எதிர்நீச்சல் 2 கதாநாயகி இனி இவர்தான்.. சீரியல் வெளியாகும் முன்பே அடுத்தடுத்த மாற்றம்
சென்னை: சன் டிவியில் இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் வெளியான எதிர்நீச்சல் சீரியல் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. அந்த சீரியலின் முடிவுக்கு பிறகு அதைத் தொடர்ந்து இரண்டாவது சீசன் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. அதற்கான சூட்டிங் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதில் கதாநாயகியாக யார் நடிக்க போகிறார் என்று அப்டேட் வெளியாகியிருக்கிறது.
சின்னத்திரையில் ஒரு சில சீரியல்கள் ரசிகர்களின் மத்தியில் தனி வரவேற்பு பெற்று விடும். அந்த வரிசையில் சில மாதங்களுக்கு முன்பு சன் டிவியில் முடிவடைந்த எதிர்நீச்சல் சீரியலும் இடம்பெற்று இருந்தது. இந்த சீரியலை இளைஞர்கள் முதல் பெண்கள் வரை பலரும் பார்த்து ஆதரவு கொடுத்தனர். ஆனால் சீரியலில் ஆரம்பத்தில் இருந்த கதையின் வேகம் சில மாதங்களுக்கு முன்பு குறைய தொடங்கி விட்டது.

இதனால் ரசிகர்கள் மத்தியிலும் இந்த சீரியல் குறித்து அதிகமான விமர்சனங்கள் எழுந்து வந்தன.
அந்த நேரத்தில் சீரியல் திடீரென்று முடிவுக்கு வந்துவிட்டது. இது இந்த சீரியலின் விவரமான ரசிகர்களின் மத்தியில் அடர்த்தியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து இயக்குனர் திருச்செல்வம் இரண்டாவது சீசனை விரைவில் தொடங்க வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் வைத்தனர். அதன்படியே இப்போது இரண்டாவது சீசனும் தொடங்கப்போகிறது
ஆனால் முதல் சீசனில் நடித்த பல நடிகர்கள் இந்த சீசனில் இல்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே திருச்செல்வம் இயக்கும் சீரியல்களில் புதியதாக தான் கதாநாயகிகளை தேர்வு செய்வார். அந்த வரிசையில் இந்த எதிர்நீச்சல் 2 சீரியலிலும் புதியதாக நடிகை பார்வதி தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பார்வதி சன் டிவியில் ஆரம்பத்தில் விஜேவாக இருந்தார். அதற்கு பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பான புது புது அர்த்தங்கள் சீரியலில் நடிகை தேவயானிக்கு மருமகளாக கதாநாயகியாக அறிமுகமானார்.

பார்வதி "புது புது அர்த்தங்கள்" சீரியல் மூலம் நல்ல வரவேற்பு பெற்று இருந்தார். ஆனால் இந்த சீரியல் முடிவடைந்த பிறகு ஒரு சில சீரியல்களில் கெஸ்ட் ஆக மட்டும் கலந்து கொண்டு இருக்கிறார்.
அவர் தான் இப்போது எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே முதல் பாகத்தில் ஜனனி கேரக்டரில் நடித்த மதுமிதா சீரியலில் இருந்து விலகப் போகிறேன் என்று சில மாதங்களுக்கு முன்பு ஒரு போஸ்ட் வெளியிட்டு இருந்தார்.
அதில், ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. எனது அன்பான ரசிகர்களுக்கு இதயம் நிறைந்த நன்றியுடன்.. சில காரணங்களால் நான் இனி எதிர்நீச்சல் பகுதி 2வில் பாகமாக இருக்க மாட்டேன் என்பதை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த பயணம் முழுவதும் நீங்கள் என் மீது பொழிந்த அளப்பரிய அன்பு மற்றும் ஆதரவுக்காக உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். உங்கள் அசைக்க முடியாத ஊக்கம் எனக்கு உலகத்தை உணர்த்தியது.

மேலும் நாங்கள் ஒன்றாக சேர்ந்து செய்த அனைத்து நிகழ்வுகளுக்கும் நீங்கள் எனக்கு சப்போர்ட் செய்தீர்கள். நான் புதிய ஒரு அற்புதமான வாய்ப்பில் அடி எடுத்து வைக்கும் வரை அதற்கு நீங்கள் அன்பும் ஆதரவையும் காட்டுவீர்கள் என்று நம்புகிறேன் என்று கூறியிருந்தார். காரணம் ஜீ தமிழில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் சீரியலில் மதுமிதா நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

அதனால் தான் எதிர்நீச்சல் 2 சீரியலில் இருந்து விலகி விட்டார் என்றும் கூறப்பட்டது. இப்படியான நிலையில் இந்த சீரியலில் குழந்தையாக இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலம் அடைந்த தாரா கேரக்டரில் நடித்த குழந்தையும் இந்த சீரியலில் இல்லை என்று கூறியிருக்கிறார். ஆனால் பார்வதி நடிகை ஹரிப்பிரியா மற்றும் பிரியதர்ஷினியோடு எடுத்த புகைப்படங்கள் சில நாட்களுக்கு முன்பு ஹரிப்பிரியா தன்னுடைய instagram ஸ்டோரியில் பகிர்ந்து இருந்தார். இதனால் ஹரிப்பிரியா மற்றும் பிரியதர்ஷினி இருவரும் இந்த சீரியலில் நடிக்கிறார்களா? அவர்களோடு பார்வதி சேர்ந்து நடிக்கிறாரா? என்றும் கேள்விகள் எழுகிறது.












Click it and Unblock the Notifications