நடிகை மீனா இனி மத்திய அமைச்சரா? அவரே மகிழ்ச்சியாக வெளியிட்ட பதிவு.. குவியுது வாழ்த்து
சென்னை: நடிகை மீனா இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கரை தான் சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை மீனா பகிர்ந்து இருக்கிறார். ஏற்கனவே மீனா பாஜக கட்சியில் சேரப் போகிறார் என்ற செய்திகள் பரவி வந்த நிலையில் இப்போது அதை உறுதிப்படுத்தும் விதமாக மீனா பதிவு வெளியிட்டிருப்பதாக பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி கதாநாயகியாக நடித்து, இப்ப வரைக்கும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் நடிகை மீனா சினிமாவில் மட்டுமல்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். தன்னுடைய கணவர் மறைவுக்கு பிறகு சில வருடங்களாக பெரிதாக திரைப்படங்களில் நடிக்கவில்லை. ஆனால் மீனா தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.

மீனாவின் தோழிகள்
பழையபடி மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு நடுவராக வர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க, மீனாவின் தோழிகளான நடிகை ராதிகா, குஷ்பூ, கலா மாஸ்டர் என எல்லோரும் பாஜக கட்சியில் இருப்பதால் அந்த வரிசையில் மீனாவும் பாஜக கட்சியில் இணைய போகிறார் என்ற செய்திகளும் சில மாதங்களாகவே இருந்து வந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் சில நிகழ்ச்சிகளிலும் மீனா கலந்து கொண்டு இருக்கிறார்.
மீனா இன்ஸ்டா போஸ்ட்
இந்த நிலையில் தான் திடீரென டெல்லிக்கு மீனா சென்றிருக்கிறார். அங்கு துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கரை சந்தித்து இருக்கிறார். அவரோடு எடுத்த புகைப்படங்களை தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் மீனா பகிர்ந்து இருக்கிறார். அந்த பதிவில், "மாண்புமிகு துணைத் தலைவர் திரு ஜகதீப் தன்கர் அவர்களே, உங்களை சந்தித்தது ஒரு மரியாதை. ஐயா உங்களிடம் இருந்து நிறைய கற்றுக் கண்டேன். அது என் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் வழிநடத்த உதவும் என்று நான் நம்புகிறேன். உங்கள் நேரத்திற்கு மிக்க நன்றி" என்று அந்த பதிவில் மீனா குறிப்பிட்டு இருக்கிறார்.
நடிகை மீனா பதிவு
இந்த பதிவுக்கு கீழே அதிகமான ரசிகர்கள் வாழ்த்துக்கள் மேடம் என்று கூறி வருகிறார்கள். சட்டமன்ற தேர்தல் வருவதற்கு முன்பு நடிகை ராதிகா, குஷ்பூ போன்றோருக்கு முக்கிய பதவிகள் கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரிசையில் மீனாவையும் அமைச்சராக்காக வாய்ப்பிருக்கிறது என்ற பேச்சுகள் எழுந்து வரும் நிலையில் இப்போது மீனா வெளியிட்ட பதிவு அதை உறுதிப்படுத்தும் வகையில் இருக்கிறது என்று பலரும் கருத்து கூறியிருக்கிறார்கள்.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு
அந்த பதிவில் கூட "உங்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அது என் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் வழிநடத்த உதவும்" என்று துணை ஜனாதிபதி பற்றி மீனா கூறி இருப்பதால் வதந்திகள் உண்மையாகத்தான் இருக்குமோ? என்றும் பல சிலர் கமெண்ட்களில் கேட்டு இருக்கிறார்கள். ஆனாலும் சில ரசிகர்கள் நீங்கள் அரசியலுக்குப் போய்விட்டாலும் நடிப்பை மட்டும் விட்டு விடாதீங்க, உங்களை நாங்கள் சினிமாவில் ரொம்ப மிஸ் பண்ணறோம் என்றும் சில 90ஸ் கிட்ஸ் கமெண்ட் கொடுத்து இருக்கிறார்கள்.

கலா மாஸ்டர் பிறந்தநாள்
சமீபத்தில் கலா மாஸ்டருக்கு தனியார் யூடியூப் சேனலில் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அப்போது அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கலா மாஸ்டர் உடன் தனக்கு உள்ள அன்பு மற்றும் மரியாதை குறித்து மகிழ்ச்சியாக பேசி இருந்தார். அந்த வீடியோக்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதே போல கலா மாஸ்டரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகை ரோஜா, மீனா, குஷ்பூ, தேவயானி போன்ற பலரும் ஒன்றாக புகைப்படங்களையும் எடுத்து இருந்தனர். ஆனாலும் இப்போது மீனா வெளியிட்ட பதிவுக்கு இவர்கள் யாரும் இன்னும் வாழ்த்து தெரிவிக்கவில்லையே என்றும் சிலர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications