அபிராமிக்கே ஜெயில்ல நெயில் பாலிஷ் கிடைக்கும்போது மீரா மிதுனுக்கு? நடிகை மீது அரசியல்வாதிக்கு சபலம்?
சென்னை: நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி, சமூக வலைதளத்தில், வீடியோ வெளியிட்டிருந்தது தொடர்பாக தற்போது கைதாகி உள்ளார்.. பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பித்து, 3 ஆண்டுகளான நிலையில், தனிப்படை போலீசாரால், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது. இப்படிப்பட்ட சூழலில்தான், நடிகை மீரா மிதுன் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.. அவரை வரும் ஆகஸ்ட் 11ம் தேதி ஆஜர்படுத்த சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா பேட்டி ஒன்றில், தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
Puthiya Sinthanai என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, "3 ஆண்டுகள் மீரா மிதுன் சிக்கவில்லை என்று சொல்ல முடியாது.. இவர்கள் தேடி செல்லவில்லையோ? என்றுதான் தோன்றுகிறது.

ஜெயிலில் சிகரெட் கேட்டவர்
மீராமிதுனை பொறுத்தவரை, அனைவரும் அறிந்த நடிகை, பல தரப்பிலும் எல்லாவிதமான தொடர்பும், நட்பும் உள்ள பெண்மணியும்கூட.. அவரது அம்மாவும், தன்னுடைய மகளை காணவில்லை என்று 2 முறை போலீஸில் புகாரும் தந்திருந்தார்.. இத்தனைக்கும் மீரா மிதுன் டெல்லியில்தான் இருந்திருக்கிறார்.. நீதிமன்றம் பிடிவாரண்டு என்ற அழுத்தம் தந்தபிறகுதான், போலீஸ் தற்போது அவரை தேடி சென்றுள்ளது..
ஏற்கனவே தனக்கு ஜெயிலிலேயே சரக்கு, சிகரெட் வேண்டும் என்று கேட்டவர் மீராமிதுன்.. தன்னை கைது செய்தாலும், எப்படியாவது வெளியே வந்துவிடலாம் என்ற தைரியத்திலும் இருந்திருப்பார்.. அப்படியிருக்கும்போது, போலீசில் சிக்கவில்லை என்று சொல்வதெல்லாம் ஏற்க முடியவில்லை..
மகள் எங்கே இருக்கிறார் என்று அம்மாவுக்கு தெரியாமல் இருக்காது.. அழுத்தம் காரணமாக 2 முறை புகார் தந்திருக்கலாம்.. இந்த 3 வருடங்கள் வெளியில் எங்குமே போகவில்லையா? போன் இல்லாமல் இருந்ததாக சொல்வதை நம்ப முடியுதா?
பாலியல் சுரண்டல்கள்
சினிமா துறையை பொறுத்தவரை, பலவிதமான கேரக்டர்கள் இருக்கிறார்கள்.. சில நடிகைகளுக்கு சினிமா என்பது வெறும் அட்ரஸ் மட்டுமே.. முழுக்க முழுக்க அட்ஜெஸ்ட்மென்ட் அதாவது சட்டவிரோத செயல்பாடுகளை செய்யக்கூடியவர்கள்.. தொழிலதிபர்களின் இளிச்சவாய் மகன்கள், ஆண் நண்பர்களாக இருப்பார்கள். அவர்களிடம் பழகி, சிறிது நாளில் அவர்களது சொத்தையே ஆட்டைய போட்டுவிடும் நடிகைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
பெண்களுக்கு சினிமாவில் பாலியல் சுரண்டல் நடப்பது உண்மைதான்.. அதேசமயம், வாய்ப்பு தருவதற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கும் சில பெண்கள் துணிகிறார்கள்.. அப்படி வாய்ப்பு தராமல் மறுக்கும் பட்சத்தில், உடனே சம்பந்தப்பட்டவர்கள் மீது பாலியல் புகார்களையும் வீசிவிடுகிறார்கள்..
யார் அந்த பிரபல நடிகர்
இப்படித்தான் 2 வருடங்களுக்கு முன்பு, ஒரு நடிகை 'ஒரு பிரபல நடிகர், அரசியல் கட்சி தலைவராக உள்ளார்.. அவர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார்' என்று தொடர்ச்சியான பதிவுகளை பதிவிட்டு கொண்டிருந்தார்.. ஆனால், அந்த நடிகர் யார் என்பதை அவர் சொல்லவில்லை..
ரஜினி, விஜய் போன்றோர் அப்போதுதான் அரசியல் கட்சி துவங்குவதாக இருந்தது.. அதேபோல, கமல், சரத்குமார் போன்றோர் ஏற்கனவே அரசியல் கட்சி தலைவர்களாக இருப்பதால், அந்த நடிகை யாரை சொல்கிறார் என்ற குழப்பம் பலருக்கும் ஏற்பட்டு, சோஷியல் மீடியாவில் விவாதமாகவே நடந்தது.
இப்படி தொடர்ந்து வந்து கொண்டிருந்த அந்த பாலியல் குற்றச்சாட்டு பதிவுகள், திடீரென ஒருகட்டத்தில் நின்றுவிட்டது. ஏன் என்று தெரியவில்லை.. ஒருவேளை நடிகைக்கு செட்டில்மென்ட் நடந்திருக்கலாம். இப்படியான பிளாக்மெயில்களும் சினிமா துறையில் இருக்கத்தான் செய்கின்றன.
ஊர்வசி பட்டம் வாங்கியவரா
எனினும் , எப்போதுமே நாம் ஒழுக்கமாக இருந்துவிட்டால், இதுபோன்ற பிளாக்மெயில் பெண்களுக்கு நாம் ஆளாக வேண்டியதில்லையே?
தன்னை ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டு பேசிக்கொண்ட மீராமிதுன் இதுவரை நடித்து என்ன சாதித்திருக்கிறார்? நடிப்பில் ஊர்வசி பட்டம் வாங்கியவரா? நம்ம கிராமங்களில் பெண்களுக்கு இருக்கும் அழகு, பிரம்மாண்ட இயக்குநர்களின் கண்களுக்கு எந்த காலத்திலும் தெரிவதில்லை..
குன்றத்தூர் அபிராமி நெயில் பாலிஷ்
சாதி குறித்து பேசிய வழக்கில் மீரா மிதுன் தற்போது கைதாகி உள்ளார்.. பொதுமக்களிடம் பதற்றம் ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பதால், சிறையிலேயே வைத்திருக்க முடியும்.. எனினும், அப்பீல் செய்தாவது, பெயிலில் வந்துவிடுவார் என்றாலும், வழக்கு தொடர்ந்து நடைபெறும்.. எனவே, இந்த சட்டநடவடிக்கைகளை பற்றி நீதிமன்றம்தான் முடிவு செய்யும்..
சிறையில் அவர் எப்படி இருப்பார் என்று தெரியவில்லை.. குன்றத்தூர் அபிராமிக்கே நெயில் பாலிஷ் கிடைக்கும்போது, அபிராமிக்கு சிறையில் எதுவும் கிடைக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications