எட்டு வருட காதல்.. மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு நித்யா கூறிய ரகசியம்..பலருக்கும் தேவையானது தான்
வாழ்க்கை முழுக்க இருக்கும் வாழ்க்கை துணை இடம் ஈகோ பார்க்க கூடாது என நடிகை நித்யா ரவீந்தர் கூறியிருக்கிறார்.
சென்னை: நடிகை நித்யா ரவீந்தர் வெள்ளி திரையில் அறிமுகமாகி தற்போது சின்னத்திரையில் முக்கியமான கேரக்டர்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் திருமண வாழ்க்கை பந்தம் சிறப்பாக அமைய என்னவெல்லாம் செய்யலாம் என தற்போது சில யோசனைகளை நித்யா ரவீந்திரன் பகிர்ந்து பகிர்ந்து இருக்கிறார்.
வெளியே செல்லும் இடங்களிலும் வேலை பார்க்கும் இடங்களிலும் யார் யாரிடமோ மன்னிப்பு கேட்கிறோம் ஆனால் நம்முடைய வாழ்க்கை முழுக்க தொடரும் வாழ்க்கை துணை இடம் மன்னிப்பு கேட்பதற்கு மட்டும் தயக்கம் காட்டுவது எதற்கு என்று கேள்வி கேட்டிருக்கிறார்.

புரிதல் இல்லாத வாழ்க்கை
தற்போதைய சூழ்நிலையில் சாதாரண மக்களாக இருந்தாலும் சரி பிரபலமாக இருந்தாலும் சரி திருமண வாழ்க்கையில் புரிதல்கள் இல்லாமல் பலர் நீதிமன்றங்களை நாடி விவாகரத்துக்காக கியூவில் நிற்கின்றனர். காதலிக்கும் போது இருக்கும் பாசமும் நேசமும் கல்யாண வாழ்க்கையில் இருப்பதில்லை. பலரும் ஒருவரை மாற்றி ஒருவர் குறை கூறிக் கொண்டிருக்கின்றார்கள். தவிர வாழ்க்கையில் யாரும் விட்டுக்கொடுத்து செல்வதற்கு தயாராக இல்லை இதனால் தான் பலருடைய திருமண வாழ்க்கை நினைத்த மாதிரி இல்லாமல் ஏமாற்றம் அடைந்து விடுகிறது.

முதல் அறிமுகம்
இந்த நிலையில் வெள்ளித்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதற்குப் பிறகு கதாநாயகியாக பல திரைப்படங்களில் நடித்து தற்போது சின்னத்திரையில் அம்மா கேரக்டரில் அதிகமாக நடித்து வரும் நடிகை நித்யா ரவீந்தர் தற்போது தன்னுடைய காதல் திருமண வாழ்க்கையை பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார். இது பலருக்கும் தேவையான விஷயமாகத்தான் இருக்கிறது என்று இந்த வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். அந்த வீடியோவில் நடிகை நித்தியா ரவீந்தர் 16 வயதாக இருக்கும் போது, அவருடைய கணவர் ரவீந்தரை முதல் முறையாக பார்த்திருக்கிறார். அவருடைய கணவரும் திரைப்பட ஒளிப்பதிவாளராக இருந்திருக்கிறார். இருவரும் மயில் பீலி என்ற மலையாள திரைப்படங்களில் ஒன்றாக வேலை செய்து இருக்கின்றனர். அப்போது எதார்த்தமாகத்தான் பேசி பழகி இருக்கின்றனர்.

8 வருட காதல்
திரைப்படத்தில் நடிகை நித்யா ரவீந்தர் நடிக்கும் போது அவருடைய அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்திருக்கிறது. காலில் அடிபட்டு இருந்ததால் அவரை மருத்துவமனையில் சேர்த்து இருந்திருக்கிறார்கள். அப்போது நித்தியா படபிடிப்பில் பிஸியாக இருந்ததால் ரவீந்தர் தான் அடிக்கடி நித்யாவின் அம்மாவை சென்று பார்த்து வருவாராம். அப்போது தன்னுடைய அம்மாவின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்று நித்யா ரவீந்திரரிடம் கேட்டு தெரிந்து கொள்வார். இப்படித்தான் இவர்களுடைய பழக்கம் தொடங்கி இருக்கிறது. பின்பு இவர்களுக்குள் காதல் ஏற்பட்டு 8 வருடங்கள் இவர்கள் காதலித்து வந்திருக்கின்றனர்.

