எங்க அப்பா டிரைவர் தான்.. நாங்க 4 பொண்ணுங்க.. நான் செஞ்ச தப்பு.. அந்த கஷ்டம்.. கண்கலங்கிய லாஸ்லியா

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான லாஸ்லியா தற்போது திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் தன்னுடைய பெற்றோர் குறித்தும் தன்னுடைய ஆரம்ப காலம் குறித்தும் கண்கலங்கி பேசி இருக்கிறார்.

இலங்கையிலிருந்து தமிழ் சினிமாவில் பல நடிகைகள் நடிகர்கள் அறிமுகமாகி இருக்கிறார்கள். அந்த வரிசையில் நடிகை லாஸ்லியாவும் ஒருவர். இவர் இலங்கையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி செய்தி வாசிப்பாளராகவும் இருந்து வந்தார். ஆனால் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி தான் பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது.

Vijay TV losliya Biggboss

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி 8 சீசன்கள் முடிவு அடைந்து இருக்கிறது. ஆனாலும் அதிகமான ரசிகர்களின் மனதில் நிற்கும் சீசன் என்றால் அது மூன்றாவது சீசன் தான். இந்த சீசனில் சாண்டி மாஸ்டர், கவின், லாஸ்லியா, தர்ஷன் என்று பலர் கலந்து கொண்டிருந்தனர். அவர்களுடைய காமெடி மற்றும் கலகலப்பான காட்சிகள் இப்போதும் இணையத்தில் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியால் பல இளைஞர்களின் கனவு கன்னியாக லாஸ்லியா வலம் வந்தார்.

அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு லாஸ்லியா பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் சோஷியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார். அடிக்கடி உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள், போட்டோ ஷூட் புகைப்படங்களை தன்னுடைய சோஷியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

இவரும் கவினும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதலித்தது பிறகு லாஸ்லியாவின் அப்பா பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து திட்டியது எல்லாம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் பிரிந்து விட்டனர். ஆனாலும் ரசிகர்கள் கவின் பெயரை சொல்லியே திட்டி வருகிறார்கள். இந்த நிலையில் தன்னுடைய குடும்பம் மற்றும் ஆரம்பகால வாழ்க்கை குறித்து பேட்டி ஒன்றில் உருக்கமாக பேசியிருக்கிறார்.

அதில் என்னுடைய குடும்பம் நடுத்தர வர்க்கத்தை விடவும் கீழே உள்ளது தான். எங்க அப்பா சாதாரண டிரைவர் வேலைதான் பார்த்தாங்க. லாரியை விட கொஞ்சம் குறைவாக இருக்கும் ஒரு வண்டியை தான் அப்பா ஓட்டிட்டு இருந்தாங்க. அந்த வண்டியில் தான் எங்களை ஸ்கூலில் கொண்டு விடுவாங்க.

என் கூட பிறந்தது நான்கு சகோதரிகள். அதனால் சின்ன சின்ன விஷயங்கள் கூட எங்களுக்கு எளிதாக கிடைக்காது. நாங்கள் சின்ன விஷயத்துக்கும் ரொம்பவும் ஏங்கி போய் இருந்திருக்கோம். வருடத்திற்கு ஒரு முறையாவது புது துணி கிடைக்காதா? ஒரு நல்ல டிரஸ் நாமளும் போட்டுக் கொண்டு போக மாட்டோமா என்று ஏங்கி பல நாட்கள் இருந்திருக்கிறோம்.

அதனால் எனக்கு பணத்துடைய அருமையும் கஷ்டமும் நன்றாகவே தெரியும். அப்பா வெளிநாட்டிற்கு போன பிறகு எங்களுடைய கஷ்டம் கொஞ்சம் குறைய தொடங்கியது. ஆனாலும் பெரியதாக முன்னேற்றம் அடைந்து விட்டோம் என்றெல்லாம் சொல்ல முடியாது. நான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தொடங்கிய பிறகு சின்ன வருமானம் கிடைக்கத் தொடங்கியது.

அதற்கு பிறகு தான் படிப்படியாக எங்களுடைய குடும்பம் முன்னேற தொடங்கியது. நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது அப்பாவை கடைசியாக பார்த்தேன். பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் இருக்கும் போது மூன்று நாள் லீவில்தான் எங்க அப்பா இலங்கைக்கு வந்திருந்தாங்க. அந்த நேரத்தில் தான் என்ன பார்க்க வந்தாங்க.

அதற்குப் பிறகு நான் பிணமாகத்தான் அவர் முகத்தை பார்த்தேன். அப்பா மீது எனக்கு எப்போதும் நிறைய பாசமும் மரியாதையும் உண்டு. அப்பா எங்கள் குடும்பத்திற்காக ரொம்ப கஷ்டப்பட்டாங்க. அவங்களுடைய ஆசையை நான் நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். அதற்காகத்தான் பல விஷயங்களை பார்த்து செய்கிறேன்.

ஆனாலும் அப்பாவின் நினைவு அடிக்கடி வரும் அப்பாவின் நினைவு வரும் போது அவருடைய செல்போன் நம்பருக்கு போன் செய்து பார்ப்பேன். அந்த நம்பர் சுவிட்ச் ஆஃப்ல் தான் இருக்கும், அதை எடுக்க அப்பா இல்லை என்பது தெரியும் ஆனாலும் என்னுடைய மனது கேட்காமல் சில நேரங்களில் நான் டயல் செய்து பார்ப்பேன். அது போல நம்முடைய வாழ்க்கையில் சின்ன சின்னதாக நாம் பல தப்பு செஞ்சு கொண்டே தான் இருக்கிறோம் அது சில வருடங்கள் கழித்து தான் நமக்கு தவறு என்று புரிகிறது என்று அந்த பேட்டியில் லாஸ்லியா பேசி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+