எங்க வீட்டில் மகிழ்ச்சி செய்தி.. மனைவிக்கு சந்தோஷமாக வாழ்த்துக்கள் சொன்ன ரவீந்தர், குவியும் பாராட்டு
சென்னை: சின்னத்திரை நடிகையான மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை காதலிக்க திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமண செய்தி இணையத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த நிலையில் இன்று மகாலட்சுமியின் பிறந்த நாளுக்காக அவருடைய கணவர் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் பலருக்கும் மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் தம்பதி தெரிந்திருக்கும். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இவர்களுடைய திருமண புகைப்படங்கள் தான் இணையத்தில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டது. 90ஸ் தொகுப்பாளினிகளில் முக்கியமான பிரபலமாக இருந்த மகாலட்சுமி அதற்குப் பிறகு தொடர்ந்து சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதிகமான விமர்சனங்கள்
ஆனால் மகாலட்சுமியின் தோற்றத்தில் சம்பந்தமே இல்லாத அளவிற்கு உடல் பருமன் அதிகமாக இருக்கும் ரவீந்தரை திருமணம் செய்து இருக்கிறாரே என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். மகாலட்சுமி பணத்திற்காகத்தான் ரவீந்திரை திருமணம் செய்திருக்கிறார் என்ற நெகட்டிவ் கமெண்ட்டுகளும் வைத்தனர்.
நெகட்டிவுக்கு பதிலடி
ஆனால் தங்களைப் பற்றி பரவி வரும் நெகடிவ் கமெண்ட், வதந்திகள் எதற்கும் மகாலட்சுமி மற்றும் அறிந்த தம்பதி செல்வி கொடுக்கவில்லை. அவர்களுடைய அடுத்தகட்ட பயணத்தை தொடங்கி கொண்டிருக்கிறார்கள். மகாலட்சுமி தொடர்ந்து சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல ரவீந்தர் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டதும் பெரிய அளவில் பேசப்பட்டது.

முதல் வாரத்தில் எவிக்ஷன்
பிறகு அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். இப்போது ஜாமீனில் வந்திருக்கிறார். அதற்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். ஆறு சீசன்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரிவ்யூ செய்த ரவீந்தர் எட்டாவது சீசனில் ஒரு வாரம் தான் தாக்குபிடிக்க முடிந்தது. முதல் வாரத்திலேயே அவர் எலிமினேஷன் செய்யப்பட்டார்.
பிக் பாஸில் ரவீந்தர்
அதற்கு பிறகு வெளியே வந்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியை குறித்தும், அதில் டைட்டில் வின்னராக முத்துக்குமரன் தான் வரவேண்டும் என்றும் பல பேட்டிகளில் பேசிக் கொண்டிருந்தார். அதுபோல சமீபத்தில் வெளியான டிராகன் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் அந்த திரைப்படத்திற்கு வலுக்கொடுக்கும் திருப்பத்தை ஏற்படுத்தும் கேரக்டரில் ரவீந்தர் நடித்திருந்தார்.

டிராகன் திரைப்படத்தில் நடிப்பு
ரவீந்தரின் எதார்த்தமான நடிப்பு அந்த திரைப்படத்திற்கு பிளஸ் ஆக அமைந்தது. இதுபோல இனி இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தயாரிப்பாளராக இவர் ஜெயிக்கவில்லை என்றாலும் கண்டிப்பாக நடிகராக ஜெயிக்க முடியும் என்ற அளவிற்கு மக்கள் மனதில் நம்பிக்கையை விதைத்திருக்கிறார்.
ரவீந்தர் போட்ட போஸ்ட்
இந்த நிலையில் இன்று மகாலட்சுமியின் பிறந்தநாள் அதற்காக தன்னுடைய மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். அதோடு தன்னுடைய மனைவி குறித்து ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார். அதில், பிறந்தநாள் வாழ்த்துக்கள் "மகாலட்சுமி ரவீந்தர் பிரம்மன் கற்பனை மொத்தத்தில் தீர்ந்தது உன்னை அழகாக இந்த பூமியில் படைக்க.. இனி ஒன்று வேண்டும் என்றால் அது வெறும் சிலையை மட்டும் உருவாக்க முடியும் என்று வாங்கி விட்டேன். லவ் யூ டி போண்டா கோழி.. உன்னோட வயதை சொல்ல மாட்டேன்" என்று நக்கல் கலந்த காதலை வெளிப்படுத்தி இருக்கிறார்.
மகாலட்சுமியின் பதில்
அதற்கு மகாலட்சுமி ஐயோ எனக்கு வெட்கம் வெக்கமா வருது. லவ் யூ சோ மச் அம்மு டா என்று பதில் கமெண்ட் கொடுத்து இருக்கிறார். இந்த பதிவுக்கு பலரும் மகாலட்சுமிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். அதுபோல தன்னுடைய பிறந்த நாளில் முதியோர் இல்லத்தில் முதியோர்களை நேரில் சந்தித்து அவர்களிடம் மகாலட்சுமி ஆசிர்வாதங்களை வாங்கி இருக்கிறார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications