மீண்டும் உங்களை ஏமாற்றி விட்டோம்.. இனி கிண்டல், உருவகேலி தேவை இல்லை.. நடிகை மகாலட்சுமி திடீர் பதிவு
சென்னை: சீரியல் நடிகை மகாலட்சுமி இன்று தன்னுடைய கணவரோடு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய இரண்டாவது திருமண நாளை கொண்டாடி இருக்கிறார். அதோடு "இன்னுமாடா நீங்க இன்னும் பிரியலையா என்று கேட்கும் உங்களை மறுபடியும் ஏமாத்திட்டோம்" என்று அந்த பதிவுக்கு மகாலட்சுமி கேப்ஷன் கொடுத்திருக்கிறார். இது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டு சின்னத்திரை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய திருமணம் என்றால் அது சீரியல் நடிகை மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தரின் திருமணம்தான். இவர்கள் இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் என்றாலும் அந்த நேரத்தில் மகாலட்சுமி ரவீந்தரை திருமணம் செய்தது குறித்து அதிகமாக பேசப்பட்டது.

காரணம் உடல் அளவில் ரவீந்தர் உடல் எடை கூடி இருக்கும் நிலையில் அவரை மகாலட்சுமி எப்படி திருமணம் செய்து கொண்டார் என்று பலரும் அதிர்ச்சியோடு கேள்வி எழுப்பி வந்தனர். மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை பணத்திற்காகத்தான் திருமணம் செய்திருக்கிறார் என்று கூட சொல்லி வந்தனர். ஆனால் அதுவெல்லாம் உண்மை கிடையாது எங்கள் இருவருக்கும் மனம் ஒத்து போய் இருந்தது நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்திருக்கிறோம். எங்களுடைய திருமண வாழ்க்கையை நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்வோம் என்று இருவருமே அந்த நேரத்தில் பல பேட்டிகளும் கொடுத்திருந்தனர்.
அந்த நேரத்தில் பலர் ரவீந்தர் பற்றி புலம்பி வந்தனர். ஆனாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாத ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி ஜோடி தங்களுடைய திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டு போய்க் கொண்டிருந்தனர். வார இறுதி நாட்களில் இவர்கள் இருவரும் வெளியே செல்லும் இடங்களில் எல்லாம் எடுக்கும் புகைப்படங்களையும் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டிருந்தனர்.

இந்த நிலையில் தான் சில மாதங்களுக்கு முன்பு ரவீந்தர் மீது மோசடி வழக்கு ஒன்று தொடுக்கப்பட்ட நிலையில் அதன் காரணமாக ரவீந்தர் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார் பிறகு அவர் ஜாமினில் வெளியே வந்திருக்கிறார். இந்த நிலையில் இன்று மகாலட்சுமி மற்றும் ரவீந்தரின் இரண்டாவது திருமண நாள்.
இதற்கு ரவீந்திரன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெற்றிகரமாக நாங்கள் இரண்டாவது திருமண நாளை கொண்டாடுகிறோம்... இன்னுமாடா நீங்க இன்னும் பிரியலனு கேக்கும் உங்களை மறுபடியும் ஏமாத்திட்டோம்.. என்னோட நம்பிக்கை, வாழ்க்கையில் நம்ம நல்லா இருக்கணும்னு ஒரு கூட்டம் உங்கள் கிட்ட இருக்கும் வரை... அப்புறம் உங்க குடும்பம் உங்க கூட இருக்கிற வரைக்கும் உங்களுக்கு மகிழ்ச்சி தான்.

எங்களை கிண்டல், உருவ கேலி, அப்புறம் அசிங்கப்படுத்துவதாலும் பயன் இல்லை. மூன்று மாதம் தாங்குமா இவங்க கல்யாணம்னு கேட்டவங்களுக்கு என்னோட அன்பான பதில் மறக்காம எங்களுடைய போட்டோவுக்கு லைக் அண்ட் ஷேர் பண்ணிடுங்க. மகாலட்சுமி, என்ன சொல்ல உன்னைப் பற்றினு தெரியல. போன வருடம் பல பிரச்சனைகளும் திருப்பங்களும் தான் நம்முடைய வாழ்க்கையில் இருந்தது. எனக்கு வந்த வலி எல்லாவற்றையும் உன்னுடைய கைகளில் இறுக்கமாக நீ பிடித்துக் கொண்டாய்.
அதற்கு கைமாறாக நான் உனக்கு சமைத்து போடட்டுமா..? ஆனா அப்படி செஞ்சா என்ன பிரச்சனை வரும்னு தெரியல.. அதனால் அதை விட்டுவிடுவோம். அதோடு மக்களே உங்களுக்கு ஒரு பிரீ அட்வைஸ் கொடுக்கிறேன் வாழ்க்கையில புரிஞ்சவங்க ஒன்னு சேர்ந்து அவங்க புரிஞ்சி வாழ்றது ரொம்ப ஈசி. நீ உன்னோட வாழ்க்கையை வாழு. அதுவும் உன்னை நேசிப்பவர்களுக்காக வாழ் என்று ரவீந்தர் கூறியிருக்கிறார்.
இதற்கு மகாலட்சுமி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த அழகான பயணத்தை நாங்கள் ஒன்றாக தொடங்கினோம். அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு ஆசீர்வாதம் என் பக்கத்தில் உங்களுடன். உண்மையான காதல் என்றால் நிபந்தனையற்ற ஆதரவு, முடிவில்லாத சிரிப்பு. காலப்போக்கில் மட்டுமே வலுவடையும் ஒரு பிணைப்பு என்ன என்பதை நான் கண்டுபிடித்தேன். நீங்கள் என் சிறந்த நண்பர். என் நம்பிக்கை உரியவர் மற்றும் என் வாழ்க்கையில் அன்பு உங்களுடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு பொக்கிஷம்.
நீங்கள் பகிர்ந்து கொள்ளும் அன்பிற்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். இரண்டாவது ஆண்டு வாழ்த்துக்கள் அம்மு. எதிர்காலம் நமக்கு என்னவாக இருக்கும் என்பதை பார்க்க என்னால் காத்திருக்க முடியாது. வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாததை விட... நான் உன்னை நேசிக்கிறேன் என்று மகாலட்சுமியும் பதில் கொடுத்து இருக்கிறார். இவர்களுடைய இரண்டாவது திருமண நாளில் இவர்களுக்கு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications