அங்க பார்க்காதீங்க.. பட்டாம்பூச்சியைப் பாருங்க.. ஸ்வீட் இம்சை செய்யும் நிவிஷா!
சென்னை: பட்டாம் பூச்சி பறக்கும் புடவையில் சிலிர்க்க வைக்கும் போஸ் கொடுத்துள்ளார் நிவிஷா.
பார்க்கும்போதே மனதிற்குள் பட்டாம்பூச்சியை பறக்கவிட்டு குழந்தைத்தனமாக சிரிக்கும் நிவிஷாவின் புது போட்டோஸ்கள் அவருடைய ரசிகர்களால் இன்ஸ்டாகிராமில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
வில்லத்தனமாக நடித்தாலும் கூட, ஜில்லென மனசுக்குள் புகுந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி விடுவார் நிவிஷா.

ரசிகர்கள் கூட்டம்
தற்போது சீரியல் நடிகைகளுக்கும் சினிமா நடிகைகள் அளவுக்கு ரசிகர்கள் இருக்கின்றனர். அதுவும் சீரியலை விட்டு வெளியேறினாலும் அவர்களை விடாமல் துரத்தும் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது .அதுபோலத்தான் தற்போது சீரியல்களில் இருந்து இரண்டு வருடமாக ஒதுங்கி இருக்கும் நிவிஷாவிற்கும் அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர் .

அதிக ரசிகர்கள்
அதுவும் சீரியலை தாண்டி பல மடங்கு சமூக வலைத்தளத்தில் இவருக்கு ரசிகர்கள் உருவாகி இருக்கின்றனர் .இவர் அடித்தளமிட்டது என்னவோ சீரியலில் தான். ஆனால் தற்போது காலூன்றி இருப்பது இன்ஸ்டாகிராம் ,டுவிட்டரில் தான். பொதுவாக சினிமா ஆக இருந்தாலும் சரி சீரியலாக இருந்தாலும் சரி ஒருவர் நடிக்கும் கேரக்டரிலே அவர்களுடைய கேரக்டரையும் ரசிகர்கள் இமேஜின் செய்துவிடுகிறார்கள்.

மிரட்டும் கண்கள்
ஆனால் கண்ணாலே மிரட்டும் வில்லத்தனத்தை செய்து நெகட்டிவ் ரோலில் நடித்துக் கொண்டிருந்தவருக்கு இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களா என்பது அதிசயம் தான் .அந்த அளவிற்கு இவருக்காக ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.இவர் இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட்டதும் இவருடைய பதிலைக் கூட எதிர்பாராமல் இவருக்காக கமெண்டுகளை கொட்டி வருகின்றனர்.

ரசிகர்கள் வைத்த அன்பு
ரசிகர்கள் இவர் மீது வைத்த அன்பினை பார்த்துதான் இவர் இனி நெகட்டிவ் ரோலில் நடிக்க மாட்டேன். சமூக வலைத்தளத்தில் எனக்கு இருக்கும் ரசிகர்கள் என்னை திட்டுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த மாதிரி கேரக்டரில் நடித்து பழகியதால் எனது மனதிற்குள்ளும் அந்த மாதிரியே சிந்தனைகள் ஓடிக்கொண்டிருக்கிறது. நடிப்பை விட்டு வெளியே வந்தாலும் அந்த சிச்சுவேஷனுக்குள்ளே இருக்கிறேன்.

இனி வில்லத்தனம் வேண்டாம்
அதனால் இனி நெகட்டிவ் ரோலில் நடிக்க மாட்டேன் என கடைசியாக நடித்துக்கொண்டு இருந்த ஈரமான ரோஜாவே சீரியலில் இருந்து வெளியாகி 2 வருடம் ஆகி விட்டாலும் தற்போது புதிய சீரியலில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகி இருக்கும் நல்ல செய்தியையும் ரசிகர்களுக்காக லைவில் சொல்லியிருக்கிறார். இவரை எப்போது மீண்டும் சினிமாவில் பார்க்கலாம் என இவருடைய ரசிகர்கள் காத்து இருந்தாலும் இவர் சமீபகாலமாகவே இன்ஸ்டாகிராமில் போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களுக்கு தரிசனத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

மனக் கஷ்டம்
கதாநாயகியாக நடிக்கும் சீரியல் தற்போது சூட்டிங் ஆரம்பித்த வேலையில் மீண்டும் ஊரடங்கு வந்துவிட்டதால் சிறிது மன கஷ்டத்தில் இருந்தாலும் ரசிகர்களின் மனம் கோணாமல் இவர் பார்த்து போட்டோக்களை எடுத்து வைத்திருக்கிறார் .அதுவும் இவருக்கு அதிகம் பிடித்த புடவையில் விதவிதமாக போட்டோஸ்கள் வெளியிடுவது இவருடைய கடமையாக இருந்து வருகிறது .

பின்னி எடுக்கும் அழகு
எப்போதுமே பின்னழகு முன்னழகு என பார்த்துப் பார்த்து போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது பட்டாம்பூச்சி புடவையில் பார்க்கும் ரசிகர்களின் மனதை பறக்க விட்டிருக்கிறார் .அதுவும் திரும்பி வெட்கத்தோடு சிரித்தபடி தன்னுடைய முழு முதுகையும் காற்று வாங்க விட்டிருப்பதை காற்றுவாக்கில் காட்டி நிற்கிறார் .இதனை பார்த்ததும் சொக்கிப் போன ரசிகர்கள் கமெண்டுகளில் கவிதைகளை கொட்டி வருகின்றனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications