Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய் டிவி நிகழ்ச்சிகளில் இப்போ நான் வராத காரணமே இதுதான்.. வெளிப்படையாக பேசிய மைனா நந்தினி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் "மைனா" கேரக்டரில் நடித்து புகழ்பெற்ற நடிகை நந்தினி, தான் இப்போது எதற்காக விஜய் டிவி நிகழ்ச்சிகளில் அதிகமாக கலந்து கொள்ளவில்லை என்று பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

பொதுவாக ஒரு சில திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடிக்கும் நடிகர்களின் கேரக்டர் பெயரே அவர்களுடைய நிஜப்பெயரோடு அடைமொழியாக வந்து விடுகிறது. அந்த வகையில் ஒருவர்தான் நடிகை மைனா நந்தினி இவர் ஆரம்பத்தில் தொகுப்பாளராக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் கதாநாயகியாக நடித்த ரச்சிதாவின் தோழியாக மைனா கேரக்டரில் நடித்து மைனா நந்தினியாக பிரபலமானார்.

Television

இப்ப வரைக்கும் பல திரைப்படங்களில் அவர் நடித்துக் கொண்டிருந்தாலும் அவருடைய பெயர் மைனா நந்தினி என்றுதான் அழைக்கப்படுகிறது. மைனா நந்தினி ஆரம்பத்தில் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் அதிகமாக கலந்து கொள்வார். ஆனால் எப்போது அடுத்தடுத்து பல திரைப்படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். திரைப்படங்களில் மட்டுமல்லாமல் வெப் சீரிஸ்களிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் ஹாட்ஸ்டாரில் நடிகர் யோகி பாபு நடிப்பில் வெளியான சட்னி சாம்பார் வெப் சீரிஸில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். இவருடைய எதார்த்தமான நடிப்பு இவருக்கு பிளஸ் பாயிண்டாக அடுத்தடுத்த வாய்ப்புகளை வாங்கிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் மதுரையில் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து வாய்ப்பு தேடி பல போராட்டங்களுக்குப் பிறகு தொகுப்பாளராக வேலை கிடைத்து இப்போது கதாநாயகி ரேஞ்சில் முன்னணி நடிகையாக திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் இவரிடம் சமீபத்தில் பேட்டியில் நீங்கள் ஏன் முன்பு மாதிரி டிவி நிகழ்ச்சிகளில் வருவதில்லை? உங்களை யாரும் நிகழ்ச்சிகளுக்கு கூப்பிடவில்லையா? அல்லது அங்கு ஏதேனும் பிரச்சனையா? என்று கேட்டதற்கு, அப்படி எல்லாம் எதுவும் இல்லைங்க.. என்னதான் நமக்கு வாய்ப்பு வந்தாலும் நம்முடைய திறமைக்கு நாம எங்க இருக்கணும் என்று நமக்குன்னு ஒரு ஆசை இருக்குமே அங்கே தானே நாம் இருக்கவே முடியும்.

ஆரம்பத்தில் டிவி சேனல்களில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். இப்போது அது மூலமாக எனக்கு பல பெரிய வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. என்னுடைய கனவை நோக்கி தான் நான் பயணிக்க முடியும். அதனால்தான் நான் என்னுடைய அடுத்த கட்டத்திற்கு முன்னேறி இருக்கிறேன். எனக்கு யாரோடும் கருத்து வேறுபாடு கிடையாது. அதுபோல டிவி நிகழ்ச்சிகளில் என்னை கூப்பிடாமல் தவிர்க்கலாம் இல்லை.

நிகழ்ச்சிக்கு என்னை கூப்பிடுகிறார்கள், ஆனால் என்னால் இப்போது அங்கு முன்பு போல போக முடியவில்லை. அடுத்தடுத்து பட வாய்ப்புகள் மற்றும் வெப் சீரிஸில் என்னுடைய கவனத்தை செலுத்திக் கொண்டிருக்கிறேன். அதனால் அது நோக்கி என்னுடைய பயணம் இருக்கிறது. வேறு எதுவும் இல்லை. என்னை பற்றி சில வதந்திகள் அடிக்கடி பரவி வருகிறது. ஆனால் அதுவெல்லாம் உண்மை கிடையாது என்று அந்த பேட்டியில் மைனா நந்தினி பேசியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+