எம்ஜிஆரோடு மட்டும் நடிக்காத காரணம்..!? பல வருடம் கழித்து மனம் திறந்த நடிகை நித்யா ரவீந்தர்
சென்னை: பல முன்னணி நடிகர்களோடு நடித்த நடிகை நித்தியா தான் எம்ஜிஆரோடு ஒரு முறை கூட நடிக்கவில்லை என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.
பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிறகு கதாநாயகியாகவும் நடித்து தற்போது குணச்சித்திர வேடங்களில் சீரியலில் நித்தியா நடித்து வருகிறார்
சிவாஜி கணேசன் உடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த நித்யா ரவீந்தர் தான் எம்ஜிஆர் படத்தில் நடிக்க ஆசைப்பட்டு அது அமையவில்லை என்று கூறி இருக்கிறார்.

சன் டிவி, விஜய் டிவி என முன்னணி டிவி சேனல்களில் சீரியல்களில் முக்கியமான கேரக்டரில் நடிகை நித்யா ரவீந்தர் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இவர் அவருடைய அப்பாவின் நாடக கம்பெனியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிறகு ஒரு பாடகியாக வேண்டும் என்று ஆசையோடு இருந்த இவர் பல திரைப்படங்களில் குழந்தையாக அறிமுகமாகி பிறகு கதாநாயகியாக பல வருடங்கள் தொடர்ந்து நான்கு மொழிகளில் நடித்துக் கொண்டிருந்தார்.
அதற்கு பிறகு திருமணத்திற்கு பிறகு சிறிது பிரேக் எடுத்த நடிகை நித்தியா மீண்டும் சின்னத்திரை, வெள்ளித்திரையில் கலக்கி வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தான் எம்ஜிஆர் மீது தனக்கு இருக்கும் மரியாதை மற்றும் அவரோடு ஒரு திரைப்படத்தில் கூட நடிக்க முடியாமல் ஆகிவிட்டது என்ற வருத்தத்தையும் தெரிவித்து இருக்கிறார்.
நித்யா ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் டப்பிங் கலைஞராகவும் இருந்து வருகிறார். குறிப்பாக இவர் நடிகை நளினிக்கு அதிகமாக குரல் கொடுத்து கொண்டிருப்பவர். இவர் சீரியலாக இருந்தாலும் சரி திரைப்படங்களாக இருந்தாலும் சரி நளினியின் வாய் அசைவு வைத்து அவர் என்ன பேசி இருப்பார் என்பது புரிந்து நான் அவருக்கு பேசி விடுவேன் என்றும் கூறியிருக்கிறார்.
நித்யா ரவீந்தர் அறிமுகமானது தமிழில் மாரியம்மன் திருவிழா என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான். அதைத் தொடர்ந்து அவர் பல மொழிகளிலும் கிட்டத்தட்ட 75 க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதில் நடிகர் சிவாஜி கணேசன் உடன் தீர்ப்பு என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து முன்னணி கதாநாயகர்கள் பலரோடு நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் நடிகர் எம் ஜி ஆர் என்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும் நான் அவருடைய பெயரைக் கூட சார் என்று சொல்லாமல் சொல்ல மாட்டேன். அந்த அளவிற்கு அவர் மீது மரியாதை இருக்கிறது ஆனால் நான் அவருடைய திரைப்படத்தில் நடிப்பதற்கு தான் எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது. அது இப்ப நினைத்தாலும் எனக்கு கஷ்டமாக இருக்கிறது.
அவருடைய திரைப்படத்தில் நான் சும்மாவாக வந்துட்டு போயிருந்தா கூட நான் ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பேன். ஆனால் எனக்கு அந்த கொடுப்பினை கிடைக்கவில்லை. இப்போதும் நான் யாரோடு அதிகமாக நடிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்று கேட்டால் எம்ஜிஆர் தான் சொல்வேன். அந்த அளவிற்கு அவருடைய நடிப்பு, கேரக்டர் எல்லாமே எனக்கு பிடிக்கும் ஆனால் நடிக்க முடியாமல் ஆகிவிட்டது என்ற
தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications