நடிகை பார்வதி நாயருக்கு டும் டும் டும்.. மாப்பிள்ளை இந்த பிரபலம் தானா? எளிமையான என்கேஜ்மென்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் அஜித், விஜய் போன்ற பல முன்னணி நடிகர்களோடு நடித்து பிரபலம் அடைந்த நடிகை பார்வதி நாயரின் திருமண நிச்சயதார்த்தம் குறித்த புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. பார்வதி நாயருக்கு அவருடைய ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் பலருக்கும் நடிகை பார்வதி நாயர் பரிச்சயமான நபர் தான். மலையாளத்தில் பல படங்களில் நடித்திருந்தாலும் அதைத் தொடர்ந்து கன்னடம், தமிழ் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு ரவி மோகன் (ஜெயம் ரவி) நடிப்பில் வெளியான நிமிர்ந்து நில் படத்தின் மூலம் தமிழில் பார்வதி நாயர் அறிமுகமானார்.

parvati nair vijay tv

அதைத்தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு நடிகர் அஜித் நடிப்பில் என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக கெத்தான கேரக்டரில் பார்வதி நாயர் நடித்திருந்தார். என்னை அறிந்தால் படத்திற்காக பார்வதி நாயருக்கு துணை நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதும் நாமினேட் செய்யப்பட்டது.

அதுபோல தமிழில் உத்தமவில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்கிட்ட மோதாதே, நிமிர், சீதக்காதி போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற படத்தில் ஜூனியர் ஷார்ட்ஸ் ஆபிஸர் ரோலில் நடித்து இருந்தார்.

அதுபோல பார்வதி நாயர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் என்றாலும் அவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே அபுதாபியில் தான். அவருடைய தந்தை துபாயில் தொழிலதிபராக இருக்கிறார். அதுபோல பார்வதி நாயரின் அம்மா கல்லூரி பேராசிரியர். இவரின் இளைய சகோதரர் ஷங்கர் ஐபிஎல் அணியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் முக்கிய பொறுப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

parvati nair vijay tv

பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது அபுதாபியில் 15 வயதிலேயே மாடலிங் துறையில் பார்வதி காலடி எடுத்து வைக்க தொடங்கி விட்டார். அதைத்தொடர்ந்து கல்லூரியில் படிக்கும் போது தீவிரமாக மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்த பார்வதி கர்நாடகாவில் "மைசூர் சாண்டல் சோப்பின்" அம்பாசிடராக இருந்தார். அதோடு நேவி குயில் என்கிற அழகி போட்டியில் டைட்டில் வென்றிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் மிஸ் கர்நாடக அழகி போட்டியிலும் கலந்து கொண்டு முதல் பரிசை வென்றிருக்கிறார். பெமிலா மிஸ் இந்தியா பெஜண்டாக கலந்து கொண்டு ஸ்டேட் லெவலில் தேர்வாகி இருக்கிறார். மாடலிங், நடிப்பு என்று அசத்தி கொண்டிருக்கும் பார்வதி நாயர் சமூக வலைத்தளத்திலும் செம ஆக்டிவாக இருக்கிறார். சமீபத்தில் இவருக்கு எங்கேஜ்மென்ட் நடைபெற்று இருக்கிறது.

parvati nair vijay tv

அப்போது எடுத்த புகைப்படங்களை பார்வதி சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார். அதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். சென்னையை சார்ந்த தொழில் அதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவரோடு தான் இவர்களின் நிச்சயதார்த்தம் முடிவடைந்து இருக்கும் நிலையில் இவர்களுடைய திருமண தேதி குறித்து விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+