நடிகர் ராமராஜனின் மேக்கப்.. அந்த ஊசியால் தான் இப்படி.. மகன்தான் காரணம்.. நடிகை நளினி உடைத்த உண்மை
சென்னை: நடிகை நளினி பல முன்னணி நடிகர்களோடு கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த இவர் தற்போது உடல் எடை அதிகமாகி இருக்கிறார். அது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
அதுபோல தான் உடல் எடை கூடியதற்கு காரணம் தன்னுடைய மகன் சொன்ன வார்த்தைதான். அதனால் தான் நான் இப்படி ஆனேன் என்றும் கூறி இருக்கிறார்.
அதோடு நடிகை நளினி ராமராஜனை பிரிந்து இருந்தாலும் அவர் பற்றிய சில ரகசியங்களையும் பகிர்ந்து இருக்கிறார்.

சின்னத்திரை வெள்ளி திரையில் ஒன்றாக வேலை பார்ப்பவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதியதில்லை. அது பல வருடங்களாகவே நடந்து கொண்டிருக்கிறது. அந்த மாதிரி தான் பல வருடங்களுக்கு முன்பு வெள்ளி திரையில் ஒன்றாக நடித்து, காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தான் நடிகை நளினி மற்றும் ராமராஜன்.
ஆரம்பத்தில் நளினிக்கு அதிகமான திரைப்படங்களில் கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்துக் கொண்டிருந்தது. அந்த காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் இவரும் ஒருவராக இருந்து வந்தார். அப்போதுதான் நடிகர் ராமராஜன் ஒரு சில திரைப்படங்களில் நடிக்க தொடங்கியிருந்தார். ராமராஜன் நடித்த திரைப்படங்கள் கிராமப்புறங்களை சார்ந்ததாக இருந்தாலும் இதுவும் அவருக்கு பெரிய அளவில் ஹிட் கொடுக்க தொடங்கியிருந்தது.
நளினி முன்னணி நடிகையாக இருந்தாலும் ராமராஜன் தொடக்கப் புள்ளியில் இருந்த நேரத்தில் இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டு பின்பு இருவருடைய வீட்டையும் எதிர்த்து திருமணமும் செய்து கொண்டனர். மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களுடைய வாழ்க்கையில் இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு சில வருடங்கள் கழித்து சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது.
என்னதான் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விவாகரத்து வாங்கி இருந்தாலும், இப்போது வரைக்கும் இவர்கள் இருவருமே ஒருவரைப் பற்றி ஒருவர் எந்த இடத்திலும் குறை கூறியது இல்லை. நாங்கள் இருவரும் எங்களுக்குள் பேசி விவாகரத்து செய்து விட்டோம். அவ்வளவுதான் இப்போதும் நண்பர்களாக இருக்கிறோம் என்று பலருக்கும் முன்மாதிரியாக இருக்கிறார்கள். இப்போது சின்னத்திரையில் பல நடிகர்கள் காதலித்து திருமணம் ஆகி சில மாதங்களுக்குள் குடும்ப ரகசியங்களை எல்லாம் சந்தி சிரிக்க வைத்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது தான்.
இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு பிரேக் விட்டிருந்த நடிகை நளினி இப்போது தொடர்ச்சியாக சினிமாக்களிலும், சீரியலிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னுடைய குடும்ப வாழ்க்கை மற்றும் திரை வாழ்க்கை குறிப்பு பேசிக் கொண்டிருந்தார். அப்போது நான் இந்த அளவிற்கு குண்டாகி இருப்பதற்கு காரணம் என்னுடைய மகன்தான். அவன் தான் ஒருமுறை என்கிட்ட சொன்னான். நீங்க சினிமாவில் கதாநாயகியாக இருக்கலாம் ஆனால் நிஜத்தில் என்னுடைய அம்மா.
ஒரு அம்மா எப்படி இருப்பாங்களோ அந்த மாதிரி நீங்க இருங்க எனக்கு அப்படித்தான் பிடிக்கும் என்று சொன்னான். அவனுக்காகத்தான் நான் ஸ்டீராய்டு ஊசி போட்டு என்னுடைய உடல் எடையை கூட்டினேன். அதுபோல நான் கதாநாயகி அதனால் சாப்பாடு கஞ்சத்தனம் எல்லாம் காட்ட மாட்டேன். எனக்கு பிடித்ததை வகைவகையாக சாப்பிடுவது தான் வழக்கம்.
எங்க வீட்டில் பெரிய வாழை இலையில் கல்யாண வீட்டு சாப்பாடு போல எல்லா வகையான கூட்டு பொரியல் குழம்பு என பலவற்றை வைத்து நான் வெளுத்து கட்டுவது என்னுடைய வாடிக்கை. நான் குண்டாக இருக்கிறேனே என்று எப்போதும் வருத்தப்பட்டது கிடையாது என்று சிரித்தபடியே கூறியிருக்கிறார்.
அதோடு அந்த பேட்டியில் நடிகர் ராமராஜன் அதிகமாக மேக்கப் போடுகிறார் என்று இப்போது பலர் கிண்டல் செய்கிறார்களே, நீங்கள் அவருடைய மேக்கப் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம் என்று அவரிடம் எப்பவாவது சொல்லி இருக்கீங்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு கண்டிப்பா கிடையாது. நான் எப்போதுமே அவருடைய நடிப்பில் தலையிட்டதே கிடையாது. என் புருஷன் அப்போ முன்னணி நடிகராக இருந்தாரு. அதனால அந்த நேரத்துல யாருமே இப்படி கிண்டல் எல்லாம் பண்ணுனது கிடையாது என்று கூறியிருக்கிறார்.
இதை பார்த்த இவர்கள் இருவருடைய ரசிகர்களும் பிரிந்து இருந்தாலும் இவர்கள் இருவருக்கும் இருக்கும் புரிதலும், ஒருவருக்கு ஒருவர் கொடுக்கும் மரியாதையும் பார்க்கும்போது இவர்கள் மீது தனி மரியாதை வருகிறது என்றும் சில காரணங்களால் இருவரும் பிரிய நேரிட்டாலும் சேர்ந்திருந்த காலத்தை மறக்காமல் நளினி குறிப்பிடுவதை பலர் பாராட்டியும் வருகின்றனர்.
-
சிறகடிக்க ஆசை: மனோஜ்க்கு நடந்த நிச்சயதார்த்தம்.. விஜயாவை சிக்க வைத்த ஸ்ருதி.. முத்துக்கு தெரிந்த விஷயம் -
இதுவும் கடந்து போகும்.. பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவின் மறுபக்கம்.. நீயா நானாவில் கண் கலங்கிய அம்மா -
பரிதாப நிலையில் “எங்கேயும் காதல்” பட பாடகர்.. கேபிஒய் பாலா வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ.. கலங்க வைத்த காட்சி -
நீயா நானாவில் யாமினி சொன்ன காதல் கதை.. கண்கலங்கி நின்ற கோபி நாத்.. கடைசியில் சொன்ன ‘நச்’ அட்வைஸ் -
சித்திரை திருநாளில் கிடைத்த பரிசு.. இரண்டு வருடம் கழித்து பிறந்த குழந்தை.. பிரதீப் ஆண்டனி நெகிழ்ச்சி பதிவு -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க












Click it and Unblock the Notifications