திருமண வாழ்க்கையில் காதல் மட்டும் அல்ல இதுவும் வேண்டும்... வெளிப்படையாக பேசிய நடிகை நதியா
திருமண வாழ்க்கையில் காதலை தாண்டி மரியாதையும் ரொம்ப முக்கியம் என்று நடிகை நதியா கூறியிருக்கிறார்.
சென்னை: நடிகை நதியா தன்னுடைய திருமண வாழ்க்கையைப் பற்றி முதல் முறையாக மனம் திறந்து பேசி இருக்கிறார்.
நடிகை நதியா ஷிரிஷ் காட்போல் என்பவரை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார்.
தன்னுடைய காதல் திருமண வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் மற்றும் ரசிகர்களுக்கு சில அறிவுரைகளையும் நதியா பகிர்ந்து இருக்கிறார்.

காதல் திருமணம்
நடிகை நதியாவின் இயற்பெயர் ஜெரினா மொய்டு என்று தான் இருந்திருக்கிறது. பின்பு திரைப்படங்களுக்காக தான் தன்னுடைய பெயரை மாற்றி இருக்கிறார். இவர் முதல் முதலாக 1984 ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான நோக்கேத தூரத்து கண்ணும் நாடு என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி அந்த திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம் பேர் விருதையும் வென்றிருக்கிறார். நடிகை நதியாவின் அப்பா ஒரு முஸ்லிமாக இருந்த நிலையில் அவருடைய அம்மா ஒரு இந்துவாக இருந்திருக்கிறார். இவர்களுடைய திருமணம் கலப்பு திருமணம் ஆக இருந்த நிலையில் நடிகை நதியாவும் 1988 இல் ஷிரிஷ் காட்போல் என்பவரை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார்.

இரண்டு மகள்கள்
நடிகை நதியா பூவே பூச்சூடவா திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமாகி அதற்குப் பிறகு பல ஹிட் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்து விட்டார். 80ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது 2கே கிட்ஸ்களும் ரசிக்கும் நடிகையாக இருந்து வருகிறார். இவருக்கு வயதே ஆகாதா என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். திருமணத்திற்குப் பிறகு நடிகை நதியாவிற்கு சனம் மற்றும் ஜனா என்ற இரு மகள்கள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு தனது கணவர் மற்றும் மகள்களுடன் அமெரிக்காவில் வசித்து வந்த நடிகை நதியா 2008 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு திரும்பி வந்தார். தற்போது இவர் மும்பையில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய திருமண வாழ்க்கை பற்றி பேசி இருக்கிறார்.

காதல் தொடக்கம்
தன்னுடைய காதல் திருமண வாழ்க்கையைப் பற்றி நடிகை நதியா பல தகவல்கள் கூறி இருக்கிறார் அதில் என்னுடைய அம்மாவும் அப்பாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாலோ என்னவோ எனக்கும் காதல் எளிதாக வந்துவிட்டது. நான் நடிக்க வருவதற்கு முன்பே என்னுடைய கணவர் எனக்கு நன்றாக தெரியும். எங்கள் வீட்டின் பக்கத்து வீட்டில் தான் அவர்கள் இருந்தார்கள். நான் காலேஜ் படித்துக் கொண்டிருக்கும் போது நடிக்க வந்து விட்டதால் பிறகு காலேஜ் படிக்க முடிக்கவில்லை.இவர் நடித்துக் கொண்டிருக்கும் போது அவருடைய கணவர் படித்து கொண்டு தான் இருந்தாராம். அதுமட்டுமல்லாமல் இவர்கள் இருவரும் அப்போது கடிதத்தின் மூலமாகத்தான் காதலை வளர்த்து இருக்கிறார்கள்.

மரியாதை முக்கியம்
ஆரம்பத்தில் நடிகை நதியா அவருடைய கணவரோடு பிரண்டாக பழகி பிறகு சிறிது நாட்களிலே அது காதலாக மாறி இருக்கிறது. இவர்களுடைய காதல் விஷயம் வீட்டில் தெரிந்ததும் சின்ன வயசாக இருக்கிறது. அதுவும் இருவரும் வெவ்வேறு மதம் என்றெல்லாம் யோசித்திருக்கிறார்கள். நடிகை நதியாவும் புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகைகளின் ஒருவராக இருந்திருக்கிறார். அவருடைய கணவருக்கு அப்போதுதான் முதல்முறையாக வேலை கிடைத்திருக்கிறது. பிறகு இருவருக்கும் இருவீட்டார் சம்மதித்து திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் இப்ப வரைக்கும் தன்னுடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார். நான் சின்ன வயதிலேயே திருமணத்தை செய்து இருந்ததால் தான் இப்போதும் இளமையாக அம்மாவாக இருக்கிறேன் என்று தனக்கே உரிய சிரிப்போடு கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் திருமண வாழ்க்கையில் காதலை தாண்டி மரியாதை ரொம்ப முக்கியம். நாம் நம்முடைய துணைக்கு மரியாதை கொடுத்து வந்தால் அங்கே பிரச்சனைக்கு இடமே இல்லை என்று கூறியிருக்கிறார்.
-
சிறகடிக்க ஆசை சீரியல் அணிலா ஸ்ரீகுமாருக்கு 3வது கல்யாணம்.. குழந்தைகள் முன்பே நடந்த சம்பவம்! குவியும் வாழ்த்து -
ராத்திரி நேரத்து பூஜையில்.. விஜய் டிவி நிகழ்ச்சியில் டிஸ்கோ சாந்தி போட்ட டான்ஸ்! அசந்து போன ரம்பா! -
கண் கலங்க வைத்த நீயா நானா.. இது பலருக்கும் பாடம்.. கடந்து வந்த வலி, கோபிநாத்தை மிரட்டி விட்ட அம்மா! -
கொலை மிரட்டல் விடுறாங்க.. பயமா இருக்கு.. கமிஷனர் ஆபீஸில் பதறிய வாட்டர் மெலன் திவாகர்! -
உயிரே போயிடும்னு நினைத்தேன்! அந்த அளவிற்கு வலி, வேதனை! பெங்களூரில் நடந்த சம்பவம்! நடிகை ஐஸ்வர்யா உருக்கம்












Click it and Unblock the Notifications