நடிகை நளினி வீட்டில் விசேஷம்.. மகள் கொடுத்த சர்ப்ரைஸ்.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: நடிகை நளினியின் பிறந்த நாளான இன்று அவருடைய மகள் அருணா தன்னுடைய instagram பக்கத்தில் அம்மா குறித்து நெகிழ்ச்சியான ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார். இது இணையத்தில் பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது. இதற்கு நடிகை ராதிகா சரத்குமார் உட்பட பல நடிகைகளும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
80ஸ் காலகட்டத்தில் பல நடிகைகள் அறிமுகம் ஆகி இருக்கிறார்கள். அவர்களில் ஒரு சிலர் மட்டும் அதிகமான ரசிகர்களின் மனதில் இப்ப வரைக்கும் சிம்மாசனம் இட்டு அமர்ந்து இருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் நடிகை நளினி. பொதுவாக ஒரு சில நடிகைகள் கதாநாயகி ஆவதற்கு முன்பு சில திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் வந்து போய் இருப்பார்கள்.

அந்த மாதிரி தான் ஆரம்பத்தில் நடிகை நளினி ரஜினிகாந்த் நடித்த "ராணுவ வீரன்" திரைப்படத்தில் சின்னதாக ரஜினியின் தங்கை கேரக்டரில் நடித்திருந்தார். ஆனால் அது அவருக்கு பெரிய அளவில் பிரபலத்தை கொடுக்கவில்லை. அதற்கு பிறகு ஓம் சக்தி, சமயபுரத்தாளே போன்ற சாமி படங்கள் இவருக்கு பெரிய ஒரு பிரபலத்தை கொடுத்தது. சாமி படத்தில் நடித்தால் அப்படியே நடிக்க வேண்டும் என்று இல்லை என்று இவர் அடுத்ததாக கதாநாயகியாகவும் நடிக்க தொடக்கி விட்டார்.

நளினியின் அப்பா மூர்த்தி திரைத்துறையில் நடன இயக்குனர், அம்மா பிரேமாவும் நடனத்துறையில் இருந்தவர்தான். அதனாலேயே நளினிக்கு டான்ஸும் நடிப்பும் இயல்பாகவே வந்து விட்டது. நளினியோடு பிறந்தவர்கள் ஆறு பேர். நளினி வீட்டில் நளினி தான் இரண்டாவதாக பிறந்திருக்கிறார். ஏழாவது வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது இவர் டான்ஸ் கிளாஸ் போய்க் கொண்டிருக்கும் போது சின்ன சின்ன வாய்ப்புகள் நடிக்க வந்ததால் படிப்புக்கு பிரேக் கொடுத்துவிட்டு சினிமாவே போதும் என்று அவருடைய குடும்பத்தினர் எடுத்த முடிவால் நளினி படிப்பை விட்டுவிட்டு நடிக்க வந்துவிட்டார்.

அது பற்றி நளினி பல இடங்களில் பீல் பண்ணி இருக்கிறார். நான் நடித்து பலருக்கு பிரபலமாக இருந்தாலும் படிக்கவில்லையே என்ற வருத்தம் எனக்கு இப்ப வரைக்கும் இருக்கிறது என்று நளினி கூறி இருக்கிறார். அதோடு இயக்குனர் மற்றும் நடிகரான டி ராஜேந்திரன் இயக்கத்தில் வெளியான உயிருள்ளவரை உஷா திரைப்படத்தில் நளினியை அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் மறக்க முடியாது.
அவருடைய பெரிய கண்களும், சுருள் சுருளான முடிகளும், எளிமையான சிரிப்பும் பார்ப்பவர்களுக்கு வயது வித்தியாசம் இல்லாமல் பிடித்துப் போனது. அந்த படத்தில் நளினிக்காகவே பலர் அந்த படத்தை திரும்ப திரும்ப பார்த்தார்கள் என்று சொல்லலாம். அதனாலேயே என்னவோ அந்த படம் ஹவுஸ் புல்லாக 100 நாட்களை கடந்து ஓடியது. இந்த திரைப்பட வெற்றியை தொடர்ந்து டி.ராஜேந்திரன் இயக்கத்தில் நளினி அடுத்தடுத்து பல படங்களில் நடித்திருந்தார்.
அதிலும் தங்கைக்கோர் கீதம் படத்திலும் தன்னுடைய நடிப்பால் பலரையும் கட்டிப்போட்டு இருப்பார். ஒரு படத்தில் பணக்கார வேடத்திலும், இன்னொரு படத்தில் ஏழை வீட்டு பெண்ணாகவும், இன்னொரு படத்தில் நுனி நாக்கில் இங்கிலீஷ் பேசும் பெண்ணாகவும், இன்னொரு படத்தில் பாவாடை தாவணி என்று பல விதங்களில் நடித்து அந்த கால இளைஞர்களின் மனதில் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருந்தார்.

