அந்தக் காட்சியில் நடிக்க தயங்கிய லதா..எம்ஜிஆர் செய்த செயல்..பல வருடம் கழித்து மனம் திறந்த நடிகை
சென்னை: எதிர்பாராமல் யாரேனும் செய்த செயல் அந்த நேரத்தில் பெருசா தெரியலனாலும் பல வருடம் கழித்து அது வியப்பாக இருக்கும்.
அதுதான் இப்போ நடிகை லதாவின் வாழ்க்கையிலும் நடந்தது என்று அவர் கூறி இருக்கிறார்.
தன்னுடைய முதல் திரைப்படத்தில் தனக்கு இருந்த தயக்கத்தை எம்ஜிஆர் சரி செய்தது பற்றி முதல்முறையாக லதா பேசி இருக்கிறார்.
பொதுவாக எல்லோருக்கும் முதல் நாள் வேலை என்பது ஒரு பதட்டம் நிறைந்ததாக தான் இருக்கும். அது என்ன மாதிரியான வேலையாக இருந்தாலும் சரிதான். முதல் நாள் ஆபீசுக்கு போகும்போது இருக்கும் பதட்டம் பலருக்கும
பல வருடம் கழித்து சிரிப்பு தான் வரும்.
முதல் நாள் ஒரு இடத்தில் நம்முடைய வேலையை தொடங்கும் போது இருக்கும் பதட்டமும் படபடப்பும் நாட்கள் செல்ல செல்ல பிறகு இருந்த இடம் தெரியாமல் போய்விடும். அது தான் நடிகை லதாவின் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது.
அப்படி என்னதான் அவருடைய வாழ்க்கையில் நடந்தது என்பது பற்றி அவரே சொன்ன விஷயத்தை நாம பார்க்கலாம். 1973 ஆம் ஆண்டு எம்ஜிஆர் அதிக பொருள் செலவில் தயாரித்து, இயக்கி, நடித்த திரைப்படம் தான் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம்.
இந்த திரைப்படத்தில் நடிகை லதாவை எம்ஜிஆர் அறிமுகம் செய்திருந்தார். அவர் மட்டுமல்லாமல் அவர்களோடு மஞ்சுளா, சந்திரகலா போன்ற நடிகைகளும் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்திற்க்கு பெரிய அளவில் ஹிட் கிடைத்தது.

ஆனால் பல வருடங்கள் கழித்து எம்ஜிஆர் உடன் அந்தத் திரைப்படத்தில் நடிக்கும் போது முதல் நாள் படப்பிடிப்பில் நடந்த விஷயத்தை பற்றி சமீபத்தில் லதா மனம் திறந்து பேசி இருக்கிறார். அதில் முதல் நாள் எம்ஜிஆரோடு நடிக்கும் போது அவரால் சரியாக நடிக்க முடியவில்லையாம்.
அவர் சரியாக நடிக்க முடியாமல் டேக் அதிகமாக எடுத்து திணறி கொண்டிருப்பதை பார்த்த எம்.ஜி.ஆர் அருகில் சென்று என்ன ஆச்சு என விசாரிக்க, சார் உங்களோடு நடிக்க எனக்கு தயக்கமா இருக்கு என்று லதா சொன்னாராம். அப்போ இவ்வளவு ஏற்பாடுகள் செய்த பிறகு நடிக்க தயக்கமா இருக்குன்னு சொன்னா யாராவது இருந்தாலும் கோபம் வரும். அந்த மாதிரி எம்ஜிஆருக்கும் கோபம் வந்திருக்கு. ஆனா அதை அவர் காட்டிக்கவில்லையாம்.
மாறாக லதாவிடம் சரி அப்போ என்கூட நடிக்க தானே உங்களுக்கு தயக்கமா இருக்கு. வேற ஹீரோவா மாத்திரலாமா என கேட்டிருக்கிறார். அதை கேட்டு லதா விழுந்து விழுந்து சிரித்தாராம். எம்ஜிஆர் இப்படி எல்லாம் ஜாலியாக பேசுவார்னு அவருக்கு அப்போ தான் தெரிஞ்சிருக்கு. பிறகு இயல்பா மாறி தான் நடிச்சேன் என்று லதா கூறி இருக்கிறார்.
-
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
கருப்பு படத்தில் ஆர்ஜே பாலாஜி ஸ்கேம் பண்ணிட்டாரா? "இந்த” சீரியலின் 30 நிமிட கதை தான் முழு படமா? ரசிகர்கள் ட்ரோல் -
‘கருப்பு ஸ்டார்’ பட்டம் கொடுத்த ரசிகர்... உடனே திரிஷா கொடுத்த பதில்... இவ்வளவு இறங்கி பேசிட்டாரே! -
நயன்தாரா என்னை மாதிரி கஷ்டப்பட்டவங்க.. விக்னேஷ் சிவன் பழசை மறந்துட்டாரு! ஓபனாக பேசிய நடிகை சோனா -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
பிரபுவின் ‘டூயட்’ நாயகி மீண்டும் வருகிறார்... 30 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி! எந்த ஹீரோவுடன் கம்பேக்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்











Click it and Unblock the Notifications