ராமராஜனும் நானும் பிரிந்த உண்மை காரணம்! 13 வருஷமா இழுத்து பிடிச்சி வாழ்ந்தோம்! நடிகை நளினி உருக்கம்
சென்னை: 80 மற்றும் 90-களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழித் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை நளினி. வெள்ளித்திரையில் கொடிகட்டிப் பறந்த இவர், திடீரென நடிகர் ராமராஜனை திருமணம் செய்துகொண்டார். சுமார் 13 ஆண்டுகள் நீடித்த இவர்களது திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்த நிலையில், பிரிவுக்குக் காரணம் என்ன என்று நளினி மனம் திறந்து பேசியுள்ளார்.

நளினி & ராமராஜன்: ஒரு பார்வை
நடிகை நளினி 1980 மற்றும் 90-ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர். கதாநாயகியாக மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து பிரபலமானவர். இவர், சின்னத்திரையிலும் பல வெற்றித் தொடர்களில் நடித்துள்ளார். குறிப்பாக, இவரது நடிப்பில் வெளியான 'சின்ன பாப்பா பெரிய பாப்பா' என்ற காமெடி சீரியல் இவருக்கு ஒரு பெரிய அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது. இப்போதும் தொடர்ந்து சினிமா மற்றும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்
நடிகர் ராமராஜன்
'மக்கள் நாயகன்' என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகர் ராமராஜன். இவர், 80 மற்றும் 90-களில் பல கிராமியப் பின்னணி கொண்ட வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். பெரும்பாலும், வெள்ளைச் சட்டை, வேட்டி, அரை டவுசர் போட்டுக்கிட்டு கிராமத்துக் கதாநாயகனாக நடித்தே இவர் தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
பிரிவுக்கு காரணம்
நடிகை நளினியும் நடிகர் ராமராஜனும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 13 வருடங்கள் நல்லபடியாகப் போயிருந்த இவர்களது இல்லற வாழ்க்கையில், கருத்து வேறுபாடு காரணமாக 2000-ஆம் ஆண்டு விவாகரத்துப் பெற்றுப் பிரிந்தனர்.
இந்த நிலையில், பிரிவுக்குக் காரணம் என்ன என்று நடிகை நளினி சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அது மிகவும் வித்தியாசமானதாகவும், அதிர்ச்சி அளிப்பதாகவும் உள்ளது: "நல்லா போயிருந்த வாழ்க்கையில நாங்க பிரிஞ்சதுக்குக் காரணம் ஜாதகம் தான். அவர் (ராமராஜன்) நல்லா ஜோசியம் பார்ப்பார்." "நாம பிரிஞ்சிடுவோம்னு சொல்லிக்கிட்டே இருப்பார்!"
"கல்யாணம் ஆன கொஞ்ச வருஷத்திலேயே 'நாம நாலு, அஞ்சு வருஷத்துல பிரிஞ்சிடுவோம்' என்று சொல்லிட்டே இருப்பார். ஆனால் எப்படியோ ரப்பர் மாதிரி 13 வருஷம் இழுத்துட்டு வந்துட்டோம்." மேலும், அவர் எதற்காகத் தன்னைத் திருமணம் செய்துகொண்டார் என்று ராமராஜன் கூறிய மற்றொரு தகவலையும் நளினி பகிர்ந்துள்ளார்.
"உன்னை கல்யாணம் பண்ணதால தான் நல்லா இருந்தேன். அதே மாதிரி, கல்யாணத்துக்கு எம்.ஜி.ஆர் வருவாங்க என்ற ஒரே காரணத்துக்காகத் தான் உன்னைக் கல்யாணம் பண்ணினேன் என்றும் (ராமராஜன்) சொல்லுவார்" என நடிகை நளினி தெரிவித்தார்.
ஜாதக ரீதியிலான முரண்பாடுதான் பிரிவுக்குக் காரணம் என்று நளினி கூறியிருக்கும் இந்தத் தகவல், ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் பிரபல ஜோடிகளில் ஒருவரான நளினி - ராமராஜனின் விவாகரத்துக் கதை, பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. இவர்கள் இருவரும் பிரிந்து போய் இருந்தாலும் இப்போதும் ஒருவரை ஒருவர் எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல் குறை சொல்லாமல் பேசுவது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications