பாக்கியலட்சுமி: இனியாவுக்கு புது ஜோடி.. ஈஸ்வரியிடம் நறுக்குன்னு ராதிகா கேட்ட கேள்வி.. மனம் மாறிய எழில்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் 2025 பிப்ரவரி 13ஆம் தேதிக்கான எபிசோடில் எழில் படத்தின் இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடக்கிறது. அப்போது ராதிகாவிடம் ஈஸ்வரி பிரச்சனை செய்ய, அதற்கு ராதிகா சரியான பதிலடி கொடுத்திருக்கிறார்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ராதிகாவை எதற்காக இந்த பங்க்ஷனுக்கு கூட்டிட்டு வந்த என்று ஈஸ்வரி பாக்கியாவை திட்டி கொண்டிருக்க, அதற்கு பாக்யா இது என்னுடைய மகன் பட ஆடியோ ரிலீஸ், எனக்கு பிடிச்சவங்க.. என்னுடைய மகன் யாரெல்லாம் நல்லா இருக்கணும் என்று நினைக்கிறார்களோ அவங்க கலந்துக்கனும் என்று நினைத்தேன். அதற்காகத்தான் நான் அவங்களை வரவைத்தேன். வேற எந்த விஷயமும் இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

மறுபக்கத்தில் கோபி ராதிகாவிடம் எப்படி இருக்க என்று நலம் விசாரிக்க, அதற்கு ராதிகா நான் நல்லா இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு கோபி இடமும் நலம் விசாரிக்கிறார். அதோடு இது உங்க பையனுடைய ஃபங்ஷன். இதில் அவன் முன்னேறுவதை பார்த்து சந்தோஷப்படுங்க வேற எதுவும் வேண்டாம் என்று சொன்னதும் கோபி சரி என்று அங்கிருந்து கிளம்பி விடுகிறார்கள்.
அடுத்ததாக பாக்கியா ஈஸ்வரி இடம் பேசிக்கொண்டு இருக்கும் இடத்திற்கு ராதிகா வருகிறார். அப்போது ராதிகாவிடம் அவனை மறுபடியும் மயக்கலாம் என்று பார்த்தியா என்று ஈஸ்வரி கோபப்பட, அதற்கு ராதிகா நான் உங்க பையன் எப்படி இருக்கிறார் என்று கேட்டார் அதற்கு தான் பதில் சொன்னேன், அவ்வளவுதான். மறுபடியும் அவர்கூட சேர்ந்து வாழுற எண்ணம் எனக்கு கிடையாது என்று பதிலடி கொடுக்கிறார்.

அடுத்ததாக எழிலிடம் கோபி பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது எழிலுக்கு இதுவரைக்கும் செய்த பிரச்சனைகளுக்கு எல்லாம் கோபி மன்னிப்பு கேட்கிறார். அப்போது ராதிகா வந்துருக்காங்க நீங்க அவங்க கிட்ட பேசினீங்களா? எதற்காக நீங்க டல்லா இருக்கீங்க? என்று பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ஈஸ்வரி அங்கு வருகிறார்.
நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருக்கிறதை பார்க்கும்போது எனக்கு சந்தோஷமா இருக்குது. இன்னைக்கு தான் நீங்க ரெண்டு பேரும் ரொம்ப அதிகமா பேசிட்டு இருக்கீங்க என்று சொல்கிறார். பிறகு இனியா குடும்பத்தினரோடு செல்பி போட்டோ எடுத்துக் கொண்டிருக்கிறார். அப்போது ராதிகா ஃபோனில் பேசிக் கொண்டிருக்கும் போது ராதிகாவையும் கூப்பிட்டு ஃபோட்டோ எடுக்க வர சொல்கிறார்.

ஆனால் ராதிகா நான் உங்களை போட்டோ எடுத்து தரேன் என்று போட்டோ எடுக்கிறார். அடுத்ததாக இனியாவின் பாய் ஃப்ரெண்ட் அந்த ஃபங்ஷனுக்கு வருகிறார். இருவரும் காதலோடு பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதைத்தொடர்ந்து பாக்யா, ராதிகா, செல்வி மூன்று பேரும் சாப்பிட்டுக் கொண்டே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அப்போது செல்வி நீங்க கோபி சாரை விவாகரத்து செஞ்சுட்டீங்க, இனியாவது நல்ல ஒரு நபரை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று சொல்ல, ஐயோ இனி எனக்கு திருமணமே வேண்டாம். பட்ட பாடு போதாதா என்று ராதிகா சொல்கிறார்.
உங்க அக்காவும் அழகாக இருக்கிறாங்க, அவங்களுக்கும் இன்னும் வயசு இருக்கிறது. அவங்களும் விவாகரத்து செஞ்சுட்டாங்க, அவங்களும் இன்னொரு திருமணம் செய்து கொள்ளலாமே என்று சொல்ல, அதற்கு பாக்கியா வேண்டாம் ஏற்கனவே நான் வாழ்க்கையில் ரொம்ப அனுபவிச்சிட்டேன். எனக்கு இனி நானா இருக்கணும் என்பது தான் ஆசை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

பிறகு இருவரும் உன்னுடைய புருஷன்தான் உன்னை ரொம்ப கொடுமை படுத்துறானே நீ அவனை விவாகரத்து செஞ்சிட்டு வேற கல்யாணம் பண்ணிக்கலாமே என்று கேட்டுக் கொண்டிருக்க அதற்கு செல்வி நான் அவரை விவாகரத்து செய்யலாம் ஆனால் நான் அப்படி செஞ்சுட்டா அவரை யாரும் சீண்ட கூட மாட்டாங்க. அவருக்கு எல்லா கெட்ட பழக்கமும் இருக்கு ஆனால் என்ன விட்டா அவருக்கு வேற யாரும் இல்லை என்று சென்டிமெண்டாக பேச அதற்கு ராதிகா செல்வியை திட்டுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications