ரஜினி இதற்கு பதில் சொல்லியே ஆகணும்.. அந்த வார்த்தை சொல்லி ஏமாத்திட்டாரு! நடிகை லட்சுமி பகீர்
சென்னை: 80ஸ் காலகட்டத்தில் கதாநாயகியாக இருந்து இப்போ வரைக்கும் குணச்சித்திர வேடங்களில் நடித்துவரும் நடிகை லட்சுமி நடிகர் ரஜினிகாந்த் சில வருடங்களுக்கு முன்பே சொன்ன வார்த்தையை இப்போ வரைக்கும் செய்யல அதனால் அவர் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
அதாவது லட்சுமி ரஜினிகாந்த் ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது நான் டைரக்ட் பண்ண போற படத்துக்கு நீ தான் கதாநாயகி என்று சொல்லி இருந்தார். ஆனால் எப்போ அந்த படத்தை இயக்கப் போகிறார் என்று லட்சுமி கேள்வி கேட்டிருக்கிறார். அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்த லட்சுமி அந்த நேரத்திலேயே அம்மாவாகவும் அக்காவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்தார். இந்த நிலையில் சில வருடங்களாக நடிப்பிற்கு பிரேக் விட்டிருந்த லட்சுமி இப்போது மீண்டும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்து பேசி இருந்தார்.
அப்போது நான் நடித்துக் கொண்டிருந்த ஆரம்ப காலகட்டத்தை எல்லாம் மறக்கவே முடியாது. அந்த நேரத்தில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த நேரத்திலேயே எனக்கு அம்மாவாகவும் மாமியாராகவும் நடிக்க வாய்ப்பு வந்தது. அதையெல்லாம் நான் மறுக்கவும் இல்லை. சில திரைப்படங்களில் நான் அந்த நேரத்திலேயே டையெல்லாம் அடித்துக் கொண்டு நடித்துக் இருக்கிறேன் அது போல சூட்டிங் ஸ்பாட்டில் கூட பல நடிகைகள் என்னிடம் அவர்களுடைய குடும்ப பிரச்சனைகளை பேசுவார்கள்.
அதிலும் நடிகை ஸ்ரீவித்யா போன்றோர் என்னிடம் பேசுவதை பார்த்து நான் அவர்களிடம் என்ன உங்க குடும்ப விஷயத்தை என்கிட்ட பேசுறீங்களே என்று கேட்டபோது கூட அவர்கள் உன்கிட்ட சொன்னாதான் அந்த விஷயம் வெளியே போகாது என்று சொல்லுவாங்க எனக்கு அது சிரிப்பா தான் இருக்கும். பிறகு நான் வீட்டிற்கு வந்துவிட்டால் எந்த தொந்தரவும் இல்லாமல் இருக்க ஆசைப்படுவேன்.
எனக்குன்னு வீட்டில் ஒரு ஊஞ்சல் இருக்கிறது. அதில் போய் கொஞ்ச நேரம் இருந்தால் மனம் அவ்வளவு இலகுவாக மாறிவிடும். பிறகு கொஞ்ச நேரம் புத்தகம் படிப்பேன். அதோடு என்னுடைய குழந்தையை பார்த்துக் கொள்வேன். குழந்தையை பார்த்துக் கொள்வது என்னுடைய முக்கிய வேலையாக இருந்தது அதுபோல வீட்டிற்கு பல உறவினர்கள் வந்து போய்க் கொண்டிருப்பார்கள். அவர்களிடமும் கொஞ்ச நேரம் பேச தான் செய்வேன்.
அப்படித்தான் என்னுடைய வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது .அதுபோல நான் நடித்த நேரத்தில் மறக்க முடியாத சில சம்பவங்களும் இருக்கிறது. ஒரு முறை நான் கேரளாவில் நடித்துக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் பாலச்சந்தர் சார் போன் பண்ணி நாளைக்கு சூட்டிங் இருக்கு வந்துரு என்று சொன்னார். நான் எப்படி சார்...? இப்போ இங்க நடிச்சிட்டு இருக்கேன் வரமுடியாது என்று சொன்னேன். அதற்கு அவர் அது எப்படியாவது வந்துரு நாங்க உனக்கு ட்ரெயின் டிக்கெட் ரெடி பண்ணி இருக்கோம் என்று சொல்லிவிட்டார்.
பிறகு வேறு வழியில்லாமல் நான் நடிச்சி கொண்டிருந்த படத்தின் இயக்குனரிடம் பேசி சம்மதம் வாங்கி இங்கே நடிக்க வந்தேன். அந்த படம் நெற்றிக்கண் திரைப்படம். அந்த நெற்றிக்கண் திரைப்படத்தில் நான் நடித்த காட்சிகள் ரொம்பவே குறைவாக இருந்ததால் இந்த காட்சியை நடிப்பதற்காகவா என்னை இவ்வளவு அவசரமா வர வச்சீங்க என்று நான் கேட்டேன். அதற்கு ரஜினிகாந்த் சார் எனக்காக ஒரு காட்சியை உருவாக்கி தந்தார்.
அவர்தான் நான் ரூமில் வைத்து அடி வாங்குவது போன்ற காட்சியை மாற்றி வைத்தது. அப்போ இன்னொரு வார்த்தையும் சொன்னார் அதாவது நான் அடுத்ததா இயக்கப்போற படத்தின் கதாநாயகி நீ தான் என்று சொன்னார். அதனால் நான் இப்ப வரைக்கும் காத்துக் கொண்டிருக்கிறேன். அதுபோல ரஜினிகாந்த்தை நான் நேரில் பார்த்தால் இதை கேட்காமல் விடமாட்டேன் என்று அந்த பேட்டியில் லட்சுமி பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications