையில் பெண்களை வளர்ப்பது கஷ்டம் என்று எனக்கு இப்போதுதான் தெரிகிறது.
ஏனென்றால் பெண்கள் ரொம்பவும் எமோஷனலானவங்க. அவர்களுடைய இளமைப் பருவம், சேஃப்டி எல்லாம் பார்க்க வேண்டியது இருக்கு. அவர்களை நல்ல நிலையில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று பல்வேறு பிரச்சனைகள் இருக்கிறது. அது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண் குழந்தைகளுக்கும் இதே பிரச்சனைகள் தான் இருக்கிறது. ஆனால் எங்கள் குழந்தைகள் 30 வருடத்திற்கு முன்பு இருந்த சூழ்நிலை இப்போது இல்லை என்பது எனக்கு புரிகிறது என்று அந்த பேட்டியில் லட்சுமி ராமகிருஷ்ணன் பேசியிருக்கிறார்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications