ராதிகா கூட போன பாவத்துக்கு என்னை மாட்டி விட்டுட்டாங்க.. கதறி அழுதும் கண்டுக்கல.. நிரோஷா எமோஷனல்
சென்னை: நடிகை ராதிகாவின் சகோதரியான நடிகை நிரோஷா தன்னுடைய அக்காவால் தான் பட்ட கஷ்டம் குறித்து விளையாட்டுக்காக பேசிய த்ரோபேக் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் தன்னுடைய அக்காவை நம்பி தான் போயிருந்த நிலையில் தான் வேதனையில் துடித்ததாக அதில் பேசி இருக்கிறார்.
நடிகை எம் ஆர் ராதாவின் மகளான ராதிகா மற்றும் நிரோஷா, ராதாரவி என எல்லோருமே சினிமாவில் கொடிகட்டி பறந்து வருகின்றனர். ஆனாலும் தங்களுக்குள் நடத்த கியூட்டான சில மலரும் நினைவுகள் குறித்து நிரோஷா உருக்கமாக பேசியிருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

நிரோஷாவின் அப்பா எம்.ஆர் ராதா ஒரு மிகப்பெரிய நடிகர் என்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும் அவருடன் தாலி பெண்ணுக்கு வேலி எனும் திரைப்படத்தில் நிரோஷா மூன்று வயதிலே எம்.ஆர் ராதாவின் மகளாகவே நடித்திருக்கிறாராம். இவருக்கு ஐந்து வயதில் இருக்கும் போது அவருடைய அப்பா இறந்துவிட்டாராம் .
நடிப்பில் மட்டுமல்லாமல் படிப்பிலும் கெட்டிக்காரியாக இருந்த நிரோஷா 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறாராம். நடிக்க தொடங்குவதற்கு முன்பு நிரோஷாவின் வீட்டில் அவர்களுடைய அண்ணன்கள் இவருக்கு நடிப்பதற்கு அனுமதி கொடுக்காமல் தான் இருந்திருக்கிறார்களாம்.
ஆனால், இயக்குனர் மணிரத்தினம் தான் முதன் முதலாக ராதிகாவிடம் பேசி அவருடைய தங்கையை தன்னுடைய முதல் படத்தில் நடிக்க வைத்துள்ளாராம். நிரோஷாவிற்கு நடிப்பதற்கு ஆசை இருப்பதால் அவர் நடிக்கட்டும் என்று அவருக்கு பச்சைக்கொடி காட்டியது ராதிகாதானாம். முதல் திரைப்படம் ஆன அக்னி நட்சத்திரம் பெரிய அளவில் நிரோஷாவிற்கு வெற்றியை கொடுத்து இருந்ததாம்.
நிரோஷா பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கமலுடன் இவர் நடித்த சூரசம்ஹாரம் என்னும் திரைப்படம் பெரிய அளவில் நிரோஷாவிற்கு சர்ச்சையை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. இந்த திரைப்படத்தில் அதிக அளவில் முத்த காட்சிகள் இடம் பிடித்திருந்தாலும் இந்த காட்சிகளில் எப்படி புதியதாக நடிக்க வந்த நிரோஷா சரி என்று சொல்லிவிட்டார் என்று பலர் கேள்விகளை எழுப்பி இருந்தார்களாம்.
அது மட்டுமல்லாமல் பட வாய்ப்புக்காக ராதிகாவின் சகோதரி இப்படி நடிக்க ஓகே சொல்லி விட்டார்களா?? என்று ராதிகாவின் பெயரும் அந்த நேரத்தில் அடிபட்டுக் கொண்டிருந்ததாம். ஆனால் அதற்குப் பிறகு செந்தூரப்பூவே படத்தில் ராம்கியுடன் குடும்ப பாங்காக இவர் நடித்தது ரசிகர்களை அதிகமாக கவர்ந்து விட்டதாம்.
அதற்குப் பிறகு அந்த திரைப்படத்தில் நடிக்கும் போது ராம்கியை காதலித்து பிறகு திருமணமும் செய்து கொண்டார். அதற்குப் பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த நிரோஷா இப்போது சீரியல்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் ஒரு பேட்டியில் தன்னுடைய அக்கா ராதிகா குறித்து பேசி இருக்கிறார். அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதில் ஒரு முறை என் அக்கா வெளியே கிளம்பி கொண்டிருந்தார். அப்போ நானும் எங்கேயோ போகிறாரே என்று வருகிறேன் என்று சொன்னேன். சரி வா என்று கூட்டிட்டு போனார். அங்கே ஒரு கடையில் ஒரு பெண்ணுக்கு மூக்குத்தி குத்திக்கொண்டு இருந்தார்கள். அப்போ இப்ப இருக்கிற மாதிரி கன் சூட் கிடையாது. ஊசியை வைத்து குத்திக் கொண்டிருந்தார்கள். அந்த பொண்ணு அழுது கொண்டிருந்தது.

அடுத்ததாக அந்த பொண்ணுக்கு முடிந்ததும் எங்க அக்காவை அந்த கடைக்காரர் வாங்க மேடம் நீங்க தான் அடுத்தது என்று சொல்ல, அப்போது டக்கென்று எங்கள் அக்கா நாங்கள் இரண்டு பேரா வந்து இருக்கோம். முதலில் என் தங்கச்சிக்கு மூக்குத்தி குத்துங்க பிறகு நான் குத்துகிறேன் என்று சொல்லிவிட்டார். எனக்கு பக்கென்று ஆகிவிட்டது. காரணம் எனக்கு மூக்கு குத்துற ஐடியாவே கிடையாது. நான் அப்போ வேண்டாம் அக்கா என்று சொன்னேன்.
ஆனால் எங்க அக்கா மூக்து குத்திக்கனும் என்று கராராக சொல்ல மறுப்பு சொல்ல முடியவில்லை. பிறகு எனக்கு மூக்கு குத்தும் போது நான் பட்ட வேதனையை பார்த்து அவர் மூக்கு குத்தாமல் எனக்கு மட்டும் மூக்கு குத்துனது போதும் என்று சொல்லி அதற்காக பில் பே பண்ணிட்டு என்னை கூட்டிட்டு வந்து விட்டார் என்று சிரித்தபடியே அவரை நம்பி போனதால்.. நான் பட்ட வேதனை இருக்கே என்று நிரோஷா பேசி இருக்கிறார். அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications