பிரம்மாண்டமாக நடைபெற்ற விஜய் டிவி சீரியல் நடிகையின் வளைகாப்பு.. குவிந்த சின்னத்திரை பிரபலங்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பாவம் கணேசன் சீரியலில் நடித்த நடிகை நேஹா கர்ப்பமாக இருந்த நிலையில் இன்று அவருக்கு வளைகாப்பு பங்க்ஷன் நடைபெற்று இருக்கிறது. அப்போது சின்னத்திரை பிரபலங்கள் பலரும் அதில் கலந்து கொண்டு அவரை வாழ்த்தி இருக்கிறார்கள்.
சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாணப்பரிசு சீரியலில் மூலமாக பலருக்கும் பரீட்சையமான நேஹா கவுடா அந்த சீரியலில் இருந்து பாதியிலேயே விலகி விட்டார். தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த சீரியலில் இருந்து விலகப் போவதாக தன்னுடைய ரசிகர்களுக்கு instagram மூலமாக இவர் தகவல் தெரிவித்து இருந்தார். இவர் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய ஒரு சில நாட்களில் இவருக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்காக தான் இந்த சீரியலில் இருந்து விலகி உள்ளார் என்று பலரும் கூறி இருந்தனர். அதற்குப் பிறகு இவருக்கு பதிலாக இதே சீரியலில் கன்னிகா நடித்து வந்தார்.

திருமணத்திற்கு பிறகு மீண்டும் ஒரு சில ஆண்டுகள் கழித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாவம் கணேசன் சீரியலில் நடித்து வருகிறார். இப்போது இந்த சீரியல் முடிவடையும் கட்டத்தில் இருப்பதால் அடுத்து இவர் என்ன செய்யப் போகிறாரோ? ? என்று இவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் இவர் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாக கூறி இருந்தார்.
அந்த நேரத்தில் தமிழிலும் பிக் பாஸ் ஒளிபரப்பாக இருந்த நிலையில் அவர் தமிழில் தான் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் கனடா பிக் பாஸில் ஒன்பதாவது சீசனில் ஒரு போட்டியாளராக அறிமுகமானார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பே அவர் அந்த நிகழ்ச்சியை பற்றி நன்றாக தெரிந்து கொண்டுதான் உள்ளே சென்றிருந்தார்.

உள்ளே செல்வதற்கு முன்பே ஒரு பேட்டியில் நான் உள்ளே யாரிடமும் அதிகமாக பேச மாட்டேன் என்னுடைய வேலைகளை பார்த்துக் கொண்டு நான் இருக்க போறேன் என்று சொல்லிக் கொண்டுதான் போயிருந்தார். ஆனால் உள்ளே சென்ற போது வழக்கம் போல இவரும் மற்ற போட்டியாளர்களோடு வாக்குவாதத்தில் சில நேரங்களில் ஈடுபட்டிருந்தார்.
ஆனாலும் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய அளவில் இவர் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவர் கர்ப்பமாக இருந்த செய்தியை அவருடைய ரசிகர்களிடம் அறிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று அவருக்கு வளைகாப்பு பெங்களூரில் வைத்து நடைபெற்று இருக்கிறது.
அந்த நிகழ்ச்சியில் அவருடைய நண்பர்கள் உறவினர்கள் என எல்லோரும் கலந்து கொண்டிருக்கின்றனர். அதோடு சீரியல் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா, ஸ்ரீதேவி அசோக் போன்ற தமிழ் சின்னத்திரை நடிகர்களும் கன்னட நடிகைகளும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவரை வாழ்த்தி இருந்தனர்.


Click it and Unblock the Notifications
