திரிஷா, நயன்தாரா பற்றி ஓபனாக பேசிய நடிகை மதுபாலா.. தமிழ் சினிமா மீது இருக்கும் வருத்தம் பற்றி பேச்சு
சென்னை: ரோஜா படத்தில் பச்சை நிற புடவையில் அரவிந்தசாமியுடன் மதுபாலா வரும் காட்சிகளை அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் மறந்து இருக்க முடியாது. அந்த படத்தின் பாடல்களும் மதுபாலாவின் அழகும், நடிப்பு இன்றைக்கும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. தமிழ் தெலுங்கு, ஹிந்தி என பலமொழிகளிலும் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். ஆனால் இத்தனை வருஷங்களாக சினிமாவில் இருந்தும் தமிழ் சினிமாவில் தனக்கு சமீப காலமாக வாய்ப்புகள் கிடைக்காதது குறித்து அவருக்குள் ஒரு வருத்தம் இருக்கிறதாம்.

நடிகை மதுபாலா பேட்டி
சமீபத்தில் மாலைமலர் யூடியூப் சேனலுக்கு அவர் கொடுத்த பேட்டியில் இது பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார். எனக்கு தமிழ் மொழி மீது அதிகம் மரியாதை இருக்கிறது. நான் தமிழில் தான் அதிகம் பேச விரும்பவேன். தமிழ் சினிமாவில் எனக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது கூட பலரும் ஏன் தமிழ் படங்களில் நடிக்கையிலே என்று கேட்கிறார்கள். நல்ல வாய்ப்பு கிடைத்தால் உடனே நான் ஓடி வந்து விடுவேன். இயக்குனர்களுக்கு ஏன் தமிழ் நடிகைகளை பிடிக்கவில்லை என்று எனக்கு தெரியவில்லை, அந்த வருத்தம் எனக்குள் இருந்து கொண்டே இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்.
திரிஷாவின் கேரக்டர்
மேலும் தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகைகள் பற்றி பேசும்போதுஃ நடிகை திரிஷா மற்றும் நயன்தாரா பற்றியும் பேசி இருந்தார். அதில், திரிஷாவை எனக்கு நல்லாவே தெரியும். அவங்க கூட நெருங்கி பழகி இருக்கிறேன். குஷ்பூ மூலம் தான் த்ரிஷா எனக்கு பிரண்ட் ஆனாங்க. அவங்க ரொம்பவும் நல்ல டைப். ரொம்ப ஜாலியா இருப்பாங்க. எப்போ யாருக்கு என்ன ஹெல்ப் என்றாலும் செய்வாங்க. அதுபோல நயன்தாராவை பற்றி என்கிட்ட கேட்டா எனக்கு அவங்களை பற்றி எதுவுமே தெரியாது. ஏன்னா நான் அவங்க கூட அதிகமாக நடித்ததும் இல்லை, அதிகமா பழகியதும் இல்லை. ஆனால் அவங்க இன்னைக்கு இந்த இடத்திற்கு வந்திருக்காங்க என்றால் அது அவர்களுடைய உழைப்பு மற்றும் விடாமுயற்சிதான்.
நயன்தாரா பற்றி ஓபன்
நயன்தாராவும் பல கஷ்டங்களை தாண்டி தான் இன்னைக்கு இந்த இடத்திற்கு வந்திருக்கிறாங்க என்று இருவரை பற்றியும் மதுபாலா ஓபன் ஆகவே பேசி இருக்கிறார். பலருக்கும் மதுபாலா என்றதும் முதலில் நினைவுக்கு வருவது ரோஜா தான். ஆனால் அவருடைய சினிமா பயணம் அந்த ஒரு படத்தோடு முடியவில்லை . அவருக்கு முதலில் வெளியானது அழகன் படம் அதற்கு பிறகு ரோஜா. அதைத்தொடர்ந்து ஜென்டில்மேன் என்று அந்த சமயத்தில் அடுத்தடுத்து ஹிட் கொடுத்துக் கொண்டிருந்தார்.
மதுபாலா கம் பேக்
சமீப காலமாக அவர் பெரிதாக தமிழில் நடிக்கவில்லை என்றாலும் இப்போது மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார். அதிலும் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான ஸ்வீட் காரம் காபி வெப் சீரீஸிலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அதுபோல அவர் நடிப்பில் கடைசியாக வெளியான சின்ன சின்ன ஆசை என்ற தமிழ்- மலையாள படத்தில் ஹீரோயினியாக நடித்திருந்தார். அந்த படத்தின் பெயரே ரோஜா படத்தில் வரும் ஹிட்டான பாடலை நினைவுபடுத்தும் வகையில் இருந்தது. அதனாலே நீண்ட இடைவெளிக்கு பிறகு அவருடைய கேரக்டர் எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பில் பலரும் அந்த படத்தை பார்த்தனர்.
ரசிகர்கள் கருத்து
ஒடிடியில் வெளியான பிறகு அந்த படம் சோசியல் மீடியாவில் அதிகமாகவே பேசப்பட்டது. இப்படி மற்ற மொழிகளில் தொடர்ந்து நடித்து வந்தாலும் தமிழில் நல்ல கதாபாத்திரம் கிடைக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் அவரிடம் இருக்கிறது. அதைத்தான் இப்போ அவர் பேட்டி சொல்லி இருக்கிறார். இயக்குனர்களின் கண்களில் இந்த வீடியோ பட்டால் மீண்டும் மதுபாலாவே நம்ம சினிமாவில் பார்க்கலாம். ஏற்கனவே உடல் எடையை குறைத்து பழைய லெவலில் அவர் வந்திருப்பதால் அவருக்கு தகுந்த மாதிரி ஆக்சன், காமெடி கேரக்டர் கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். அவரை போய் அழ வைத்து எங்களையும் அழ வைக்காதீங்க என்பதுதான் பலருடைய மனக்குமுறல்.




Click it and Unblock the Notifications