அனுபவம் தான் காரணம்
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நித்யா ரவீந்தர் பின்பு கதாநாயகியாக பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அந்த நேரத்தில் தான் இவர்களுடைய திருமணம் நடைபெற்று இருக்கிறது. எட்டு வருடங்களாக இவர்கள் காதலித்து பின்பு இரு வீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து இருக்கின்றனர். இவர்களுக்கு தற்போது ஜனனி என்ற மகளும், அர்ஜுன் என்ற மகனும் இருக்கின்றனர். இந்த நிலையில் நடிகை நித்தியா மற்றும் அவருடைய கணவர் ரவீந்தர் இருவரும் பேட்டி ஒன்று கொடுத்திருக்கின்றனர். அதில் எங்கள் இருவருடைய திருமண வாழ்க்கை இவ்வளவு மகிழ்ச்சியாக சென்று கொண்டிருப்பதற்கு காரணம் எங்களுடைய வாழ்க்கையில் கிடைத்த அனுபவம் தான் காரணம் என்று கூறியிருக்கிறார்.

ஈகோ வேண்டாமே
நாம எத்தனையோ இடங்களுக்கு சூட்டிங் போறோம். வெளி இடங்களுக்கு போகிறோம். அங்கே எல்லாம் முன் பின் தெரியாதவர்கள் எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போறோம். நம்மளுடைய கோபம் தாபங்களை அவர்களிடம் நாம் வெளிப்படுத்தியது இல்லை. சில நேரங்களில் சிலர் மீது நமக்கு கோபம் இருந்தாலும், அவர்கள் முன்பு நாம் சிரிச்சுகிட்டு போயிருவோம். அப்படியெல்லாம் இருக்கும்போது நம்ம வாழ்க்கை நம்ம கூட ட்ராவல் பண்றவங்க கூட இருக்கிற நம்ம ஹஸ்பண்டுக்கு நம்ம விட்டுக் கொடுத்து போறதோ அனுசரிச்சுட்டு போறதும் பெரிய தப்பு ஒன்னும் இல்ல. அங்க ஒரு ஈகோ பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று எனக்கு அந்த வயசிலே தோணுது என்று கூறி இருக்கிறார்.

அது வேறு இது வேறு
நான் வெளியே பார்க்கும் வேலைக்கு கிடைக்கும் மரியாதையை நாம் வீட்டிற்குள் தேடக்கூடாது. அதுதான் நமக்கு பெரிய பிரச்சனை. செருப்பை மாட்டிக் கொண்டு வெளியே சென்று விட்டால் அது வேறு, வீட்டிற்குள் வந்து செருப்பை கழட்டி விட்டால் அது வேறு, நாம் வீட்டில் நாமாகத்தான் இருக்க வேண்டும். வெளியே நமக்கு வேலை செய்ய பலர் இருந்தாலும் வீட்டில் நம்ம பாசத்தால் மட்டும்தான் அனைவரிடமும
பழக வேண்டும். வெளியே கிடைக்கும் மரியாதையையும் வேலையையும் வீட்டிற்குள் எதிர்பார்க்கக் கூடாது என்று கூறியிருக்கிறார்.

மகிழ்ச்சிக்கான ரகசியம்
நடிகை நித்யா ரவிந்தருக்கு 16 வயதில் காதல் ஏற்பட்டு 23 வயதில் திருமணம் செய்து கொண்டாலும் இப்ப வரைக்கும் எங்களுடைய திருமண வாழ்க்கையில் நாங்கள் இதைத்தான் பின்பற்றி வருகிறோம் என்று கூறி இருக்கிறார். இந்த நிலையில் தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நம்ம வீட்டு பொண்ணு எனும் சீரியலில் விசாலாட்சி ஆகவும், சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியலில் கதாநாயகன் யுவாவின் அம்மாவாகவும் இவர் நடித்து வருகிறார். எந்த சீரியலில் இவர் நடித்தாலும் அந்த சீரியலில் சாந்த சொரூபமாக இவருடைய முகம் ரசிகர்களின் மத்தியில் அதிகமாக பிடித்து போய்விடுகிறது. இந்த நிலையில் இவருடைய நிஜ வாழ்க்கையில் மகிழ்ச்சியின் ரகசியத்தை பலர் பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications