ஒத்தையில நிக்குது இந்த ரோசா... நடிகை மதுபாலா பாட, வெட்கத்தில் சீமான் சொன்ன கதை.. 30 நாள் சீக்ரெட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசியல்வாதியும், தமிழ் திரைப்பட இயக்குனரும் நடிகராகவும் இருக்கும் சீமான் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கும் போது அந்த நிகழ்ச்சியில் வீடியோ காலில் பேசிய நடிகை மதுபாலா சீமான் சீக்கிரமாக திரைப்படம் இயக்க வேண்டும் என்றும் அதில் தான் நடிக்க வேண்டும் என்று தன்னுடைய விருப்பத்தை தெரிவித்து இருந்தார்.

அதோடு சீமான் இயக்கிய பாஞ்சாலங்குறிச்சி திரைப்படத்தில் தான் நடித்த போது ஏற்பட்ட அனுபவம் குறித்தும் அந்த நிகழ்ச்சியில் கலகலப்பாக நடிகை மதுபாலா பேசியிருக்கையில் இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது அதை பற்றி பார்க்கலாம்.

 actress Madhubala Seeman spoke about Seeman good qulitity

அந்த வகையில் சீமான் 90ஸ் ஹிட்ஸ் திரைப்படங்கள் பலவற்றை இயக்கி அதில் நடித்து பலருடைய மனதை கவர்ந்த நிலையில் சமீபத்தில் அவர் அரசியல் கட்சியை தொடங்கிய பிறகு அதிகமாக திரைப்படங்களில் கவனம் செலுத்தாமல் இருக்கிறார். ஒரு சில திரைப்படங்களில் அவ்வப்போது எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் சீமான் சமீபத்தில் கூட ஒரு திரைப்படத்தில் நடித்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

அதுபோல சீமான் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவர் பாஞ்சாலங்குறிச்சி, இனியவளே, வீரநடை, தம்பி, வாழ்த்துக்கள் என்று ஐந்து படங்களை இயக்கியிருக்கிறார். அதில் தம்பி திரைப்படத்திற்கு தமிழக அரசின் சிறந்த வசன கர்த்தாவிற்காக விருதையும் பெற்றிருக்கிறார். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைவராக இருக்கும் சீமான் மீண்டும் திரைப்படங்களை இயக்க வேண்டும் என்று நடிகை மதுபாலா சீமானிடம் அன்பு வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

அதாவது சீமானுக்கு சமீபத்தில் தனியார் சேனல் ஒன்றில் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. அதில் சீமான் குறித்து பேசுவதற்காக வீடியோ காலில் நடிகை மதுபாலா வந்திருந்தார். மதுபாலா சீமான் இயக்கிய முதல் திரைப்படமான பாஞ்சாலங்குறிச்சி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் மதுபாலா பேசுகையில் சீமான் சார் நீங்க எப்போ மீண்டும் திரைப்படத்தை இயக்கத் தொடங்குவீங்க?

நான் உங்களோடு நடிக்கும்போது எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் இருந்தது. திரைப்படத்தில் எப்படி எல்லாம் நடிக்க வேண்டும் என்று நிறைய விஷயங்களை நான் உங்களிடம் கற்றுக் கொண்டேன். நீங்கள் இப்போ ஒரு நல்ல அரசியல்வாதியாக இருக்கிறீங்க. இன்னும் அரசியலில் நிறைய வெற்றி பெற வேண்டும்.

உங்களுடைய அரசியல் பயணம் எனக்கு பிடிச்சிருக்கு. ஆனால் நான் ஆசைப்படுவது என்னவென்றால் நீங்கள் மீண்டும் படம் இயக்கனும் அதில் நான் நடிக்கணும் என்று நான் உங்களுக்காக காத்திருக்கிறேன் என்று பேசிய மதுபாலா அதோடு "ஒத்தையில நிக்குது இந்த ரோசா" என்று பாட்டு பாடி இருந்தார். அதை கேட்டு சிரித்துக்கொண்டிருந்த சீமான் மதுபாலா ரொம்பவே நல்ல பொண்ணு.

எந்த கேரக்டர் கொடுக்கணும் அது போல அடிப்பாங்க, எந்த நேரத்தில் எந்த காட்சி எடுக்கணும்னு சொன்னாலும் உடனே சரி என்று சொல்லிவிடுவாங்க, இந்த பொண்ணு இந்த பாடலை இத்தனை வருடம் கழித்து மறக்காமல் வைத்திருப்பதற்கு காரணம் இந்த ஒரு பாடலை மட்டும் ஒரு மாசத்துக்கு எடுத்தேன். காலையில் எழுந்ததும் இந்த பாட்டை எடுத்துட்டு பிறகு வேற காட்சிக்கு போயிருவோம்.

ஏன்னா இந்த பாடல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஷாட்டில் இருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். அதிகாலை நாலு மணிக்கு ஆத்தங்கரைக்கு மதுபாலாவ கிளம்பி வர சொல்லிடுவேன். அந்த பொண்ணு அது பாட்டுக்கு கிளம்பி அழகா வந்துடுவாங்க. பிறகு 7 மணி வரைக்கும் சூட்டிங் போகும்... அடுத்ததாக அடுத்த காட்சிகளை எடுக்க தொடங்கி விடுவோம்.

 actress Madhubala Seeman spoke about Seeman good qulitity

இப்படியே இந்த ஒரு பாட்டை மட்டும் ஒரு மாசத்துக்கு எடுத்தோம். அந்த பாட்டு தினமும் கேட்டு கேட்டு தான் இவங்களுக்கு இவ்வளவு நாட்கள் கழித்து மறக்காமல் இருக்கிறது என்று கலகலப்பாக சீமானும் அதற்கு பதில் கொடுத்திருக்கிறார். ஆனால் மதுபாலா ஆசைப்பட்ட மாதிரி தான் இனி படம் இயக்கப் போகிறேனா? இல்லையா? என்பதை பற்றி அதில் அவர் பேசவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+