சிலுக்குக்கு "அந்த” ஆசை இருந்துச்சு.. "அந்த” காரணத்தால் ராமராஜனை பிரிந்தேன்..மனம் திறந்த நடிகை நளினி
சென்னை: நடிகை நளினி வெள்ளித்திரையில் கதாநாயகியாக நடித்து இப்போது சின்னத்திரையிலும் முன்னணி கேரக்டரில் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
வயதானாலும் தன்னுடைய மனது எப்போதும் குழந்தை போல தான் என நளினி பல காமெடியான கேரக்டரில் நடித்து பலரையும் மகிழ்வித்து கொண்டு இருக்கிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் தன்னுடைய திருமண வாழ்க்கை, பிரிவு குறித்தும் நடிகை சில்க் ஸ்மிதா பற்றியும் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

1981 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த ராணுவ வீரன் திரைப்படத்தில் நளினி அறிமுகமாகி இருந்தாலும் மலையாளம், தமிழ் என தென்னிந்திய மொழி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். அப்போதுதான் நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்திருந்தார். ஆனாலும் சில வருடங்களில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்தனர்.
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னுடைய திருமண வாழ்க்கை, சினிமா வாழ்க்கை பற்றிய பல அனுபவங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் "வாழையடி வாழை" என்ற திரைப்படத்தின் சூட்டிங்கை உறவினரோடு நான் பார்க்க போனேன். அப்போதுதான் படப்பிடிப்பை பார்த்து நான் வியந்து போனேன். எங்க அப்பாவுக்கு சினிமாவில் நடிப்பதற்கு விருப்பமே கிடையாது.
ஆனா எங்க அம்மா ஒரு டான்ஸ் டீச்சர் என்பதால் நான் நடிகையாக வேண்டும் என்று அவருக்கு அதிகமாக ஆசை இருந்தது. அதோடு நான் நடிக்கப் போகிறேன் என்று தெரிந்ததும் என்னுடைய அப்பா முதலில் மறுத்து, பிறகு வீட்டை விட்டு கிளம்பி போய்விட்டார். அப்போது என்னுடைய மூத்த அண்ணனும் வீட்டை விட்டு போய்விட்டார். ஆனாலும் அம்மா நான் நடிகையாக வேண்டும், உன்னுடைய திறமையை வெளிக் கொண்டு வர வேண்டும் என்று உறுதியாக கூறி எனக்கு முழு சப்போர்ட் கொடுத்தார்.
அந்த நேரத்தில் முன்னணி நடிகையாக நடித்துக் கொண்டிருக்கும் போது நடிகர் ராமராஜன் என்னை காதலித்தது எனக்கு தெரியும். ஆரம்பத்தில் அவர் கூட பேசியதை என்னுடைய உதவியாளர் பார்த்துவிட்டு அம்மாவிடம் சொல்லிவிட்டார். அதனால் அவரை எனது உறவினர்கள் அடித்தார்கள். எனக்காக அடியெல்லாம் வங்கி இருக்கிறாரே என்று அவர் மீது எனக்கு காதல் வந்துவிட்டது.
அதுபோல என்னுடைய மேக்கப் மெனுக்கு அப்போது செலவுக்கு பணத்தை கொடுத்து எனக்காக லவ் லெட்டர் எல்லாம் கொடுத்து விடுவார். நானும் அதை ரகசியமாக பாத்ரூமுக்குள் வைத்துக் கூட படித்திருக்கிறேன். அதை எல்லாம் மறக்க முடியாத நினைவுகள் அதை இப்போதும் பத்திரமாக வைத்திருக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.
அத்தோடு மேலும் பேசுகையில் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டால் நான்கு வருடத்தில் பிரிந்து விடுவோம் என்று ஜோசியத்தில் சொன்னார்கள். ஆனால் நான் 12 வருடங்களாக அந்த வாழ்க்கையை பிடித்து வைத்திருந்தேன். பிறகு வேறு வழியில்லாமல் தான் விவாகரத்து செய்ய வேண்டிய நிலைமை வந்துவிட்டது. எங்கள் குடும்பத்தில் யாருக்குமே விவாகரத்து ஆனதே கிடையாது. எனக்கு தான் முதல் முறையாக விவாகரத்து நடந்தது.
அது அந்த நேரத்தில் ஒரு கெட்ட வார்த்தை என்பது போல பார்க்கப்பட்டது. வேறு வழியில்லாமல் ஜாதகத்தால் நாங்கள் விவாகரத்து செய்து கொண்டோம் என்று நளினி கூறி இருக்கிறார். மேலும் அவர் பேசுகையில் நடிகை சில்க் ஸ்மிதாவை பற்றியும் பேசி இருக்கிறார்.
சில்க் சுமிதாவை எனக்கு தெரியும். அவரோடு பலமுறை பேசி பழகி இருக்கிறேன். அவர் ஒரு குழந்தை போல வெகுளியானவர்தான். அவருக்கு கல்யாணம் செய்து திருமண வாழ்க்கையில் வாழ வேண்டும் என்று ரொம்பவே ஆசை உண்டு. அதற்காக அவர் காத்திருப்பதாகவும் சொல்லி இருக்கிறார். செண்பகமே செண்பகமே திரைப்படத்தில் நாங்க நடிக்கும் போது என்னுடைய தாலியை பிடித்து பார்த்து நானும் இப்படி எல்லாம் போட வேண்டும் என்று கூட சொல்லி இருக்கிறார், என்று நடிகை நளினி சில்க் ஸ்மிதாவை பற்றி நினைவுகளை பகிர்ந்து இருக்கிறார்.
-
சிறகடிக்க ஆசை: மனோஜ்க்கு நடந்த நிச்சயதார்த்தம்.. விஜயாவை சிக்க வைத்த ஸ்ருதி.. முத்துக்கு தெரிந்த விஷயம் -
இதுவும் கடந்து போகும்.. பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவின் மறுபக்கம்.. நீயா நானாவில் கண் கலங்கிய அம்மா -
பரிதாப நிலையில் “எங்கேயும் காதல்” பட பாடகர்.. கேபிஒய் பாலா வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ.. கலங்க வைத்த காட்சி -
நீயா நானாவில் யாமினி சொன்ன காதல் கதை.. கண்கலங்கி நின்ற கோபி நாத்.. கடைசியில் சொன்ன ‘நச்’ அட்வைஸ் -
சித்திரை திருநாளில் கிடைத்த பரிசு.. இரண்டு வருடம் கழித்து பிறந்த குழந்தை.. பிரதீப் ஆண்டனி நெகிழ்ச்சி பதிவு -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க












Click it and Unblock the Notifications