அதோடு 80களில் டாப் ஹீரோவாக இருந்த கமல், ரஜினியோடு இவர் நடிக்கவில்லை என்றாலும் விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், மோகன், முரளி, அர்ஜுன் என்று அதிகமான நடிகர்களோடு இவர் நடித்திருக்கிறார். அதோடு அந்த காலகட்டத்தில் பெரிய அளவில் வெற்றியை கொடுத்த இயக்குனர்களின் படங்களில் கண்டிப்பாக நளினியும் இருக்கிறார்கள் என்று சொல்லும் வகையில் தான் அத்தனை இயக்குனர்களின் படங்களிலும் நடித்திருக்கிறார்.
அதோடு நளினியை ஒரு படத்திற்கு புக் செய்து விட்டால் நமக்கு தலைவலியே இல்லை என்று பல இயக்குனர்கள் அவரைப் பற்றி புகழ்ந்து பேசுவார்கள். காரணம் 10 மணிக்கு சூட்டிங் வரவேண்டும் என்றால் 9:00 மணிக்கு நளினி அந்த இடத்தில் வந்து இருந்து விடுவாராம். அது போல அதிகமான டேக் வாங்க மாட்டார் என்பது நளினிக்கு மேலும் ஒரு பிளஸ் பாயிண்ட். அதனால் இயக்குனர்கள் ஒரே நேரத்தில் பல படங்கள் இயக்குவது போல நளினியும் ஒரே நேரத்தில் பலமொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டு இருக்கிறார்.

அதனாலேயே நளினிக்கு ரசிகர்கள் போல இயக்குனர்களின் ஆதரவும் அதிகமாக உண்டாம். என்னதான் இவர் புகழின் உச்சத்தில் இருந்தாலும் இவருடைய திருமண வாழ்க்கை அப்படியே நளினியின் வாழ்க்கையை மாற்றி போட்டு விட்டது என்று தான் சொல்ல வேண்டும். தன்னுடைய திருமண வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் கவலைகள் இருந்தும் யார் மீதும் எந்த குறையும் சொல்லாமல் களங்கம் கற்பிக்காமல் அதிலிருந்து விலகி தன்னுடைய இரட்டை குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி பல்வேறு துயரங்களை தான் பட்டாலும் தன்னுடைய குழந்தைகள் யாரிடமும் கையேந்த கூடாது என்று தன்மானத்தோடு அன்று வளர்த்து இன்று இரண்டு குழந்தைகளையும் கௌரவமான நிலையில் நளினி வைத்திருக்கிறார்.
புகழின் உச்சத்தில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த நளினி தன்னுடைய குழந்தைகள் பிறந்த பிறகு சின்னத்திரை பக்கம் திரும்ப அங்கேயும் அவருக்கு பெரிய வரவேற்பு கிடைத்து விட்டது. அழுகை என்றால் அதற்கு ஒரு உடல் மொழி, சிரிப்பு என்றால் அதற்கு உடல் மொழி என்று நளினி தன்னை வெளிக்காட்டும் விதம் ரசிகர்கள் பாராட்டை பெற்றுக் கொண்டே இருக்கிறது. வடிவேல் உடன் லண்டன் திரைப்படத்தில் நளினியின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடக்கம் பெரிய அளவில் பெயர் வாங்கியது.
அந்த காமெடி பார்க்கும் ரசிகர்களின் கவலைகள் எல்லாம் பறந்து போய்விடும். தொடர்ந்து இப்போது சீரியல் மற்றும் சினிமாக்களில் நடித்துக் கொண்டிருக்கும் நளினியின் பிறந்த நாளை அவருடைய மகள் மற்றும் மகன் குடும்பத்தினர் எளிமையாக கொண்டாடி இருக்கிறார்கள். அப்போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நளினியின் மகள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

அதோடு தன்னுடைய அம்மா பற்றி ஒரு உருக்கமான பதிவும் கொடுத்திருக்கிறார். அதில் நீங்கள் எப்படி எல்லாரிடமும் இவ்வளவு அன்பாக இருக்க முடியும் என்று நான் எப்போதும் ஆச்சரியப்படுகிறேன். உங்களால் மட்டும் எப்படி முடிகிறது? உங்களின் உண்மையான காதலை உங்களை சார்ந்தவர்கள் உணரவில்லை என்பதை நான் உணர்வேன். நீங்கள் என் தாய் மட்டுமல்ல என்னுடைய சிறந்த நண்பர்.
என் நம்பிக்கைக்கு உரியவர், இந்த உலகில் எனக்கு தெரிந்த மிக அழகான ஆன்மா நீங்கதான். ஒவ்வொரு நாளும் நான் உங்களைப் போல நம்ப முடியாத பாதியாக இருக்க முயற்சிக்கிறேன். எங்கள் இதயமாக இருப்பதற்கு நன்றி.. எங்களுக்கு அரவணைப்புக்கும், ஒவ்வொரு ஊக்க வார்த்தைகளுக்கும், நீங்கள் எங்களை வளர்க்க செய்த தியாகத்திற்கும் நன்றி அம்மா என்று நளினியின் மகள் அருணா பகிர்ந்திருக்கும் நிலையில் அதற்கு நளினி நன்றி என்று கூறியிருக்கிறார். இந்த பதிவு இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது. இந்த பதிவிற்கு நடிகை ராதிகா சரத்குமார், சரண்யா பாக்கியராஜ், ரம்யா கிருஷ்ணன், நடிகை மதுமிதா போன்ற பல நடிகைகள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications