Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாக்கியலட்சுமி இனியாவிற்கு நடந்த அவலம்.. கதை என்றாலும் இப்படியா பண்ணுவீங்க? இதை கவனிச்சிருக்கலாமே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இனியா கேரக்டரில் நடிகை நேஹா நடித்து வருகிறார். ஆனால் இந்த சீரியலில் இனியா கேரக்டர் மோசமாக காட்டப்படுவதாக ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். அது பற்றி பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகளின் கதையாக ஒளிபரப்பாகி வருகிறது. ஒரு குடும்பத் தலைவி வீட்டில் இருப்பவர்களால் படும் அவமானம், கஷ்டங்கள்.. பிறகு அதிலிருந்து மீண்டு வந்து தன்னுடைய திறமையை வெளிக்காட்டுவது போன்று இந்த சீரியல் காட்டப்படுகிறது.

Baakiyalakshmi Serial vijay TV

அதே நேரத்தில் பாக்கியலட்சுமி சீரியலில் சில சொதப்பல்களும், உலகத்தில் எங்கும் நடக்காத விஷயங்களும் கதையாக காட்டப்பட்டு வருகிறது. அது இணையத்தில் அடிக்கடி ட்ரோல் செய்யப்படுகிறது. இந்த சீரியலில் கதாநாயகி பாக்யாவின் கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார்.

அதுவும் பாக்யாவின் நெருங்கிய தோழிதான். அவர்தான் பாக்யாவின் கணவர் கோபியின் தோழி என்பது பாக்கியாவிற்க்கு தெரியாமல் இருக்கிறது. பிறகு பாக்யாவை ஏமாற்றி விவாகரத்து வாங்கி ராதிகாவை கோபி திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் திருமணத்திற்கு பிறகு கோபியின் அப்பா மற்றும் அம்மாவை பாக்கியாதான் கவனித்துக் கொள்கிறார்.

அளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய பாக்கியலட்சுமி “கோபி”.. ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி
ஆனாலும் பாக்கியாவின் மாமியார் பல இடங்களில் பாக்கியாவை அவமானப்படுத்தி பேசிக்கொண்டு தன்னுடைய மகனுக்கு சப்போர்ட் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் தன்னுடைய மகனாலும் இரண்டாவது மருமகள் ராதிகாவாலும் ஈஸ்வரிக்கு பல பிரச்சனைகள் வருகிறது. அப்போது கூட பாக்கியா தான் ஈஸ்வரிக்கு சப்போர்ட் செய்து காப்பாற்றுகிறார்.

Baakiyalakshmi Serial vijay TV

இது ஒரு பக்கம் இருந்தாலும் இந்த சீரியலில் சில கேரக்டர்கள் மட்டும் புரியாத புதிராகவே இருக்கிறது. அதிலும் இனியாவின் கேரக்டரை சொல்லவே வேண்டாம். இனியா கேரக்டர் என்ன மாதிரி உருவாக்கப்பட்டிருக்கிறது என்று பார்க்கும் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, அந்த கேரக்டரில் நடிக்கும் நடிகைக்கு தெரிந்திருக்காது. அதை உருவாக்கிய இயக்குனருக்கும் தெரிந்திருக்காது போல.

ஒவ்வொரு வாரமும் டிஆர்பிக்கு தகுந்த மாதிரி இனியாவின் கேரக்டர் மாற்றிக் கொண்டே இருக்கிறார். ஒரு வாரம் அம்மா செய்வது சரி என்று சொல்லும் இனியா அடுத்த வாரமே அம்மா தப்பு அப்பா தான் சரி. அம்மா சுயநலமா இருக்கிறாங்க என்று அப்படியே மாற்றிப் பேசி விடுவார், அதற்கு அடுத்த நாள் மீண்டும் அம்மா தான் சரி என்று பேசிக்கொண்டு இருப்பார்.

பாக்கியலட்சுமி: இனியாவுக்கு புது ஜோடி.. ஈஸ்வரியிடம் நறுக்குன்னு ராதிகா கேட்ட கேள்வி.. மனம் மாறிய எழில்
இது மட்டுமல்லாமல் இனியாவிற்கு ஒவ்வொரு வருஷமும் ஒரு காதலரை இந்த சீரியலில் புகுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஸ்கூல் படிக்கும்போது பள்ளியில் ஒரு காதலன். அந்த காதலரை நம்பி பிரண்ட்ஸ்கள் எல்லாம் ஒரு வீட்டிற்கு போய் இருக்கும் போது அங்கு அந்த காதலன் தவறாக நடந்து கொள்ள அப்போது பாக்கியா தான் காப்பாற்றினார்.

பிறகு டியூஷன் சேர்ந்தால் அங்கு ஒரு காதலர். அதற்குப் பிறகு கல்லூரியில் சேர்க்கும் போது பழனிச்சாமியின் உறவினர் ஒரு காதலராக என்ட்ரி கொடுத்தார். ஆனால் இப்போது இன்றைய எபிசோடில் புதியதாக ஒரு நபர் அறிமுகம் ஆகி இருக்கிறார். அவரும் இனியாவை காதலிப்பது போன்று தான் பேசிக் கொண்டிருக்கிறார்.

அவர் கனா காணும் காலங்கள் வெப் சீரிஸில் அஜித் கேரக்டரில் நடித்தவர். இந்த நிலையில் அவருடைய என்ட்ரி ஸ்பெஷலாக காட்டப்பட்டது. அதனால் அவர் தான் இனியாவிற்கு ஜோடி என்று எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படியோ இனியாவிற்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் ஒவ்வொரு வாரமும் ஒரு சேஞ்சஸ் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

Baakiyalakshmi Serial vijay TV

அது போல இனியா டான்ஸ் ஆடியது கூட சில வாரங்களுக்கு முன்பு பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது. பரதநாட்டிய டிரஸ் போட்டுக்கொண்டு புஷ்பா 2 படத்தில் இடம்பெற்ற பீலிங்ஸ் பாட்டுக்கு டான்ஸ் ஆடுவது போன்று வைத்திருந்தனர். இதனால் இந்த சீரியல் இயக்குனர் அல்லது கதா ஆசிரியருக்கு இனியா மீது என்ன கோபம் என்று தெரியவில்லை.

ஏன் தான் இப்படி இனியா என்கிற கேரக்டரை வைத்து ரசிகர்களின் கோபத்தை தூண்டி கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இனியாவது இனியா கேரக்டருக்கு ஒரு சரியான அங்கீகாரத்தை கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+