அளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய பாக்கியலட்சுமி “கோபி”.. ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கேரக்டரில் நடிகர் சதீஷ் நடித்து கொண்டிருக்கிறார். அவர் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற அப்டேட்டை அடிக்கடி கொடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சதீஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் அதிகமான கமெண்ட்களை பெற்று வருகிறது.
விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியல் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் குடும்பங்கள் கொண்டாடும் சீரியலாக இருக்கிறது. இந்த சீரியலில் கதாநாயகி பாக்கியலட்சுமி பல பெண்களின் கஷ்டங்களை பிரதிபலிக்கும் கேரக்டராக இருக்கிறார்.

அதோடு குடும்ப தலைவியாக இருக்கும் பாக்கியலட்சுமி தன்னுடைய மாமியார், கணவர், குழந்தைகளால் அவமானப்படுத்தப்பட்டு புறக்கணிக்கப்பட்டாலும் பிறகு எப்படி தன்னுடைய திறமைகளை வெளிகாட்டி சாதிக்கிறார் என்பதுதான் கதையாக இருக்கிறது. அதே நேரத்தில் இந்த சீரியலின் கதை இணையத்தில் அடிக்கடி ட்ரோல் செய்யப்படுகிறது.

சமீபத்தில் கூட இனியாவின் டான்ஸை ரசிகர்கள் கலாய்த்து ட்ரோல் செய்தனர். அதுபோல இந்த சீரியலில் பாக்கியாவின் கணவர் கோபி இரண்டாவது திருமணம் செய்து விட்டு வீட்டை விட்டு வெளியே போகிறார். அதுபோல பாக்கியாவிடம் வீட்டை விட்டு போக பணத்தை வாங்கிய பிறகும் ஒவ்வொரு மாதமும் ஒரு பிரச்சனையை சொல்லிக் கொண்டு பாக்கியா வீட்டிற்கு டேரா போட வந்து விடுகிறார்.

அதுவும் கோபி மட்டுமல்லாமல் அவருடைய இரண்டாவது மனைவி ராதிகாவும் பாக்கியா வீட்டில் தங்குகிறார். ஆனால் பாக்கியா தியாகி மாதிரி கோபிக்கு பணிவிடைகள் செய்வது குறித்தும் இணையத்தில் கிண்டல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இப்போது இந்த சீரியலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு எட்டு மாதங்கள் கழித்து கதை பயணிப்பது போன்று மாற்றப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்த சீரியலில் கோபியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் சதீஷ் தன்னுடைய வித்தியாசமான புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். அதை பார்த்ததும் ரசிகர்கள் இது இந்த சீரியலில் இனிவரும் காட்சிகளா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

காரணம் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று ஹிண்ட் கொடுக்கும் வகையில் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை சதிஷ் அடிக்கடி வெளியிட்டு வருகிறார். அதுபோல தான் இப்போதும் புகைப்படம் போட்டு இருக்கிறாரா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் அது சதீஷ் ஆரம்பத்தில் நடித்த சீரியல் காட்சிகள்.
அதுபோல ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் தகவலும் தற்போது வெளியாக இருக்கிறது. அதாவது இந்த சீரியல் இன்னும் சில வாரங்களில் முடிவுக்கு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இது குறித்து சதீஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவில் மறைமுகமாக கூறியிருந்தார்.

அதாவது இந்த சீரியல் எப்போது வேண்டும் என்றாலும் முடிவுக்கு வரலாம் ஆனால் இந்த சீரியலில் முடிவுக்கு பிறகு நான் ஆறு மாதமாக எந்த சீரியலிலும் கமிட்டாக மாட்டேன். ரெஸ்ட் எடுக்க போகிறேன். இதுவரைக்கும் அடுத்தடுத்து பல சீரியல்களில் நடித்து விட்டேன்.
அதுவும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கேரக்டர் எனக்கு பெரும் குழப்பத்தை கொடுத்த கேரக்டர். அதனால் அந்த கேரக்டரில் இருந்து விலகி ஒரு ஆறு மாதம் ரெஸ்ட் எடுத்துட்டு தான் நான் எந்த சீரியலில் வேண்டுமென்றாலும் நடிப்பேன் என்று கூறி இருந்தார்.

அதுபோல இந்த சீரியல் தொடர்பான ஒரு சிலரிடம் நாம் பேசியபோது சீரியல் விரைவில் முடிவுக்கு வருவதாக கூறியிருக்கிறார்கள். அதற்காகத்தான் கதை வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள். ஒரு வழியாக ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருந்த விஷயம் நடக்கப்போகிறது. பாக்கியலட்சுமி சீரியல் முடிவடைவது குறித்து உங்களுக்கு சந்தோஷமா? அல்லது வருத்தமா? உங்க கருத்தை சொல்லுங்க பாஸ்.












Click it and Unblock the Notifications