43 வயசுல தான் கல்யாணம்.. சினிமாவில் பட்ட கஷ்டம்! மணிவண்ணன் செய்த உதவி இருக்கே?- நடிகை லாவண்யா
சென்னை: திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை லாவண்யா திருமணத்திற்கு பிறகு ஒரு வருடம் கழித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னுடைய திருமண வாழ்க்கை மற்றும் சினிமா வாழ்க்கை குறித்து பேசி இருக்கிறார்.
அதில் தான் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் தனக்கு சின்ன சின்ன கேரக்டர்கள் தான் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் தான் நடித்த காட்சிகள் பல திரைப்படங்களில் காணாமல் போய் இருக்கிறது என்று உருக்கமாக பேசியிருக்கிறார். அதோடு இயக்குனர் மற்றும் நடிகர் மணிவண்ணனோடு நடிக்கும் போது ஏற்பட்ட அனுபவம் குறித்தும் பேசியிருக்கிறார்.

அந்த வகையில் நடிகை லாவண்யா 1997 ஆம் ஆண்டு வெளியான சூரிய வம்சம் திரைப்படத்தில் சொப்னா என்ற கேரக்டரில் சின்னதாக அறிமுகம் ஆகி இப்ப வரைக்கும் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல வெள்ளி திரையில் மட்டுமல்லாமல் பல சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் இவருக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்காததால் அதிகமாக ஜொலிக்க முடியாமல் போயிருக்கிறது.
லாவண்யா படையப்பா, சங்கமம், ஜோடி, சேது, தெனாலி, சமுத்திரம், வில்லன், அலை, திருமலை, கஜேந்திரன், தங்க மகன் உட்பட பல பெரிய படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து பிரபலம் ஆகி இருக்கிறார். அதற்கு பிறகு 2014 ஆம் ஆண்டு பாலா படத்தில் தான் கடைசியாக லாவண்யா நடித்திருந்தார். அதற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த லாவண்யா கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பிறகு இப்போது பகாசுரன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
அதுபோல சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அருவி சீரியலில் இவர் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் இவருக்கு கடந்த வருடத்தில் திருமணம் ஆகியது. திருமணம் ஆகி ஒரு வருட திருமண நாளை கொண்டாடி இருக்கிறார். இப்படியான நிலையில் சமீபத்தில் அவர் பேட்டியில் சில தகவல்களை பேசி இருக்கிறார். அதில் சினிமாவில் சின்ன சின்ன ரோல்களில் நடிக்க கூப்பிடும் போது தான் எனது கஷ்டமாக இருக்கும்.

ஆனாலும் நான் பல படங்களில் நடித்த காட்சிகள் திரைப்படம் வெளியான பிறகு பார்க்கும்போது அந்த படத்தில் இல்லாமல் போய் இருக்கிறது. அதுபோல சங்கமம் திரைப்படத்தில் போது ரகுமான் சார் ஆடுவதை பார்த்து எனக்கு கண்களில் கண்ணீர் வந்து விட்டது. அவர் அந்த படத்தில் ரொம்பவே கஷ்டப் பட்டார். அதுபோல சில வருடங்களுக்கு முன்பெல்லாம் இப்ப இருக்கிற மாதிரி கேரவன் வசதி கிடையாது.
அதனால் நடிகைகள் நாங்கள் உடை மாற்றுவது ரொம்பவே கஷ்டமாக இருந்தது. வீடுபோன்ற செட்டப் இருக்கும். ஆனால் அங்கு வேஷ்டிகள் கட்டி இருக்கும் அங்கே தான் ஆடை மாற்றுவோம். இந்த கஷ்டத்தை பார்த்து தான் மணிவண்ணன் சார் அவருடைய கேரவன் எடுத்துட்டு வந்து எங்களை மாற்ற சொல்லுவார். ஆனால் பல படங்களில் நடிக்கும் போது ஓபன் ஆன இடத்தில் பயந்து கொண்டுதான் ஆடைகளை மாற்றுவோம்.
அதுபோல என்னுடைய வாழ்க்கையிலும் சில திரைப்படங்களில் ஹீரோயினியாக நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அது பெரிய படங்களில் இல்லை சின்ன பட்ஜெட் படம் தான். அதற்கு சில கண்டிஷன்கள் போடுவார்கள். அதாவது கிளாமரா நடிக்கணும் என்று கேட்பார்கள். எனக்கு அது சரிப்பட்டு வராததால் நான் அப்படி நடிக்கவில்லை.
அதுபோல எனக்கு தொடர்ச்சியாக சினிமா வாய்ப்புகள் வராததால் பொருளாதாரத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. அந்த நேரத்தில் நான் நல்லா படித்து இருந்தால் ஆபீஸில் மாத சம்பளத்திற்கு வேலைக்கு போய் இருக்கலாம் என்று எனக்குத் தோணும் என்று அந்த பேட்டியில் லாவண்யா பேசியிருக்கிறார்.
-
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
ரகுவரனின் I Know I Know மேனரிசத்துக்கு பின்னால் உள்ள நிஜ மனிதர் யார்? வெளிவரும் அதிர்ச்சி பின்னணி -
நந்தனாவை சேரில் இருந்து விரட்டி.. உடனே ராதிகா கும்பிட்டு.. பாரதிராஜா இறுதிச் சடங்கில் என்ன நடந்தது -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?












Click it and Unblock the Notifications