யாரடி நீ மோகினி புகழ் நட்சத்திராவுக்கு குழந்தை பிறந்தது. நட்சு 2.0 ஃபுல்லி லோடட்னு வாழ்த்திய சைத்ரா
சென்னை: ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வந்த யாரடி நீ மோகினி சீரியலில் நடித்த நட்சத்திராவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
ஜீ தமிழ் சேனலில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வந்த சீரியல் யாரடி நீ மோகினி . இதில் வெண்ணிலா எனும் அப்பாவி பெண் கேரக்டரில் நடித்திருப்பவர் நட்சத்திரா. இவர் கலர்ஸ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வந்த வள்ளி திருமணம் என்ற சீரியலில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நட்சத்திரா ஜீ தமிழ் சேனலில் சீரியல்களின் தயாரிப்பு நிர்வாக பணிகளை மேற்கொண்டு வரும் விஸ்வநாதனை காதலித்து வந்துள்ளார். இவர் விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ குடும்பத்திற்கு நெருக்கமானவர் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் திடீரென திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணம் குறித்து நட்சத்திராவின் தோழி நடிகை ஸ்ரீ நிதி ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் விஸ்வநாதன், நட்சத்திராவை கடத்தி திருமணம் செய்து கொண்டார், அவருடைய உயிருக்கே ஆபத்து என்றெல்லாம் பதிவிட்டிருந்தார். இதை நட்சத்திரா பகிரங்கமாக மறுத்தார். தனது தாத்தாவின் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாகவும் அவர் தன்னை திருமண கோலத்தில் பார்க்க விருப்பப்பட்டதாகவும் அதனால்தான் தானும் விஸ்வாவும் ஒரு கோயிலில் குடும்பத்தார் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டோம் என்றும் நட்சத்திரா தெரிவித்திருந்தார்.
மேலும் ஸ்ரீமதியின் தாய்க்கு எங்களது திருமணம் குறித்து தெரியும் என்றெல்லாம் கூறியிருந்தார். இதுகுறித்து ஸ்ரீமதியின் தாயிடம் கேட்ட போது நட்சத்திரா எங்கள் வீட்டில்தான் தங்கியிருந்தார். ஸ்ரீமதி சொன்னது போல் நட்சத்திராவை யாரும் கடத்தவில்லை, இத்தனை நாள் ஒன்றாக இருந்து விட்டு தற்போது திடீரென பிரிவு ஏற்படுவதை தாங்க முடியாமல் ஸ்ரீமதி அப்படி சொல்கிறார் என நினைக்கிறேன் என்றார்.

இந்த நிலையில் நட்சத்திரா அண்மையில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இதற்கு அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறினர். இந்த நிலையில் நட்சத்திராவுக்கு கடந்த இரு மாதங்ககளுக்கு முன்பு வளைகாப்பு நடந்தது. இந்த விழாவில் சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடிகை சைத்ரா ரெட்டி கலந்து கொண்டு தனது தோழியை கட்டி அணைத்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிலையில் அவ்வப்போது நட்சத்திரா போட்டோ ஷூட் எடுத்து ரீல்ஸ் செய்து வந்தார். நட்சத்திராவை கயல் நடிகை சைத்ரா ரெட்டி விளையாட்டுக்காக பாடாய்படுத்தினார். இந்த வீடியோவும் வைரலானது. இந்த நிலையில் நட்சத்திராவுக்கு நேற்றுஇரவு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரே பதிவிட்டுள்ளார். குழந்தையின் கைகளை பிடித்துக் கொண்டிருப்பது போன்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
நட்சத்திராவுக்கு வாழ்த்துகள் குவிகின்றன. சைத்ரா ரெட்டியோ நட்சு 2.0 என வாழ்த்தியுள்ளார். அது போல் கீகீயும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார், ரோபோ சங்கர் மகள் இந்திரஜா வாழ்த்துகள் அக்கா என தெரிவித்துள்ளார். நட்சத்திராவுக்கு சீரியல் நடிகர், நடிகைகள் வாழ்த்துகளை பரிமாறி வருகிறார்கள். நிறைய பேர் விஸ்வநாதனுக்கு போன் செய்து நட்சத்திராவை நலம் விசாரித்து வாழ்த்துகளையும் கூறுகிறார்கள்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications