நடிகர் விஜயகுமார் வீட்டில் அடுத்த கொண்டாட்டம்.. நடிகை ப்ரீத்தா பகிர்ந்த மகிழ்ச்சி செய்தி
சென்னை: நடிகர் விஜயகுமாரின் மகளான நடிகை பிரீத்தா தன்னுடைய கணவர் இயக்குனர் ஹரி உடன் சேர்ந்து டப்பிங் ஸ்டுடியோ பிசினஸ் நடத்தி வரும் நிலையில் தற்போது மூன்றாவது ஸ்டுடியோ திறக்கப்பட்ட நிலையில் இது குறித்த புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் கமர்சியல் இயக்குனர் லிஸ்டில் இயக்குனர் ஹரிக்கு தனி இடம் இருக்கிறது. இவருக்கு சிறுவயதில் இருந்தே சினிமாவின் மீது இருந்த ஆர்வம் காரணமாகவே இவர் முதலில் இயக்குனர் செந்தில்நாதன், ஜீவபாலன், அமீர்ஜான், நாசர் உட்பட பல பேருடன் உதவி இயக்குனராக வேலை பார்த்து பிறகு இயக்குனராக மாறி இருக்கிறார். அதுபோல இவர் இயக்கிய பல திரைப்படங்கள் மாபெரும் வெற்றி அடைந்தது.

ஆனால் சமீப காலமாக அவர் இயக்கிய ஒரு சில திரைப்படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. அதனாலையே சில வருடங்களில் இடைவேளைக்குப் பிறகு யானை படத்தின் மூலம் மீண்டும் இயக்குனராக களம் இறங்கி இருந்தார். இந்த படம் ஹரியின் மச்சான் அதாவது அவருடைய மனைவி பிரித்தாவின் அண்ணனான நடிகர் அருண் விஜய் தான் ஹீரோவாக நடித்திருந்தார்.

தற்போது விஷால் நடிக்கும் 34 ஆவது படத்தை இயக்குனர் ஹரி தான் இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். அதுபோல ஹோலிவுட் உலகில் வரிசையாக விக்ரம் சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்களை வைத்து கமர்சியல் வெற்றி படங்களை கொடுத்திருந்தார். அதிலும் தமிழில் நடிகர் பிரசாந்தை வைத்து இயக்கிய "தமிழ்" என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார்.

அதற்கு பிறகு பெரிய அளவில் ஹரியை பிரபலப்படுத்தியது விக்ரம் நடித்த "சாமி" என்று திரைப்படம் தான். அது போல அவர் இயக்கத்தில் கோவில், அருள், ஐயா, தாமிரபரணி, வேல், சேவல், சிங்கம், வேங்கை என்று பல திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனாலேயே இவர் நடிகர் சூர்யாவின் பேவரைட் இயக்குனர்களில் ஒருவராக மாறி இருந்தார். அதே நேரத்தில் துணை இயக்குனராக இருந்தபோது விஜயகுமாரின் மகள் பிரீத்தாவை காதலிக்க துவங்கிய ஹரி இயக்குனரான பின்னர் அவரையே திருமணம் செய்து கொண்டார்.

இந்த நட்சத்திர ஜோடிக்கு மூன்று மகன்கள் இருக்கின்றனர். முதல் மகன் சமீபத்தில் ஹம் என்ற குறும்படம் ஒன்றை இயக்கி நடித்து இருந்தார். இந்த படத்தின் மூலமாக தந்தையை போலவே அவருடைய மகன் ஸ்ரீராம் ஹரி இயக்குனராகவும், அம்மா மாதிரி நடிப்பிலும் அசத்தியிருக்கிறார். அதேபோல தன்னுடைய குழந்தைகள் வளரும் வரை குடும்பத்தை கவனித்து வந்த நடிகை பிரீத்தா மகன்கள் வளர்ந்து விட்ட பிறகு கடந்த ஒரு வருடமாக டப்பிங் ஸ்டுடியோ ஒன்றை துவங்கி அதை நிர்வகித்து கவனித்து வருகிறார்.
\

ஏற்கனவே இரண்டு ஸ்டுடியோ நடத்தி வந்த பிரீத்தா இப்போது மூன்றாவது ஸ்டுடியோவை திறந்து வைத்திருக்கிறார். இது குறித்த புகைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் தன்னுடைய சகோதரிக்காக நடிகை ஸ்ரீதேவியும் கலந்து கொண்டு தன்னுடைய வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அதுபோல அவருடைய தந்தை விஜயகுமாரும் அந்த பங்க்ஷனில் கலந்து கொண்டு ஆசீர்வதித்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications