நவ்யா நாயருக்கு அரை முழம் பூவால் ரூ 1.14 லட்சம் அபராதம்! ஆஸ்திரேலியாவில் மல்லிகைக்கு ஏன் தடை?
திருவனந்தபுரம்: ஒரு அரை முழம் மல்லிகைப்பூ வைத்திருந்ததற்காக மலையாள நடிகை நவ்யா நாயருக்கு, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் விமான நிலைய அதிகாரிகள் ரூ 1.14 லட்சம் அபராதம் விதித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா மலையாளிகள் சங்கத்தினர் நடத்திய ஓணம் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள நடிகை நவ்யா நாயர் ஆஸ்திரேலியா சென்றார். அப்போது அவருக்கு விமான நிலையத்தில் நடந்த ஒரு விஷயத்தை விவரித்தார்.

அவர் கூறுகையில், நான் ஆஸ்திரேலியாவிற்கு வருவதற்கு முன்னர் எனக்கு என் தந்தை மல்லிகைப் பூ வாங்கிக் கொடுத்தார். அதை இரண்டாக கட் செய்து கொடுத்தார். ஒன்றை கொச்சியிலிருந்து சிங்கப்பூர் வரை செல்லும் போது தலையில் வைத்துக் கொள்ளச் சொன்னார். சிங்கப்பூர் சென்றதும் வைத்திருந்த பூ வாடி போகும் என்பதால் இன்னொரு துண்டு பூவை வைத்துக் கொண்டு ஆஸ்திரேலியா செல்லுமாறு தெரிவித்தார்.
இதனால் அவர் சொன்னதை போல் தலையில் பாதிப்பூவையும் மீதி பாதியை ஹேண்ட் பையிலும் வைத்துக் கொண்டு வந்தேன்.
ஆஸ்திரேலியாவிற்கு மல்லிகைப் பூ கொண்டு செல்லக் கூடாது என்பது எனக்கு தெரியாது. ஆனால் அதை தெரியாமல் இருந்திருக்கக் கூடாது. நானும் என் தந்தை சொன்னது போல் சிங்கப்பூர் டூ ஆஸ்திரேலியா சென்ற போது மீதி பாதி பூவை தலையில் வைத்துக் கொண்டேன்.
அப்போது விமான நிலைய அதிகாரிகள் என்னை சோதனை செய்த போது என் தலையில் இருந்த பூவை கவனித்துவிட்டனர். இதனால் 15 செ.மீ. பூவுக்காக அவர்கள் எனக்கு 1980 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ 1.14 லட்சத்தை அபராதமாக விதித்தனர். நான் வேண்டுமென்றே செய்யாவிட்டாலும் தவறு தவறுதான்.
அந்த அபராதத்தை 28 நாட்களுக்குள் செலுத்துமாறு எனக்கு உத்தரவிட்டனர். ஆஸ்திரேலியாவுக்கு ரூ 1 லட்சம் மதிப்பிலான பூவுடன் நான் சென்றேன் என நவ்யா நாயர் கலகலப்பாக தெரிவித்திருந்தார்.
மல்லிகை பூக்களுக்கு ஆஸ்திரேலியாவில் தடை விதிக்கப்படுவதற்கான காரணம், ஆஸ்திரேலியாவின் கடுமையான உயிர் பாதுகாப்பு (Biosecurity) விதிமுறைகளே முக்கிய காரணமாகும்.
உயிர் பாதுகாப்பு என்பது, வெளிநாடுகளில் இருந்து வரும் தாவரங்கள், விலங்குகள், பூச்சிகள் மற்றும் நுண்ணுயிரிகளால் உள்நாட்டு விவசாயம், சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரம் பாதிக்கப்படாமல் பாதுகாக்கும் ஒரு செயல்முறையாகும்.
வெளிநாடுகளில் இருந்து வரும் தாவரங்களில், நாம் அறியாத புதிய நோய்க்கிருமிகள் அல்லது ஆக்கிரமிப்பு களைகள் (Invasive Weeds) போன்றவை இருக்கலாம். இவை ஆஸ்திரேலியாவின் தனித்துவமான மற்றும் வளமான சுற்றுச்சூழல் அமைப்பை எளிதில் சேதப்படுத்தக்கூடும். இதைத் தடுக்கவே, மல்லிகை பூக்கள் உட்பட பல வெளிநாட்டு தாவரப் பொருட்களுக்கு ஆஸ்திரேலியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் வேளாண்மை மற்றும் நீர் வளத் துறை, மல்லிகை பூக்கள் உயிர் பாதுகாப்பு அபாயத்தைக் கொண்டிருப்பதாகக் கருதுகிறது. குறிப்பாக, மல்லிகை செடிகளில் பூச்சிகள், அவற்றின் முட்டைகள் அல்லது தீங்கு விளைவிக்கும் நோய்கள் இருக்கலாம். இவை ஆஸ்திரேலியாவில் பரவி, உள்நாட்டு தாவரங்கள் மற்றும் விவசாயப் பயிர்களுக்குச் சேதம் விளைவிக்கும்.
இதேபோல, மல்லிகை பூக்கள் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் போது, அவற்றில் உள்ள பூச்சிகள் மற்றும் நோய் கிருமிகளை அழிக்க, மெத்தில் புரோமைடு (Methyl Bromide) போன்ற பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இந்த இரசாயனங்கள் ஆஸ்திரேலியாவில் உள்ள பூச்சிகள் மற்றும் நோய்களை அழிக்க போதுமானதாக இருக்காது. மாறாக, அது உள்நாட்டு சுற்றுச்சூழலுக்கும், மனித ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கலாம்.
ஆகவே, மல்லிகை பூக்களுக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள தடை, அதன் பூச்சி மற்றும் நோய் அபாயங்களால், நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையே ஆகும்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications