மந்த்ராவுக்குள் இப்படியொரு சோகமா? பிறந்தநாளை கொண்டாடாத பிரபல நடிகை? ஏன் தெரியுமா.. வாவ் அன்பான அப்பா

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல நடிகை மந்த்ராவின் சமீபத்திய பேட்டிகள் தற்போது திடீரென இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன. அதிலும், தன்னுடைய அப்பாவை பற்றி உருக்கமாக அவர் சொன்ன விஷயங்கள், அவரது ரசிகர்களை வியப்புக்குள்ளாக்கி வருகின்றன.

kumudam யூடியூப் சேனலுக்கு, சில மாதங்களுக்கு முன்பு மந்த்ரா தந்திருந்த பேட்டியில், 'பிரியம்' படத்தில் நடித்ததிலிருந்தே வடிவேலு சார் எனக்கு நல்லா தெரியும்.. என்னை மந்த்து, மந்த்து என்றுதான் வடிவேலு சார் கூப்பிடுவார்.. லவ்டுடே படத்தில் நடிக்கும்போது எனக்கு 15 வயசுதான்.. பிரியம் படத்தில் 14 வயசு..

manthra

லவ்டுடே: நான் நடித்திருந்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது லவ் டுடே கேரக்டர்தான். விஜய்க்கு என்னுடைய டான்ஸ் ரொம்ப பிடிக்கும். பிரியம் படத்தில் நான் செய்த ஒரு டான்ஸ் மூவ்மென்ட் பற்றி நிறைய பாராட்டினார். ஆனால், விஜய்கூட நடிக்கணும்னு என்று சொன்னதும், நான் ஹீரோயின்னு நினைச்சுட்டேன்.. அப்பறம்தான் ஃபிரண்ட் கேரக்டர் என்று தெரிந்தது.

அந்த படம் பிரிவியூ ஷோ பார்த்துட்டு இருக்கும்போதே, என் அப்பாவிடம் சொல்லி நான் அழுதுட்டேன். கடைசிவரைக்கும் எனக்கு ஃபிரண்டு கேரக்டராக நடிக்க வெச்சுட்டாங்களே என்று அழுதேன். ஆனால், அந்த கேரக்டர் நல்ல ரீச் ஆகிவிட்டது.

லாயர் ஆசை: எனக்கு வழக்கறிஞராக வேண்டும் என்பதுதான் ஆசை. காரணம், இயல்பாக எனக்கு வாதாடும் திறமை இருந்ததால், வீட்டில் என்ன பிரச்சனை என்றாலும் என்னைதான் கூப்பிடுவாங்க.. ஆனால், நான் பெரிய நடிகையாக வரவேண்டும் என்று என் அப்பா ஆசைப்பட்டார்.. அவர்தான் என்னை இந்தத்துறைக்கு அழைத்து வந்தார். நான் பிறந்த 6 மாதத்திலிருந்து நடித்து கொண்டிருக்கிறேன்..

என் அப்பா சிகரெட் பிடிப்பார்.. அவர் சிகரெட் பிடிக்கும்போது, யாராவது பெரிய ஆள் வந்துட்டா, உடனே சிகரெட்டை முதுகுக்கு பின்னாடி மறைச்சிட்டு அவர்களுக்கு வணக்கம் வைப்பார்.. ஆனால், அப்படி செய்வதில் அவருக்கு இஷ்டமில்லை.. ஒயிட் & ஒயிட் டிரஸ்ஸில் கால் மேல கால் போட்டுட்டு, யாருக்கும் வணக்கம் வைக்காமல், சிகரெட் பிடிக்கணும், அவருக்கு எதிரில் உள்ளவர்கள் வணக்கம் வைக்கணும் என்று ஆசைப்பட்டார்.. அந்த கனவை நான் நிறைவேற்றினேன்" என்று கூறியிருந்தார்.

அப்பா பாசம்: அதேபோல, சமீபத்தில் galatta சேனலுக்கு மந்த்ரா தந்திருந்த பேட்டியிலும் தன்னுடைய அப்பாவை பற்றியே பிரதானமாகவும், உருக்கமாகவும் பேசியிருந்தார்.. "நான் அப்பா செல்லம்.. அம்மா இல்லேன்னாலும் பரவாயில்லை, எனக்கு அப்பா இருக்கணும்னு நினைப்பேன்.. அம்மாவிடம் கொஞ்சம் பயம் இருக்கும்.. ஆனால், அப்பா எனக்கு வலதுகரம்.. ஒரு ஃபிரண்டு மாதிரி இருந்தார்.. எல்லாத்தையும் அப்பா கிட்ட ஷேர் பண்ணிக்குவேன்.

நான் ஒவ்வொரு ஷாட் நடிச்சு முடிச்சதுமே டைரக்டர் ஓகே சொல்றதுக்கு முன்னாடியே, என் அப்பா முகத்தில் ஒருவித பெருமையும் மகிழ்ச்சியும் தெரியும்.. ஷூட்டிங்கில் நான் இருக்கும்போது, அப்பா செத்துட்டாருன்னு சொன்னாங்க.. நான் அதை நம்பவேயில்லை,, சிரிச்சிட்டே இருந்தேன்..

பிறந்தநாள்: அப்பா ஏன் சாகப்போறாரு? 40+தானே வயசாகுது.. இன்னும் 50 வயசுகூட ஆகலியே? அப்பறம் எப்படி இறந்துபோவார்? என்று சிரிச்சிட்டே இருந்தேன். அப்பறம்தான் உண்மை தெரிந்து அழ ஆரம்பிச்சேன்.. அப்போதிருந்து என்னுடைய பிறந்தநாளை நான் கொண்டாடுவதில்லை" என்று கண்கலங்கி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+